வவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலயத்தில் புலமைப்பரிசில் பரீட்சையில் 95.3% மாணவர்கள் சித்தி!!

123

வவுனியா தமிழ் மத்திய மகா வித்தியாலய (தேசிய பாடசாலை) மாணவர்கள் 2026ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் 95.3% என்ற மிக உயர்ந்த சித்தி விகிதத்தைப் பெற்றுள்ளனர்.

இம்முறை நடைபெற்ற புலமைப்பரிசில் பரீட்சையில் வவுனியா தமிழ் மத்திய மகா வித்தியாலயத்திலிருந்து மொத்தம் 169 மாணவர்கள் விண்ணப்பித்திருந்த நிலையில், விண்ணப்பித்த 169 மாணவர்களும் (130 மாணவர்கள் மற்றும் 39 மாணவிகள்) பரீட்சைக்குத் தோற்றியிருந்தனர்.

வெளியாகியுள்ள பரீட்சைப் பெறுபேறுகளின் அடிப்படையில், தோற்றிய மாணவர்களில் 72 மாணவர்கள் வெட்டுப்புள்ளிக்கு மேல் புள்ளிகளைப் பெற்று 42.6% சாதனை அடைவை எட்டியுள்ளனர்.

மேலும், 142 மாணவர்கள் 100 புள்ளிகளுக்கு மேல் பெற்று சிறப்பான பெறுபேறுகளையும், 161 மாணவர்கள் 70 புள்ளிகளுக்கு மேல் பெற்று உயர்ந்த பெறுபேறுகளையும் பதிவு செய்துள்ளனர்.

பரீட்சைக்குத் தோற்றிய ஒட்டுமொத்த மாணவர்களில் 8 மாணவர்கள் மட்டுமே 70 புள்ளிகளுக்குக் கீழ் புள்ளிகளைப் பெற்றுள்ளனர்.

பாடசாலையின் இந்த மகத்தான 95.3% சித்தி விகித சாதனைக்கு மாணவர்களின் அயராத உழைப்பு, பெற்றோரின் பங்களிப்பு, அதிபர் மற்றும் ஆசிரியர்களின் அர்ப்பணிப்புமிக்க வழிகாட்டல்களே முக்கிய காரணம் எனப் பாடசாலை சமூகம் பெருமிதத்துடன் தெரிவித்துள்ளதோடு, சாதனை படைத்த மாணவர்களுக்குத் தனது வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொண்டுள்ளது.