ஆவியாகத் திரியும் பாலியல் பலாத்கார குற்றவாளி : அச்சத்தில் தவிக்கும் மக்கள்!!

1171

Ram Singh

நிர்பயா பலாத்கார குற்றவாளிகளில் ஒருவனான ராம் சிங் ஆவியாக அலைவதாக டெல்லியில் உள்ள சான்ட் ரவிதாஸ் முகாமில் உள்ள மக்கள் அச்சத்தில் உள்ளனர்.

டெல்லியில் கடந்த 2012ம் ஆண்டு டிசம்பர் மாதம் 16ம் திகதி, ஓடும் பேருந்தில் 23 வயது மாணவி நிர்பயாவை 6 பேர் பாலியல் பலாத்காரம் செய்து கொன்றனர். இந்த வழக்கில் குற்றவாளிகள் 6 பேரும் கைது செய்யப்பட்டு, திஹார் சிறையில் அடைக்கப்பட்டனர்.

இவர்களில் ஒருவனான ராம் சிங் சிறையிலேயே தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டான். இந்நிலையில் டெல்லியில் அவன் வசித்து வந்த சான்ட் ரவிதாஸ் முகாமில் உள்ள வீட்டில் ராம் சிங்கின் ஆவி உலாவுவதாக கருதும் அப்பகுதி மக்கள் அதன் அருகே செல்ல பயப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

கடந்த 2 ஆண்டுகளாக அந்த வீடு பூட்டியே கிடந்தாலும், அந்த வீட்டுக்கு அருகே செல்ல குழந்தைகள் அஞ்சுகிறார்கள். மேலும், ராம் சிங்கின் பெற்றோர் அந்த வீட்டை காலி செய்துவிட்டு ராஜஸ்தானில் உள்ள தங்களின் சொந்த ஊருக்கு கிளம்பியபோது அந்த வீட்டில் ஆவி இருப்பதால் தான் அவர்கள் ராஜஸ்தானுக்கு சென்றதாகவும் கூறப்படுகிறது.