மளிகைக் கடை வருமானத்தை வைத்து உலகை சுற்றிவரும் சிங்கப் பெண் : சாதனைப் பெண்ணின் கதை!!

295


கேரளாவில்..



கேரளாவை சேர்ந்த பெண் ஒருவர் மளிகை கடை மூலம் கிடைக்கும் வருமானத்தை வைத்தே உலக சுற்றுலா சென்றுவருகிறார். இதற்கு இவர் சொல்லும் காரணம் தான் பலரையும் வியப்படைய செய்திருக்கிறது.



பொதுவாக, சுற்றுலா செல்வது பலருக்கும் பிடித்தமான ஒரு விஷயமாகவே பார்க்கப்படுகிறது. இரைச்சல்களும், அழுத்தும் அலுவலக பணியும் நிறைந்த அன்றாட வாழ்க்கைக்கு ஒரு குட்டி டாட்டா சொல்லிவிட்டு ஒரு பயணம் போக வேண்டும் என விரும்பாத நபர்களே இருக்க முடியாது.




பயணம் மேற்கொண்டு புதிய இடங்களை தேடிச் செல்லும் அனுபவத்தை பெற அனைவருமே நினைப்பது உண்டு. ஆனால், பொருளாதார சூழ்நிலை, விடுப்பு என ஒவ்வொருவருக்கும் ஒரு காரணம் திடீரென முளைத்துவிடும்.


ஆனால் கேரளாவை சேர்ந்த இந்த பெண், யாருக்காகவும் தன்னுடைய கனவுகளை விட்டுத்தரும் நபர் அல்ல. கேரளாவின் எர்ணாகுளம் அருகே உள்ள சித்ரபுழையில் மளிகை கடை வைத்து நடத்தி வருகிறார் இந்தப்பெண்.

பயணத்தின் மீது தீரா காதல் கொண்ட இவர் இதுவரையில் மலேஷியா, அமெரிக்கா, இங்கிலாந்து ஆகிய நாடுகளுக்கு சுற்றுலா சென்றிருக்கிறார். நடுத்தர வர்க்கத்தை சேர்ந்த மக்கள் எல்லாம் உலக சுற்றுலா செல்ல முடியுமா? என கேட்கப்படும் கேள்விக்கு முடியும் என ஒற்றை வார்த்தையில் பதில் அளித்திருக்கிறார் இவர்.


மளிகை கடை நடத்தி வரும் இவர் இதில் கிடைக்கும் வருமானத்தில் உலக சுற்றுலாவுக்கு என தனியாக பணத்தை சேமித்து வைக்கிறார். இதுபற்றி அவர் பேசுகையில் தனக்கென ஒரு வாழ்க்கை இருப்பதாகவும் அதனை மகிழ்ச்சியோடு தனக்கு பிடித்தபடி வாழ விருப்பப்படுவதாகவும் கூறுகிறார்.

இதுவரை 12 நாடுகளுக்கு சென்றுள்ள இவர் ஐரோப்பாவில் 15 நாட்களும், சிங்கப்பூர், மலேசியாவில் 7 நாட்களும், அமெரிக்கா மற்றும் பிரிட்டனில் தலா 15 நாட்களும் சுற்றுலா சென்றிருக்கிறார். பயணத்தின் மீது தனக்கு இருக்கும் காதல் எப்போதும் குறைவதில்லை என கூறும் இந்த பெண்ணுடைய வயது 61.

தற்போது ஹிமாச்சல் பிரதேஷ் உள்ளிட்ட இந்தியாவில் உள்ள புகழ்பெற்ற சுற்றுலா தலங்களுக்கு செல்ல திட்டமிட்டிருக்கிறார் இவர். கொஞ்சம் மனது வைத்தால் உலக சுற்றுலா செல்ல நம்மாலும் முடியும் என உரக்க சொல்லியிருக்கும் இந்த பெண்மணி பலருக்கு ரோல் மாடலாக தற்போது உருவாகி உள்ளார்.