உங்களுக்கு அக்காவைத் தான் பிடிச்சிருக்கு’ என்பது தான் அவள் எங்களிடம் உச்சரித்த கடைசி வார்த்தை’ என்று பெற்றோர்கள் கதறுகின்றனர்.
இதுக்கெல்லாமா தற்கொலை செய்துக் கொள்வார்கள் என்று பதைபதைக்கிறார்கள் அக்கம் பக்கத்து வீடுகளில் வசித்து வருபவர்கள். கர்நாடக மாநிலத்தில் பெங்களூருவில் சாமராஜ் பேட்டை பகுதியில் சோகமான சம்பவம் ஒன்று அரங்கேறியுள்ளது.
இந்தப் பகுதியில் வசித்து வரும் ஷ்ரவ்யாவுக்கு வயது 19. இவர் பிபிஏ 2ம் ஆண்டு படித்து வருகிறார். இவர் தனது உடன் பிறந்த அக்காவுடன் சண்டை போட்டதில் மிகுந்த மன உளைச்சலுடன் காணப்பட்டார்.
திடீரென மன அழுத்தம் அதிகமாகி தற்கொலை செய்து கொண்டார். பெட்ஷீட்டை வைத்துக் கொள்ளும் விஷயத்தில் அக்கா-தங்கை இடையே பிரச்சனை ஏற்பட்டது.
அதாவது ஷ்ரவ்யா தனது அக்காவுடன் அக்டோபர் 18ம் தேதி இரவு தனது அக்காவுடன் போர்வைக்காக சண்டை போட்டுள்ளார். பெற்றோர் இருவரையும் சமாதானமாக்கி தூங்க வைத்தனர்.
இந்நிலையில் ஷ்ரவ்யா பெட்ஷீட் பிரச்சனையை நினைத்து மிகுந்த மன உளைச்சலில் இருந்து வந்ததாகத் தெரிகிறது. மறுநாள் காலை நீண்ட நேரம் ஆகியும் அவர் அறையை விட்டு வெளியே வரவே இல்லை.
இதனால் சந்தேகம் அடைந்த பெற்றோர் கதவை உடைத்து சென்றுப் பார்த்தபோது அவர் தூக்கில் பிணமாக தொங்கியது கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
கதறித் துடித்த பெற்றோர் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். மேலும் அந்த தகவலின் படி காவல்துறையினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு சென்று ஷ்ரவ்யாவின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இது குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில் ஒரு சிறிய பிரச்சனைக்காக இளம்பெண் விபரீத முடிவு எடுத்தது அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.