வவுனியா ஓமந்தை கண்ணகை அம்மன் பொற்கோவில் வருடாந்த பொங்கல் விழா!!

876

வவுனியா ஓமந்தை அரசர்பதி கண்ணகை அம்மன் பொற்கோவிலின் வருடாந்த பொங்கல் விழா நேற்று (14.05) திங்கட்கிழமை சிறப்பாக இடம்பெற்றது.

வரலாற்று சிறப்பு மிக்க இவ் ஆலயம் கடந்த ஆண்டு மீள் நிர்மாணிக்கப்பட்டு கும்பாபிசேகம் இடம்பெற்றிருந்தது. பல பிரதேசங்களிலும் இருந்து வருகை தந்த பக்கதர்கள் ஆலயத்தில் பொங்கல் வைத்தும் காவடி- பாற் செம்பு எடுத்தும் தமது நேர்த்திக்கடனை நிறைவு செய்திருந்தனர். இங்கு 1008 பானைகள் வைத்து பொங்கல் பொங்கியமை சிறப்பம்சமாகும்.

இதேவேளை இந்தியக்கலைஞர்களின் இன்னிசைக் கச்சேரியும் கலை நிகழ்வுகளும் ஆலயத்தில் இடம்பெற்றமை குறிப்படத்தக்கது.


2 3 4 5 6 7 8