காதலியை கல்லாலேயே அடித்துக் கொன்ற வாலிபர்..!!

542

dead

இந்திய தமிழகத்தில் திருமணம் செய்துகொள்ளும்படி வற்புறுத்திய காதலியை இளைஞன் ஒருவர் கல்லால் தாக்கி கொன்றுள்ளார்.  கடந்த 25ம் திகதி தமிழகத்தின் சூளைமேடு கூவம் ஆற்றில் 20 வயது மதிக்கத்தக்க இளம்பெண் ஒருவர் சடலமாக கிடந்தார்.

சூளைமேடு பொலிசார் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சென்னை அரச பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அந்த பெண் பற்றி பொலிசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டனர்.

மேலும் பிரேத பரிசோதனையில் அவர் கொலை செய்யப்பட்டு கூவத்தில் வீசப்பட்டது உறுதி செய்யப்பட்டது. அவரை பற்றி எந்தவித தகவலும் தெரியாமல் இருந்தது. இதனால் கொலை பற்றி விசாரிக்க அமைக்கப்பட்ட தனிப்படை பொலிசார் திக்கு தெரியாமல் தவித்தனர்.

இந்தநிலையில் பொலிசாரின் தீவிர விசாரணையில் கூவம் ஆற்றில் கொலை செய்யப்பட்டு கிடந்தவர் பூந்தமல்லி ஏரிக்கரையை சேர்ந்த 20 வயதான நீலாவதி என்பது உறுதி செய்யப்பட்டது.

அவரை கொலை செய்தது யார் எதற்காக அவர் கொலை செய்யப்பட்டார் என்ற கோணத்தில் பொலிசார் விசாரணையை தீவிரப்படுத்தினர். தொடர்ந்து நீலாவதியின் கையடக்கத் தொலைபேசியில் பதிவான இலக்கங்களை அடிப்படையாக வைத்து விசாரணை முடுக்கி விடப்பட்டது.

நீலாவதியிடம் கடைசியாக பேசிய 10 பேரின் பட்டியல் தயாரிக்கப்பட்டு சம்பந்தப்பட்டவர்களிடமும் விசாரணை நடத்தப்பட்டது. அப்போது சூளைமேடு வினோபாஜி தெருவில் உள்ள லேத்பட்டறையில் வேலை செய்து வந்த அருண் என்ற 25 வயது நபர் சில தினங்களாக வேலைக்கு செல்லாமல் வெளியூரில் இருந்ததை பொலிசார் கண்டுபிடித்தனர்.

சொந்த ஊரான விருதாச்சலத்தில் பதுங்கி இருந்த அவரை பொலிசார் நேற்று முன்தினம் இரவு சென்னை அழைத்து வந்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில் நீலாவதியை கொலை செய்து கூவம் ஆற்றில் வீசியதை ஒப்புக் கொண்டார்.

பின்னர் அருணை பொலிசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர். நீலாவதியை கொலை செய்தது ஏன் என்பது பற்றி அருண் அளித்த பரபரப்பு வாக்குமூலம் பற்றி பொலிஸ் தரப்பில் கூறப்படுவதாவது,

சூளைமேடு சுப்பாராவ் நகரில் உள்ள பாட்டி வீட்டிற்கு அடிக்கடி செல்வேன். அங்கு வாடகைக்கு குடியிருந்த நீலாவதிக்கும் எனக்கும் பழக்கம் ஏற்பட்டது. பார்த்த முதல் நாளே நெருக்கம் ஏற்பட்டது. இரண்டு நாட்களில் காதலர்களாக மாறினோம். எனது வேலையை நான் மறந்தேன். தொடர்ந்து இருவரும் விடிய விடிய பேச ஆரம்பித்தோம்.

3வது நாளிலேயே உல்லாசமாக இருக்க ஆரம்பித்தோம். அதன்பின்னர் 4 நாட்கள் தொடர்ந்து மகிழ்ச்சி வெள்ளத்தில் திளைத்தோம். ஒருவாரம் இது தொடர்ந்தது.

இந்தநிலையில் திருமணம் செய்து கொள்ளும்படி நீலாவதி என்னை நச்சரிக்க ஆரம்பித்தார். இதனால், அதிர்ச்சி அடைந்தேன். ஒரே வாரத்தில் நம்முடன் நெருக்கமாக பழகியவர் வேறு வாலிபருடன் பழக்கம் இல்லாமல் இருக்க வாய்ப்பு இல்லை என்று சந்தேகித்தேன்.

எனவே அவரை திருமணம் செய்து கொள்ள கூடாது என்ற முடிவுக்கு வந்தேன். ஆனால் நீலாவதி எனது வீட்டிற்கே வர ஆரம்பித்தார். இது எனக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியது.

அவர் இருந்தால் நிம்மதியாக வாழ முடியாது. எனவே தீர்த்துக்கட்டி விடவேண்டியதுதான் என்ற முடிவுக்கு வந்தேன். சம்பவத்தன்று கத்தி ஒன்றை கடையில் வாங்கிக் கொண்டேன். திருமணம் பற்றி பேச வேண்டும். சூளைமேடு கூவம் ஆறு அருகில் வரும்படி அவரிடம் தொலைபேசியில் கூறினேன். அவரும் ஆற்றங்கரைக்கு வந்தார்.

நைசாக அவருடன் பேச்சு கொடுத்தேன். குத்தி கொலை செய்யலாம் என்று நினைத்தேன். ஆனால், நீலாவதி சுதாரித்து விடக்கூடாது என்பதற்காக பேசிக் கொண்டு இருந்தபோதே அருகில் கிடந்த கல்லால் அவர் முகத்தில் மின்னல் வேகத்தில் தாக்கினேன்.

நிலை குலைந்த அவரது தலையில் பெரிய கல்லை எடுத்து போட்டு கொன்றேன். பின்னர், கூவத்திலேயே சடலத்தை வீசி விட்டு ஒன்றும் தெரியாதவன் போல் சென்று விட்டேன்.

இறுதியில் பொலிசாரின் வலையில் சிக்கி விட்டேன். இவ்வாறு அருண் வாக்குமூலம் அளித்ததாக பொலிசார் தெரிவித்தனர்.