நாய் கடித்ததால் பரிதாபமாக உயிரிழந்த 14 வயதுச் சிறுவன்.. எச்சரிக்கைச் செய்தி!!

1035

இந்தியாவில்..

இந்தியாவின் உத்தரபிரதேசத்தில் நாய் கடித்து 14 வயது சிறுவன் உயிரிழந்த துயர சம்பவம் நடந்துள்ளது.உத்தரபிரதேசத்தின் காசியாபாத் நகரில் வசித்து வருபவர் யாகூப், பழைய இரும்பு பொருட்களை வாங்கி விற்பனை செய்து வருகிறார். இவரது மகன் ஷாவாஸ்(வயது 14), 8ம் வகுப்பு படித்து வருகிறான், கடந்த ஒரு மாதத்திற்கு முன்பாக பக்கத்து வீட்டில் உள்ள நாய் ஒன்று ஷாவாஸை கடித்துள்ளது.

வீட்டில் சொன்னால் பெற்றோர் திட்டுவார்கள் என்பதற்காக நாய் கடித்ததை மறைத்துள்ளான், இந்நிலையில் கடந்த 4ம் தேதி காலையில் இருந்து ஷாவாஸின் உடல்நலம் குன்றியது.உடனடியாக அவனை மருத்துவமனைக்கு அழைத்து சென்ற போது, ஷாவாஸை பரிசோதித்த மருத்துவர்கள் நாய் கடி விஷம் ஏறிவிட்டதாக கூறியுள்ளனர்.

ஷாவாஸிடம் விசாரித்ததில், பக்கத்து வீட்டு நாய் தன்னை கடித்ததாக கூறியுள்ளான், இதற்கிடையே சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளான்.இதுகுறித்து, போலீஸில் புகார் அளிக்கப்பட்ட நிலையில், பக்கத்து வீட்டுக்கார்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.

மேலும் நாய்க்கு தடுப்பூசி போடாமல் வளர்த்து வந்ததும் தெரியவந்துள்ளது, தங்கள் நாய் அச்சிறுவனை கடிக்கவில்லை எனவும் தெரிவித்துள்ளனர். இச்சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், பொலிசார் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.