வடமாகாண மட்ட மெய்வல்லுநர் போட்டியில் பாடசாலை சார்பாக வெற்றி பெற்ற மாணவர்களைக் கௌரவிக்கும் நிகழ்வு 15.07.2014 அன்று காலை 8.30 மணிக்கு வவுனியா இந்துக்கல்லூரியின் சரஸ்வதி மண்டபத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் பாடசாலையின் அதிபர் திருமதி ஜீ.நடராஜா அவர்கள் தலைமை தாங்கி நடத்தினார். பிரதம விருந்தினராக பாடசாலையின் பழைய மாணவரும் வவுனியா வடக்கு வலய உடற்கல்வி ஆசிரிய ஆலோசகருமான திரு து.ரவிச்சந்திரன் அவர்களும் சிறப்பு விருந்தினராக திரு பா.சதீஸ்குமார் (ஸ்ரீஹரனியா புடவையக உரிமையாளர்) அவர்களும் கௌரவ விருந்தினராக பாடசாலையின் உடற்கல்வி ஆசிரியர் திரு கு.நிரஞ்சன் அவர்களும் பாடசாலையின் பழைய மாணவர் சங்க உறுப்பினர்களும் வெற்றியீட்டிய மாணவர்களின் பெற்றோரும் ஆசிரியர்களும் மாணவர்களும் கலந்து சிறப்பித்தனர்.
இந்நிகழ்வில் 5000 மீற்றர் ஓட்டத்தில் 2ம் இடத்தைப் பெற்ற செல்வன் எஸ்.யூட் டினோஸ் மற்றும் 100மீற்றர் தடைதாண்டல் ஓட்டத்தில் 2ம் இடத்தைப் பெற்ற செல்வி எஸ்.அம்பிகா ஆகிய மாணவர்கள் கௌரவிக்கப்பட்டனர். அத்துடன் வழிகாட்டலும் பயிற்சிகளும் வழங்கிய ஆசிரியர் திரு கு.நிரஞ்சன் அவர்களும் கௌரவிக்கப்பட்டார்.





