வவுனியாவில் வீட்டின் மீது வீழ்ந்த மரம் : ஒருவர் காயம்!!

97

வவுனியா சிதம்பரபுரம் பகுதியில் மரம் ஒன்று வேரோடு சாய்ந்து வீட்டின் மீது வீழ்ந்ததால் ஒருவர் காயமடைந்துள்ளதுடன் வீடும் பலத்த சேதமடைந்துள்ளது. வவுனியாவின் பல பகுதிகளில் நேற்று கடும் மழை பொழிந்தது. சில இடங்களில் பலத்த காற்றும் வீசியது.

இந்நிலையில் சிதம்பரபுரம் பகுதியில் பெய்த கனமழையுடன் கூடிய பலத்த காற்றின் காரணமாக, பாரிய மரம் ஒன்று வேரோடு சாய்ந்து வீடொன்றின் மீது வீழ்ந்தது. இதன்போது வீட்டில் இருந்த ஒருவர் காயங்களிற்குள்ளானார். குறித்த சம்பவத்தினால் வீட்டிற்கும் கடுமையான சேதம் ஏற்பட்டுள்ளது.