கெப் ரக வாகனத்துடன் முச்சக்கர வண்டி மோதி விபத்து : இருவர் படுகாயம்!!

697

திருகோணமலையில்..

திருகோணமலை – மட்டக்களப்பு பிரதான வீதி கிளிவெட்டி 58ஆம் கட்டை பகுதியில், கெப் ரக வாகனம் ஒன்றுடன் முச்சக்கர வண்டி ஒன்று மோதி விபத்துக்குள்ளானதில் முச்சக்கரவண்டியில் பயணித்த கணவன், மனைவி இருவரும் படுகாயம் அடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

குறித்த விபத்தானது இன்று (06.11.2023) காலை இடம்பெற்றுள்ளது.இந்த விபத்தில் முச்சக்கர வண்டியில் பயணித்த தெஹிவத்த – மந்தனபுர பகுதியில் வசித்துவரும் டபிள்யு. எம்.சேனக்குபண்டார (39வயது) மற்றும் அவரது மனைவி எச்.எம்.நிலந்தி (34வயது) ஆகியோர் படுகாயம் அடைந்துள்ளதாக கூறப்படுகிறது.

விபத்தில் படுகாயமடைந்த இருவரும் திருகோணமலை பொதுவைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.விபத்துடன் தொடர்புடைய கெப் வானத்தின் சாரதியை கைது செய்துள்ளதுடன், விபத்து தொடர்பிலான விசாரணைகளை முன்னெடுத்து வருவதாகவும் மூதூர் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.