17 வயதுச் சிறுவனுடன் காதல்… வீட்டை விட்டு வெளியேறிய பெண்ணுக்கு நேர்ந்த பரிதாபம்!!

408

ஓசூரில்..

ஓசூர் அருகே 17 வயது சிறுவனுடன் வீட்டை விட்டு வெளியேறி குடும்பம் நடத்தி வந்த பெண்ணை உறவினர்கள் மீட்டனர். ஓசூர் அருகே உள்ள பெரிய மேனகரம் கிராமத்தை சேர்ந்தவர் கூலித்தொழிலாளி எல்லப்பா.

இவரால் வாய் பேச முடியாது. இவரது மகன் கார்த்தி 17 (பெயர் மாற்றப்பட்டுள்ளது). அந்த கிராமத்தை சேர்ந்த சீனிவாசன் என்பவர் விவசாய தோட்டத்தில் கூலி வேலை செய்து வருகிறார்.

இந்த சிறுவனுக்கும் அதே கிராமத்தை சேர்ந்த ராமகிருஷ்ண ரெட்டி என்பவரது மனைவி அர்ச்சனா (27) என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. பின்னர் அது நாளடைவில் கள்ளக்காதலாக மாறியுள்ளது.

ஒரு கட்டத்தில் வீட்டிலிருந்த நகைகள் மற்றும் பணத்தை எடுத்து கொண்ட அர்ச்சனா கணவர் மற்றும் பிள்ளைகளை விட்டு விட்டு, சிறுவனோடு பெங்களூர் சென்றுள்ளார். அங்குள்ள போதனஹள்ளி என்ற இடத்தில் வாடகைக்கு வீடு எடுத்து இருவரும் தங்கி வாழ்ந்து வந்துள்ளனர்.

அர்ச்சனாவுக்கு ஒரு ஆண் ஒரு பெண் என இரண்டு குழந்தைகள் உள்ள நிலையில், குழந்தைகளை பராமரிக்க முடியாமல் அவரது கணவர் ராமகிருஷ்ணரெட்டி கடும் அவதியடைந்துள்ளார். இதனையடுத்து அவர் மனைவி அர்ச்சனாவை பல இடங்களில் தேடியுள்ளார்.

இறுதியில் அவர் பெங்களூரு போதனஹள்ளி பகுதியில் இருப்பதை அறிந்த ராமகிருஷ்ண ரெட்டி உறவினர்களோடு சென்று அங்கு மனைவியை மீட்டுள்ளார். அப்போது அவருடன் இருந்த சிறுவன் கார்த்தியை அவரது உறவினர்கள் கடுமையாக தாக்கியுள்ளனர்.

பலத்த காயமடைந்த சிறுவனை மீட்ட அவரது பெற்றோர் இன்று அவனை ஓசூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். சிறுவனுக்கு முதுகு மற்றும் கை கால்களில் பலத்த காயங்கள் ஏற்பட்டுள்ளது. தாக்குதலுக்கு உட்பட்ட சிறுவனும் அந்த பெண்ணும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த சம்பவம் குறித்து ஓசூர் மத்திகிரி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சிறுவனை தாக்கியவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சிறுவனின் பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். சிறுவனுக்கு 17 வயது என்பதால் அர்ச்சனா மீது போக்சோ வழக்கு பதியப்படலாம்.

வயது வித்தியாசம் பார்க்காமல் வேலைக்கு செல்லும் சில இளைஞர்கள் பள்ளி சிறுமியை காதலித்து போக்சோவில் சிறைக்கு செல்லும் நிலையில், 17 வயது சிறுவனை ஏற்கனவே திருமணமாகி குழந்தைகள் பெற்ற பெண் கள்ளக்காதலில் ஈடுபட்டதுமின்றி, வீட்டைவிட்டு வெளியேறி வீடு எடுத்து வசித்து வந்த சம்பவம் அப்பகுதியில் வியப்பையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.