கைத் தொலைபேசி பாவனையாளர்களுக்கு ஓர் எச்சரிக்கை!!

403

sim

கைத் தொலைபேசிகளில் பயன்படுத்தப்படும் சிம் அட்டைகளை ஹேக் செய்ய முடியும் என்று தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
தற்போது பாவிக்கப்பட்டு வரும் சிம் அட்டைகளின் தொழில்நுட்பம் பழமை வாய்ந்தவையாகக் காணப்படுவதுடன், அவற்றினை நவீன தொழில் நுட்பத்தில் உருவாக்கப்பட்ட ஸ்மார்ட் கைப்பேசிகளின் பயன்படுத்தும் போது இலகுவாக ஹேக் செய்ய முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கான வழிமுறையை ஜேர்மன் நாட்டு மென்பொருள் பொருளியலாளர் கார்ஸ்டன் நோல் என்பவர் கண்டறிந்துள்ளார்.
இதுபற்றி அவர் தெரிவிக்கையில்,

என்னிடம் ஏதாவது ஒரு கைத்தொலைபேசி இலக்கத்தினை தந்து சில நிமிட அவகாசமும் தாருங்கள் நான் அந்த இலக்கத்திற்குரிய சிம் அட்டையினை எனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதுடன் அதன் ஒரு நகலையும் உருவாக்கி காட்டுகின்றேன் என தெரிவித்துள்ளார்.

இதேவேளை கைப்பேசி சேவை வழங்குனர்கள் சிம் அட்டைகள் ஹேக் செய்யப்படுவதனை தடுக்க அவற்றிலுள்ள தொழில்நுட்பக் குறைபாடுகளை நிவர்த்தி செய்யும் முயற்சியில் இறங்கியுள்ளனர்.