சாதனை படைத்த உலகின் மிக வயதான மூதாட்டி.!(படங்கள்)

417

பொதுவாக அனைவரும் தங்கள் வயதை குறைத்து சொல்லத்தான் ஆசைப்படுவார்கள். ஆனால், சமீபகாலமா நிறைய தாத்தா, பாட்டிகள் நாங்கள் தான் உலகிலேயே வயதானவர்கள் என்று முன்வந்து சொல்கின்றார்கள்.

இதுவரைக்கும் ஜப்பானைச் சேர்ந்த 115 வயது மிசாவேர் ஒக்காவா தான் உலகிலேயே அதிக வயதானவர் என்று சாதனைப் புத்தகமான கின்னஸ்சில் இடம் பிடித்துள்ளார். ஆனால் இல்லை இவர் தான் உலகிலேயே மிகவும் வயதானவர் என்று தென்னாப்பிரிக்காவில் உள்ள ஒரு மூதாட்டியை காட்டுகிறது அந்நாட்டு அரசு.

தென்னாப்பிரிக்காவின் ஜோஹன்னஸ்பேக் நகரின் தென்மேற்குப் பகுதியில் உள்ள ஒரு சிற்றூரில் வாழ்ந்துவருபவர் ஜொஹன்னா மசிபுகோ. தற்போது இவருக்கு 119 வயதாவதால் இவரே உலகில் அதிக வயதானவர் என அறியப்பட்டுள்ளாராம்.

ஜோஹன்னாவின் சான்றிதழ்களில் அவர் மே 11ம் திகதி 1894ம் ஆண்டு பிறந்தவராகக் குறிக்கப்பட்டுள்ளது. இதுவே, இவரது வயது மூப்புக்கான சான்றாக எடுத்துக் கொள்ளப் பட இருக்கிறது.

ஜோஹன்னேயின் உடன் பிறந்தவர்கள் பத்து பேர். ஆனால், இவரே அனைவருக்கும் மூத்தவராம். இவருக்கு மொத்தம் ஏழு பிள்ளைகளாம். அதில் ஐவர் இறந்து விட இவர் தற்போது பணியில் இருந்து ஓய்வு பெற்ற தனது 77 வயது மகனுடன் வசித்து வருகிறார்.

இந்தத் தள்ளாத வயதிலும் தானே சமைத்து, துவைத்து என தனக்கான வேலைகளை தானே கவனித்துக் கொள்கிறாராம். இன்னும் கண் பார்வை தெளிவாக இருப்பதால், தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை நன்கு ரசித்துப் பார்க்கிறாராம் ஜோஹன்னே. ஆனால் நீண்ட நேரம் நிற்க மட்டும் முடிவதில்லையாம்

தென்னாப்பிரிக்க அரசு அதிகாரப்பூர்வமாக இவரது சான்றிதழ்களை இன்னும் சரிபார்க்காத போதும் பத்திரிக்கைகள் இவர் தான் வயது முதிர்ந்த மூதாட்டி என அடித்துக் கூறுகின்றன்.

இதற்கு முன்னர் அதிக வயதானவராகக் குறிப்பிடப்பட்ட ஜீன் கால்மென்ட் என்ற பிரான்ஸ் தேசத்தவர் தன்னுடைய 122வது வயதில் கடந்த 1997ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 4ம் திகதி காலமானார்.

சமீபத்தில் இந்திய காஷ்மீரைச் சேர்ந்த பெரோஸ் உன் மிர் என்பவர் தனக்கு 141 வயதாவதாகவும் தனது மனைவி தன்னை விட 60 வயது இளையவர் என்றும் கூறியது குறிப்பிடத்தக்கது.

p1

p3

p2