இரண்டு குழந்தைகளையும் கொன்று தாய் தற்கொலை முயற்சி : குடும்பத் தகராறில் நடந்த விபரீதம்!!

282

கிருஷ்ணகிரியில்..

எந்தவொரு பிரச்சனைக்கும் தற்கொலை என்பது தீர்வு கிடையாது. மன அழுத்தத்தில் இருந்தால், உங்களுக்கு நெருக்கமானவர்களிடமோ, நண்பர்கள், உறவினர்களிடமோ மனம் விட்டு பேசுங்கள்.

நொடி நேர தீர்மானம் தான். ஆனால், அதன் பின்னர் உங்கள் செயலால் ஒரு குடும்பமே துன்பத்தில் உழல்கிறது. குடும்ப தகராறில் நொடி நேர பைத்தியக்காரத்தனத்தினால், தனது இரண்டு இரண்டு குழந்தைகளுடன் தாயும் விஷம் அருந்தி தற்கொலைக்கு முயன்ற சம்பவம் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அரங்கேறியுள்ளது.

இதில், இரண்டு குழந்தைகளும் உயிரிழந்த நிலையில், தாய் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். கிருஷ்ணகிரி மாவட்டம் கந்திகுப்பம் அடுத்து உள்ள செந்தாரப்பள்ளி பகுதியை சேர்ந்தவர் கௌரி (26).

இவருக்கும் கெட்டூர் கிராமத்தை சேர்ந்த முத்துராஜ் என்பவருக்கும் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்துள்ளது. இவர்களுக்கு ஜீவன்( 4) என்ற மகனும் பாவனா ஸ்ரீ(2) என்ற மகளும் உள்ளனர். இந்நிலையில் முத்துராஜ் கடந்த ஒரு மாத காலமாக சரிவர வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்துள்ளதாக கூறப்படுகிறது.

இதனால் முத்துராஜ்க்கும் கௌரிக்கும் அடிக்கடி பிரச்னை ஏற்பட்டுள்ளது. இதில் கடந்த 17-ம் தேதி ஏற்பட்ட தகராறில் முத்துராஜிடம் கோபித்த கொண்ட கௌரி செந்தாரப்பள்ளியில் உள்ள தன் தாய் வீட்டிற்கு தனது இரு குழந்தைகளுடன் சென்றுள்ளார்.

கடந்த ஒரு வாரகாலமாக குடும்ப பிரச்னையால் மனமடைந்த நிலையில் காணப்பட்ட கௌரி நேற்று முன்தினம் இரவு வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தன் இரு குழந்தைகளுக்கும் விஷம் கொடுத்து தானும் விஷம் குடித்துள்ளார்.

இந்த நிலையில் சிறிது நேரத்தில் மயங்கி விழுந்த மூவரையும் அக்கம் பக்கத்தினர் மீட்டு தர்மபுரி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். அங்கு மூன்று பேருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் கௌரின் குழந்தைகள் ஜீவன் மற்றும் பாவனா ஸ்ரீ இருவரும் நேற்று மதியம் சிகிச்சை பலனின்றி உயிரிந்தனர்.

உயிருக்கு ஆபத்தான நிலையில் கௌரிக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் இந்த சம்பவம் குறித்து கந்திகுப்பம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கிருஷ்ணகிரி அருகே குடும்ப பிரச்னையில் தனது இரண்டு குழந்தைகளுக்கு விஷம் கொடுத்துவிட்டு தாயும் விஷமருந்தி தற்கொலைக்கு முயன்ற சம்பவத்தில் இரண்டு குழந்தைகள் பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.