காணாமல்போனோரின் உறவினர்களை ஒப்படைக்குமாறு வவுனியாவில் போராட்டம்..!

848

vavuniyaகாணாமல்போனோரின் உறவினர்கள் இன்று வவுனியா நீதிமன்ற வளாகத்தின் முன்னால் அமைதியான முறையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இறுதி யுத்தத்தின்போது காணாமல்போன உறவுகளின் ஆட்கொணர்வு மனு மீதான விசாரணை இன்று வவுனியா மேல் நீதி மன்றத்தில் எடுத்துக்ககொள்ளப்பட்டபோது காணாமல் போனோரின் உறவினர்கள் இவ் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டிருந்தனர்.

இதேவேளை இறுதி யுத்தத்தின் போது இராணுவத்தால் கைது செய்யப்பட்டு காணாமல் போனார் ஆறு பேரின் உறவினர்கள் வவுனியா மேல் நீதி மன்றில் ஆட்கொணர்வு மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தனர்.
இந் நிலையில் இம் மனு மீதான விசாரணை இன்று மேல் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டபோது அரச தரப்பில் இது தொடர்பான அறிக்கை முழுமையாக சமர்ப்பிக்கப்பட்மையால் இவ் வழக்கினை ஆகஸ்ட் 26ம் திகதிக்கு ஒத்தி வைப்பதாக வவுனியா மேல் நீதிமன்றம் தெரிவித்தது.

இவ் வழக்கில் பாதிக்கப்பட்டோர் சார்பாக சட்டத்தரணி கே.எஸ் ரட்ணவேலும், வடபகுதி காணாமல் போனோர் சங்க பிரதிநிதிகளும், மன்னார் மாவட்ட பிரஜைகள் குழு பிரதிநிதிகளும் பாதிக்கப்பட்டவரின் உறவினர்களும் மன்றில் ஆயராகியிருந்தனர்.

இதேவேளை, காணாமல் போனோர் தொடர்பாக அரசு முறையான பதிலை வழங்க கோரி வவுனியா பிரதான தபாலகத்திற்கு முன்பாக அமைதியான பேரணி ஒன்று ஆரம்பமாகி நீதிமன்றம் வரை சென்றிருந்தது.

நீதிமன்றத்தின் முன்னால் சில மணி நேரம் அமைதியான முறையில் காணாமல் போனவர்களின் உறவினர்கள் பாதாதைகளை ஏந்தியவாறு போராட்டத்தில் ஈடுபட்டதன் பின்னர் போராட்டம் நிறைவடைந்தீருந்தது.