
கொழும்பிலிருந்து அக்கரைப்பற்று நோக்கி பயணித்த அதிசொகுசு பேருந்து ஒன்று மோட்டார் சைக்கிளுடன் மோதியதில் பாரிய விபத்திற்கு உள்ளாகியுள்ளது. இந்த விபத்து இன்று(11.08.2026) அதிகாலை 1.30 மணிக்கு சம்பவித்துள்ளது.
பொலன்னறுவை தமனபாய பக்கமுவ பகுதியூடாக பயணித்த போது திடீரென வீதியைக் கடந்த மோட்டார்சைக்கிளுடன் மோதியதால் பாரிய விபத்து சம்பவித்ததுடன் பேருந்து வீதியை விட்டு வீதியோரமாக சென்று வாய்க்காலின் நடுவே அந்தரத்தில் சிக்கிக்கொண்டுள்ளது.
விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த ஆணும் பெண்ணும் பலத்த காயமடைந்த நிலையில் உயிரிழந்துள்ளனர்.





