வவுனியா மாவட்ட சுகாதார சேவைகள் பணிப்பாளர் பணிமனை திறப்புவிழா!!(படங்கள்)

1101

வவுனியா மாவட்ட சுகாதார சேவைகள் பணிப்பாளர் பணிமனையின் புதிய கட்டடம் இன்று காலை 10 மணிக்கு வடமாகாண சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கம் அவர்களின் தலைமையில் திறந்து வைக்கப்பட்டது.

முதலில் பணிமனைக்கான நினைவுக்கல்லினை அமைச்சர் திரைநீக்கம் செய்து வைத்ததன் பின்னர் நாடாளுமன்ற உறுப்பினர்கள், வடமாகாண சபை உறுப்பினர்கள் இணைந்து பணிமனையினை திறந்து வைத்தனர்.

இந்நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர்களான சிவசக்கி ஆனந்தன், வைத்திய கலாநிதி சிவமோகன், வடமாகாண சபை உறுப்பினர்களான இந்திரராஜா, எம்.பி. நடராஜா, ஜி.ரி.லிங்கநாதன், பொது வைத்தியசாலையின் பதில் பணிப்பாளர், தாதிய பயிற்சிக் கல்லூரி அதிபர், சுகாதார சேவைகள் பணிப்பாளர், வவுனியா நகரசபை செயலாளர், சுகாதார திணைக்கள உத்தியோகத்தர்கள், ஊழியர்கள் பலரும் கலந்து கொண்டர். பிரதேச சுகாதார சேவைகள் பணிப்பாளர் திருமதி பசுபதிராஜா பவானி தலைமையில் நிகழ்வுகள் இடம்பெற்றது.

-பிராந்திய செய்தியாளர்-

OLYMPUS DIGITAL CAMERA OLYMPUS DIGITAL CAMERA OLYMPUS DIGITAL CAMERA OLYMPUS DIGITAL CAMERA OLYMPUS DIGITAL CAMERA OLYMPUS DIGITAL CAMERA