தீவிரவாதிகளின் கொலை சதி முயற்சியிலிருந்து விபத்து என்னை காப்பாற்றியது : இம்ரான்கான்..!

757


imran khan

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் இம்ரான் கான் பாகிஸ்தான் தெக்ரிக்– இ–இன்சாப் என்ற கட்சியை தொடங்கியுள்ளார்.
அக் கட்சி சமீபத்தில் நடந்த பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட்டு கணிசமான வெற்றி பெற்று 3வது இடத்தை பிடித்துள்ளது.



இந்த நிலையில் மே 7ம் திகதி தேர்தல் பிரசாரத்தின் போது கராச்சியில் 24 அடி உயர மேடையில் லிப்ட் மூலம் ஏறிய இம்ரான்கான் விபத்துக்குள்ளானார். அதில் அவர் தவறி விழுந்ததில் பலத்த காயம் அடைந்து கடும் போராட்டத்துக்கு பின் உயிர் தப்பினார்.

குணமடைந்து தற்போது வீடு திரும்பியுள்ள அவர் இங்கிலாந்து பத்திரிகை ஒன்றுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்ததாவது “விபத்துக்குள்ளாகி வைத்தியசாலையில் தங்கியிருந்த போது என்னை அப்போதைய உள்துறை மந்திரி ரஹ்மான் மாலிக் என்னை சந்தித்தார்.
அப்போது விபத்து நடந்த மறுநாள் என்னை கொல்ல தீவிரவாதிகள் சதி செய்து இருந்ததாக தெரிவித்தார்.



பாகிஸ்தானில் தலிபான்கள் உள்ளிட்ட 25 தீவிரவாத அமைப்புகள் உள்ளன. அவர்களில் ஒது சிலர் மூலம் எனக்கு கொலை மிரட்டல்கள் இருந்து வந்தது.



இது குறித்து எச்சரிக்கை விடுத்த அரசு தேர்தல் பிரசாரத்தின் போது எனக்கு மிக அதிகளவில் பாதுகாப்பு கொடுத்தது. அதனால்தான் மேடை ஏறி தீவிரவாதிகள் தாக்க முடியாத அளவுக்கு 24 அடி உயர மேடையை எனது கட்சியினர் அமைத்து இருந்தனர்.


அதன் மீது ஏற அமைக்கப்பட்டிருந்த லிப்ட் அறுந்ததால் கீழே விழுந்து நான் படுகாயம் அடைந்தேன். அந்த விபத்து தான் தீவிரவாதிகளின் கொலை சதியில் இருந்து என்னை காப்பாற்றியுள்து” என்று கூறினார்.