திருமண வரவேற்பில் பரிதாபமாக உயிரிழந்த மணப்பெண்.. நெஞ்சை உலுக்கும் சம்பவம்!!

258

கேரளா..

கேரளா மாநிலம் மலப்புரத்தில் திருமண வரவேற்பு நிகழ்ச்சியின் போது 19 வயது மணப்பெண் திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

கேரளா மாநிலம் மலப்புரம் மாவட்டத்தில் உள்ள பதாயிக்கர பகுதியை சேர்ந்த முஸ்தபா, சீனத் என்ற தம்பதியரின் மகள் 19 வயதான பாத்திமா பதூல். இவருக்கும் மூர்க்க நாடு என்னும் பகுதியை சேர்ந்த இளைஞர் ஒருவருக் கடந்த சனிக்கிழமை திருமணம் செய்து வைப்பதாக முடிவு செய்யப்பட்டிருந்தது.

இந்த நிலையில் திருமணத்தின் முந்தைய நாள் மணப்பெண்ணின் வீட்டில் வைத்து இஸ்லாமிய மத முறைப்படி மயிலாஞ்சி கல்யாணம் மற்றும் வரவேற்பு நிகழ்ச்சியும் நடைபெற்றது.

புத்தம் புது ஆடையுடன் புதிய வாழ்க்கையில் காலடி எடுத்து வைக்கும் சந்தோஷத்துடன் குடும்பத்தாருடன் போட்டோ சூட் எடுத்துக் கொண்டிருந்தார் மணப்பெண் பாத்திமா. அப்போது திடீரென அவர் மயங்கி விழுந்துள்ளார்.

இதை அடுத்து பயந்து போன வீட்டார் உடனடியாக மணப்பெண்ணை அருகில் இருந்த மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அங்கு அவருக்கு மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டது. மருத்துவ சோதனைகள் நடைபெற்று கொண்டிருந்த போது அவர் மயக்கத்திலேயே உயிரிழந்தார்.

இதுகுறித்து அந்தப் பெண்ணை பரிசோதனை செய்த மருத்துவர் கூறுகையில் சத்தம் இல்லாத நெஞ்சு வலியால்தான் அந்தப் பெண் உயிரிழந்ததாக தெரிவித்தார். இதையடுத்து அந்த இளம் பெண்ணின் உடல் மலப்புரம் மஞ்சேரி அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்கு கொண்டு செல்லப்பட்டது.

அங்கு நடத்தப்பட்ட பரிசோதனையில் நெஞ்சுவலிதான் காரணம் என உறுதியாக சொல்ல முடியாது எனவும் முழுமையான பிரேத பரிசோதனை அறிக்கை மற்றும் போரென்ஸிக் ரிப்போர்ட் வந்ததற்கு பின்தான் மரணத்தின் காரணம் என்ன என்பது தெரியவரும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.