வவுனியா சிங்கர் பிளஸ் நிறுவனத்தால் செட்டிகுளம் மீள்குடியேற்ற பெண்களுக்கு தையல் இயந்திரம் சம்பந்தமான பயிற்சிநெறி!!

682

வவுனியா சிங்கர் பிளஸ் நிறுவனத்தால் செட்டிகுளம் பகுதியில் மீள்குடியேற்றப்பட்ட பெண்களுக்கான தையல் இயந்திரம் சம்பந்தமான பயிற்சிநெறி இன்று (14.07) செட்டிகுளத்தில் நடைபெற்றது.

சிங்கர் நிறுவன ஊழியர்களால் தையல் இயந்திரம் சம்பந்தமான அடிப்படை பயிற்சிகளும், தையல் இயந்திரத்தை பழுதுபார்த்தல் சம்பந்தமான பயிற்சிகளும் வழங்கப்பட்டது.

இப் பயிற்சிநெறியின் மூலம் தங்கள் தையல் இயந்திரம் பழுதடைந்தாலும் தாங்களாக திருத்திக்கொள்ள முடியும் எனவும், இதுவரை பழுதடைந்த தையல் இயந்தரங்களை பழுதுபார்பதற்காக வவுனியா எடுத்துச்செல்வதில் தாங்கள் சிரமங்களை எதிர்நோக்கி வந்ததாகவும் பயிற்சி நெறியில் கலந்துகொண்டவர்கள் தெரிவித்தனர்.

இப் பயிற்சிநெறியை இலங்கை தொழில்பயிற்சித் திணைக்களத்துடன் இணைந்து USAID,
NUCLEUSE ஆகிய அரசசார்பற்ற நிறுவனங்கள் ஏற்பாடு செய்தமை குறிப்பிடத்தக்கது.

11 12