வவுனியாவில் தியாகிகள் தினம்..!

388


ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியினரால் (ஈ.பி.ஆர்.எவ்.எவ்) அனுஷ்டிக்கப்பட்டுவரும் தியாகிகள் தின 23ஆவது ஆண்டு நிகழ்வு வவுனியா நகரசபை மண்டபத்தில் இடம்பெற்றது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தலைமையில் நேற்று (30) இந்நிகழ்வு இடம்பெற்றது.தியாகிகள் தின நிகழ்வின் ஆரம்ப நிகழ்வாக நினைவுச்சுடர் ஏற்றப்பட்டு ஈ.பி.ஆர்.எல்.எவ் இன் முன்னாள் செயலாளர் நாயகம் அமரர் க.பத்மநாபாவின் உருவப் படத்திற்கு மலராஞ்சலி செலுத்தப்பட்டு மௌன அஞ்சலியும் இடம்பெற்றது.

தொடர்ந்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தனால் தலைமையுரை நிகழ்த்தப்பட்டது.பின்னர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகளின் அஞ்சலி உரைகள் இடம்பெற்றன.இதன்படி வீ.ஆனந்தசங்கரி, மாவை சேனாதிராஜா, த.சித்தார்த்தன், சுரேஸ் பிரேமச்சந்திரன், செல்வம் அடைக்கலநாதன், சர்வேஸ்வரன், குலசேகரம் என பலரும் அஞ்சலி உரையாற்றினர்.


இந்நிகழ்வுகளில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரதேச, நகர சபைகளின் தலைவர்கள், உறுப்பினர்கள், பொதுமக்கள், ஆதரவாளர்கள் என பெருந்தொகையானோர் பங்கேற்றிருந்தனர்.

thiakikal