உயிருடன் இருக்கும் போதே மனைவிக்கு கண்ணீர் அஞ்சலி போஸ்டர்.. கணவரின் முன்விரோதம்.!!

1325

கிருஷ்ணகிரியில்..

தமிழக மாவட்டம் கிருஷ்ணகிரி அருகே முன் விரோதத்தின் காரணமாக மனைவிக்கு கண்ணீர் அஞ்சலி போஸ்டர் வைத்த கணவரால் பரபரப்பு ஏற்பட்டது. கிருஷ்ணகிரி அருகே உள்ள பெத்ததாளாப்பள்ளியை சேர்ந்த தம்பதியினர் சேதுராம் (44) மற்றும் சுகன்யா (44).

இருவரும் ஆடிட்டராக உள்ளனர். இவர்கள் இருவருக்கும் இடையே அடிக்கடி சண்டை ஏற்பட்டு தகராறு வந்துள்ளது. இதனால், மனைவி சுகன்யா கடந்த 10 மாதங்களாக கிருஷ்ணகிரி வீரப்பன் நகர் பகுதியில் உள்ள தனது பெற்றோர் வீட்டில் வசித்து வருகிறார்.

இதனைத்தொடர்ந்து, கணவர் மற்றும் மனைவிக்கு இடையே விவாகரத்து செய்ய முடிவு செய்யப்பட்டது. அதன்படி, கிருஷ்ணகிரி நீதிமன்றத்தில் இவர்களது விவாகரத்து மனு தாக்கல் செய்யப்பட்டு நிலுவையில் உள்ளது.

இந்நிலையில், கடந்த 4ஆம் திகதி ருஷ்ணகிரி நகர் ஆர்.சி. சர்ச் மற்றும் வேறு சில இடங்களில் சுகன்யா இறந்துவிட்டதாக கண்ணீர் அஞ்சலி போஸ்டர் ஒட்டப்பட்டிருந்தது. இதனையறிந்த சுகன்யா அதிர்ச்சியடைந்து கிருஷ்னகிரி பொலிஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.

அந்த புகாரில் அவர், தனதுகணவர் சேது ராம் முன் விரோதம் காரணமாக தனக்கு கண்ணீர் அஞ்சலி போஸ்டர் வைத்துள்ளார் என குறிப்பிட்டிருந்தார். இதைத் தொடர்ந்து, கிருஷ்னகிரி பொலிசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.