வவுனியா ஊடகவியலாளர்களிற்கு கல்வித்திணைக்கள உத்தியோகத்தர் ஒருவர் எச்சரிக்கை விடுத்துள்ளார். இச்சம்பவம் பற்றி மேலும் தெரியவருவதாவது,
வவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலயத்தில் கடமையாற்றிய விளையாட்டுத்துறை ஆசிரியரை அதிகார துஸ்பிரயோகத்தின் மூலம் இடமாற்றம் செய்துள்ளதாக தெரிவித்து, மாணவர்கள் இன்று(12.02.2016) பாடசாலை முன்பாக ஆர்ப்பாட்டத்தை ஆரம்பித்து, பின்னர் பாடசாலைக்கு அருகாமையில் அமைந்துள்ள வலயக்கல்வி அலுவலகத்தின் வாயிலையும் முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.
இதனை வவுனியா தெற்கு வலயகல்வி அலுவலகத்திற்குள் கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸாரின் பின்புறமாக பாதுகாப்பான முறையில் செய்தி சேகரித்துக்கொண்டிருந்த ஊடகவியலாளர்களை கல்வித்திணைக்கள அதிகாரியொருவர், வெளியே செல்லுமாறு பணித்ததுடன் செய்தியை பூதாகாரமாக்க வேண்டாம் எனவும் எச்சரித்திருந்தார்.
தொடர்புபட்ட செய்தி : வவுனியா மகாவித்தியாலய மாணவர்கள், ஆசிரியர் இடமாற்றத்திற்கு எதிராக கவனயீர்ப்புப் போராட்டம்!!






