கோர விபத்தில் சிக்கிய கொழும்பிலிருந்து சென்ற சொகுசுக் கார் : இருவர் வைத்தியசாலையில் அனுமதி!!

221

கொழும்பிலிருந்து களுத்துறை நோக்கிச்சென்ற சொகுசு காரொன்று வீதியை விட்டு விலகி விபத்திற்குள்ளாகியுள்ளது. இந்த விபத்தில் மூன்று பேர் காயமடைந்த நிலையில், அவர்களில் இருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

வஸ்கடுவ-காலி வீதியில், கார் எதிர் திசைப் பாதைக்குள் விலகிச்சென்று, மூன்று பாதசாரிகள் மீது மோதி, இரண்டு சாலை எல்லை கம்பங்களை உடைத்துக்கொண்டு சாலையிலிருந்து விலகிச்சென்றுள்ளது.

சாரதிக்கு ஏற்பட்ட நித்திரை இந்த விபத்திற்கு காரணமாக இருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர். இதனையடுத்து சாரதி கைது செய்யப்பட்டு, களுத்துறை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைபடுத்தப்படவுள்ளார்.