வவுனியா கிடாச்சூரி அம்மிவைத்தானில் பிறந்து ஒரேநாளான பிள்ளையை கிடங்கு வெட்டி புதைத்த தாய் தலைமறைவாகியுள்ளதாக வவுனியா மாவட்ட சிறுவர் உரிமை மேம்பாட்டு அதிகாரி ஜெ. ஜெயக்கெனடி தெரிவித்தார்.
இது தொடர்பாக அவர் கருத்து தெரிவிக்கையில், அம்மிவைத்தானில் வசித்து வந்த பெண்ணொருவர் கணவன் வெளிநாட்டில் வாழ்ந்து வரும் நிலையில் இன்று (12.07) குழந்தையொன்றை பிரசவித்திருந்த நிலையில் அதனை உடனேயே கிடங்கு வெட்டி புதைத்துள்ளார்.
இவ்விடயம் அயலவாகளினால் பொலிஸாருக்கும் எனக்கும் அறிவிக்கப்பட்டதன் அடிப்டையில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர். அத்துடன் மேற்படி தாய்க்கு 7 வயதுடைய மகன் உள்ள நிலையில் தற்போது அத் தாய் தலைமறைவாகியுள்ளார்.
இந்நிலையில் பொலிஸார் குழந்தை புதைக்கப்பட்டதாக தெரிவிக்கப்படும் இடத்தில் குழந்தையின் சடலத்தை மீட்கும் பணியை மேற்கொண்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகளையும் மேற்கொண்டுள்ளனர் என தெரிவித்தார்.