1½ வயது குழந்தையை மாடியிலிருந்து வீசிக்கொன்ற தந்தை : மதுவால் நடந்த விபரீதம்!!

654


மகாராஷ்டிராவில்..மகாராஷ்டிராவில் சண்டையால் மனைவி மீது ஏற்பட்ட ஆத்திரத்தில் மாடியில் இருந்து 1½ வயது குழந்தையை வீசி கொன்ற தந்தையை போலீசார் கைது செய்தனர். தானே மாவட்டம் தைகர்காவ் அபய்நகர் பகுதியைச் சேர்ந்தவர் அல்டாப் முகமது.இவர் தனது மனைவி மற்றும் 1½ வயது மகளுடன் வசித்து வந்தார். அல்டாப் முகமதுக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்து வந்தது. இதனால் தினமும் குடித்து விட்டு வீட்டுக்கு வந்து, மனைவியுடன் தகராறு செய்து வந்தார்.
இந்நிலையில் கடந்த 8ம் தேதி மாலை 6 மணி அளவில் வேலை முடிந்து அல்டாப் முகமது மதுகுடித்து விட்டு வீட்டிற்கு வந்தார். அப்போது, இது தொடர்பாக மீண்டும் கணவன், மனைவி இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில், கடும் ஆத்திரம் அடைந்த அல்டாப் முகமது மனைவியை அடித்து உதைத்துள்ளார்.


இருப்பினும் கோபம் அடங்காத அவர் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த 1½ வயது மகளைத் தூக்கிக் கொண்டு மாடிக்கு சென்ற அவர், அங்கிருந்து பெற்றக் குழந்தை என்றும் பாராமல் கீழே வீசினார். இதில் படுகாயம் அடைந்த குழந்தை சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது. இது பற்றி அக்கம்பக்கத்தினர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

தகவலின் பேரில் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற போலீசார் குழந்தையின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து அல்டாப் முகமதுவை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.