வவுனியாவில் ஆய்வுகூடங்களுக்கான அடிக்கல் நாட்டிவைப்பு..!

920

Rishatவவுனியாவிலுள்ள 3  பாடசாலைகளில் மஹிந்தோதயம் திட்டத்தின் மூலம் ஆய்வுகூடங்கள் அமைப்பதற்கான அடிக்கல்லு நாட்டும் நிகழ்வுகள் நேற்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றன.

வவுனியா தெற்கு கல்வி வலயத்திற்குட்பட்ட சைவப்பிரகாச மகளிர் கல்லூரி, பூவரசன்குளம் மகாவித்தியாலயம், வவுனியா வடக்கு கல்வி வலயத்திற்குட்பட்ட புதுக்குளம் மகா வித்தியாலயம் ஆகிய பாடசாலைகளிலேயே ஆய்வுகூடம் அமைப்பதற்கான அடிக்கல்கள் நாட்டப்பட்டன.

இந்நிகழ்வுகளில் கைத்தொழில் முதலீட்டு அமைச்சர் ரிசாட் பதியுதீன் பிரதம விருந்தினராகக் கலந்துகொண்டு அடிக்கல் நாட்டிவைத்தார்.

இந்நிகழ்வுகளில் வடமாகாண ஆளுநரின் வவுனியா பிராந்திய இணைப்பாளர் எம்.முகைதீன், வவுனியா தெற்கு வலயக் கல்விப் பணிப்பாளர் திருமதி செ.அன்ரன் சோமராஜா, வவுனியா நகரசபை உறுப்பினர் அப்துல் பாரி உட்பட பலர் கலந்துகொண்டனர்.