வவுனியாவில் விபத்து – ஆட்டோ சாரதி காயம்..!

347

வவுனியா வைரவர்புளியங்குளம் கதிரேசன் வீதியில் இன்று பிற்பகல் 2.30 மணியளவில் இடம்பெற்ற விபத்தொன்றில் ஒருவர் காயமடைந்துள்ளார். பாடசாலை வான் ஒன்றுடன் முச்சக்கர வண்டியொன்று மோதியமையலேயே இவ்விபத்து ஏற்பட்டுள்ளது.

வவுனியா சர்வதேச பாடசாலையிலிருந்து சிறுவர்களை ஏற்றி வந்த வாகனமே குறித்த விபத்தில் சிக்கியுள்ளது. இவ்விபத்தினால் முச்சக்கரவண்டி சேதமடைந்துள்ளதோடு முச்சக்கரவண்டி சாரதியும் காயங்களுக்குள்ளாகியுள்ளார்.

அதிஷ்டவசமாக பாடசாலை சிறுவர்களுக்கு எதுவித பாதிப்பும் ஏற்படவில்லை. அதேவேளை, காயமடைந்த முச்சக்கரவண்டியின் சாரதி வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

(தகவல் மற்றும் படங்கள் – கலைத்தேவன்)

 

a1 a2 a3 a4 a5 a6