வவுனியா நெளுக்குளம் பகுதியில் 4 நாட்களாக அறுந்து தொங்கும் மின்சாரக் கம்பி : மின்சார சபை மீது மக்கள் விசனம்!!

706

வவுனியா – நெளுக்குளம் குழுமாட்டுச் சந்தி- காத்தான்கோட்டம் பகுதியில் மின்சாரக் கம்பி ஒன்று கடந்த நான்கு நாட்களாக அறுந்து தொங்குவதாகவும் மின்சார சபைக்கு அறிவித்தும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

அறுந்து தொங்கும் மின்சார கம்பியில் மின்சாரம் பாய்வதுடன், மின்சாரக் கம்பி தகரத்தின் மீது விழுந்து கிடப்பதால் அவ் வீதியால் பயணிக்கும் மக்கள் அச்சமடைந்துள்ளனர். மேலும் மின்சாரம் தாக்கி நாய் ஒன்று இறந்துள்ளதாகவும், இவ் வீதியூடாக பாடசாலை மாணவர்கள் செல்வதால் மின்சார சபை உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று பிரதேச மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

மின்கட்டணம் செலுத்தாதவர்களின் மின் இணைப்பை துண்டிப்பதில் காட்டும் வேகத்தை மின்சாரசபை தங்கள் முறைப்பாடுகளுக்கு உரிய வேகம் காட்டுவதில்லை என பிரதேச மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.

-பாஸ்கரன் கதீசன்-

11 12 13 14