இரு பேருந்துகள் நேருக்கு நேர் மோதி கோர விபத்து : இருவர் பலி : 40 பேர் காயம்!!

758

மின்னேரிய அருகே இன்று (01.05.2025) மாலை நடைபெற்ற பாரிய விபத்தொன்றில் இருவர் உயிரிழந்து, 40 பேர் படுகாயமடைந்துள்ளனர். மின்னேரிய – ஹபரணை பிரதான வீதியில் ராணுவ முகாம் ஒன்றின் முன்பாக இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

எதிரெதிராக வந்த இரண்டு பேருந்துகள் மோதிக் கொண்டதில் இந்த விபத்துச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். விபத்தின் காரணமாக இரண்டு பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.

மேலும் 30 பேர் காயங்களுடன் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். சம்பவம் தொடர்பில் மின்னேரிய பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.