மகளின் திருமணம் நடந்த ஹொட்டல் அறையில் தூக்கில் தொங்கிய பெற்றோர்!!

1170

கேரளாவில்..

கேரளாவின் திருவனந்தபுரத்தில் மகளின் திருமணம் நடந்த அதே ஹொட்டல் அறையில் பெற்றோர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட துயரமான சம்பவம் நடந்துள்ளது. கேரளாவின் ஆலப்புழாவை சேர்ந்தவர் சுகதன்(வயது 71), இவரது மனைவி சுனிலா.

இவர்களுக்கு உத்தரா என்ற மகள் இருக்கிறார், கடந்த 30 ஆண்டுகளாக மஸ்கட்டில் பணியாற்றி வந்த சுகதன் சென்னையில் வாகன உதிரிபாகங்களை விற்பனை செய்து வரும் கடை நடத்தி வந்துள்ளார்.

தொழிலில் நஷ்டம் ஏற்படவே குடும்பத்துடன் திருவனந்தபுரம் சென்று சொந்த வீட்டில் குடியேறினார், மேலும் பணப்பிரச்சனையால் சொந்த வீட்டை விற்றுவிட்டு வாடகை வீட்டில் வசித்து வந்தனர்.

இந்நிலையில் கடந்த ஜனவரி மாதம் மகள் உத்தராவின் திருமணத்தை தடபுடலாக நடத்தியுள்ளார். இதனால் கடன் தொல்லை மேலும் அதிகரிக்க மகள் திருமணம் நடத்தப்பட்ட அதே ஹொட்டலில் அறை எடுத்து சுகதன்- சுசிலா தங்கினர்.

நேற்று மதியம் மதிய உணவு சாப்பிட்ட பின்னர் அறைக்கு சென்றுள்ளனர், மாலை அறையை சுத்தம் செய்வதற்காக ஊழியர் வந்த போது கதவை நீண்ட நேரமாக திறக்காமல் இருந்துள்ளனர். சந்தேகம் அடைந்த ஊழியர்கள் கதவை திறந்து பார்த்த போது, ஒரே துப்பட்டாவில் இருவரும் தூக்குப்போட்டு இறந்த நிலையில் காணப்பட்டனர்.

உடனடியாக பொலிசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது, விரைந்து வந்த அதிகாரிகள் இருவரின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பிவைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்கு பதிவு செய்ததுடன் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.