வவுனியா ஏ9 வீதியில் பேரூந்து மோதியதில் ஒருவர் மரணம், மேலும் ஒருவர் காயம்!!

918

வவுனியா, ஓமந்தை, பன்றிக்கெய்த குளம் ஏ9 வீதியில் யாழில் இருந்து வவுனியா நோக்கி வந்த தனியார் பேரூந்து மோதியதில் ஒருவர் மரணமடைந்துள்ளதுடன் ஒருவர் காயமடைந்துள்ளதாக ஒமந்தைப் பொலிசார் தெரிவித்துள்ளனர்.

நேற்று (16.07) மாலை இடம்பெற்ற இவ் விபத்து தொடர்பில் மேலும் தெரியவருவதாவது…

நேற்று மாலை 5.30 மணியளவில் யாழில் இருந்து வவுனியா நோக்கி வந்த தனியார் பேரூந்து ஓமந்தை பன்றிக்கெய்தகுளம் பகுதியில் வேகக் கட்டுப்பாட்டை இழந்து முன்னே சென்ற துவிச்சக்கரவண்டியுடன் மோதியுள்ளது.

இதனால் துவிச்சக்கரவண்டி ஓட்டுனர் தடுமாறிய போது அருகில் சென்ற மோட்டர் சைக்கிளுடனும் பேரூந்து மோதியுள்ளது. மோட்டர் சைக்கிளில் பயணித்த சு.அரசரட்ணம் (65) என்பவர் சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளதுடன் துவிச்சக்கரவண்டியில் பயணித்தவர் காயமடைந்து வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மேலதிக விசாரணைகளை ஓமந்தைப் பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

1 2 3