வவுனியாவைக் கலங்கவைத்த மாணவியின் மரணம் : சர்ச்சைகளுக்கு மத்தியில் பூதவுடல் நல்லடக்கம்!!(காணொளி, படங்கள்)

892

வவுனியாவில் உயர்தரப் பரீட்சைக்கானஅனுமதி அட்டையை பாடசாலை அதிபர் தரமறுத்தமையால் தற்கொலை செய்துகொண்ட வவுனியா வேப்பங்குளத்தைச் சேர்ந்த திவ்யாவின் சடலத்தை அவர் கல்விகற்ற பாடசாலையான பண்டாரிகுளம் விபுலானந்தா கல்லூரியில் வைத்து இன்று (09.08.2015) அஞ்சலி செலுத்துவதற்கு நீதிமன்றம் அனுமதி மறுத்திருந்தது.

இம்முறை உயர்தரப் பரீட்சையில் தோற்றுவதற்கு கல்வித் திணைக்களத்தினால் அனுமதி அட்டை அனுப்பி வைக்கப்பட்ட போதிலும் மாணவி சாதாரணதரத்தில் கணித பாடத்தில் சித்தியடையவில்லை எனத் தெரிவித்து பாடசாலையின் அதிபரால் அனுமதி மறுக்கப்பட்டிருந்தது.

இந் நிலையில் தான் உயர்தரப் பரீட்சையில் தோற்றவேண்டும் என மாணவி பலமுறை அதிபரிடம் மன்றாட்டமாகக் கேட்டும் அதிபர் அதற்கு அனுமதி மறுத்திருந்த நிலையில் அம் மாணவி பரீட்சை எழுத முடியாமையினால் விரக்தி கொண்டு தனது நிலைமையை கடிதமாக எழுதிவைத்துவிட்டு கிணற்றில் விழுந்து தற்கொலை செய்திருந்தார்.

இந் நிலையில் இச் சம்பவம் தொடர்பாக விசாரணைகள் இடம்பெற்றுவரும் நிலையில் மாணவியின் இறுதிக் கிரியைகள் இன்று அவரது வீட்டில் இடம்பெற்றிருந்தது.

இதன்போது பல அரசியல்வாதிகள், கல்விச் சமூகத்தினர், பொதுமக்கள், மாணவர்கள் என பலரும் கலந்துகொண்டிருந்த நிலையில் பாடசாலையில் பூதவுடலை அஞ்சலிக்காக வைப்தற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது.

எனினும் பாடசாலை உயர்தர பரீட்சை நிலையமாக செயற்பட்டுவருவதன் காரணமாக பாடசாலைக்குள் பூதவுடலை வைக்க முடியாது எனவும், எனவே அப்பகுதிக்கு உடல் தாங்கிய பேழையைக் கொண்டுசெல்ல பொலிஸார் அனுமதி மறுத்திருந்தனர்.

எனினும் அங்கு கூடியிருந்தவர்கள் பொலிஸாரின் தடையைமீறி பூதவுடலை பாடசாலை வீதியூடாக கொண்டுசென்றிறுந்தனர்.

எனினும் பொலிஸார் மீண்டும் மீண்டும் தடையை ஏற்படுத்திய போதிலும் பூதவுடலை பொதுமக்கள் கொண்டு சென்றதை அடுத்து பொலிஸார் பாடசாலைக்குள் கொண்டு செல்லாமல் பாடசாலை வீதியால் கொண்டு செல்லவும் பாடசாலைக்கு முன்பாக பூதவுடல் பேழையை வைப்பதற்கு அனுமதி மறுத்தும் இருந்தநிலையில் பூதவுடலை பாடசாலை வீதி வழியாக அமைதியான முறையில் கொண்டுசென்று தட்சனாங்குளம் இந்து மயானத்தில் நல்லடக்கம் செய்திருந்தனர்.

-பிராந்திய செய்தியாளர்-

தொடர்புபட்ட செய்திகள் : 

வவுனியாவில் மாணவியின் இறுதி ஊர்வலத்தில் பொலிசாருக்கும் மாணவர்களுக்கும் இடையில் முறுகலால் பதற்றம்!!(படங்கள்)

வவுனியாவில் தற்கொலை செய்துகொண்ட மாணவியின் இறுதிக் கிரிகைகள் நாளை!!(காணொளி இணைப்பு)

வவுனியாவில் பாடசாலை மாணவி தற்கொலை : அதிபர் பணிநீக்கம்!!2ம் இணைப்பு (படங்கள்)

வவுனியாவில் பாடசாலை மாணவி கிணற்றில் இருந்து சடலமாக மீட்பு!!(படங்கள்)

20150809_102806 20150809_105913 20150809_112801 20150809_112927 20150809_112936 20150809_113046 20150809_113236 20150809_113704 20150809_113743 20150809_113752 20150809_113803 20150809_113851 20150809_114002 20150809_114017 20150809_114113 20150809_114146 20150809_115407 20150809_115404 20150809_114713 20150809_114152 20150809_114150 20150809_115412 20150809_115513 20150809_115546 20150809_115735 20150809_115841 20150809_120127 20150809_120121 20150809_120107 20150809_120030 20150809_115944 20150809_120225 20150809_120316 20150809_120448 20150809_120716 20150809_120730 20150809_122759 20150809_122745 20150809_122736 20150809_122733 20150809_120849