வவுனியா உக்குளாங்குளம் 04ம் ஒழுங்கையில் வசித்து வந்த பாடசாலை மாணவி நேற்று முன்தினம் (16.02.2016) மதியம் 02.00 மணியளவில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்ட போதும் இம் மரணத்தில் பலத்த சந்தேகம் பொலிஸாருக்கு ஏற்பட்டமையால் இன்று (18.02.2016) நிபுணத்துவ சட்ட வைத்திய அதிகாரி ஜே.சி.சமரவீரவினால் சிறுமியின் சடலம் பிரேதப் பரிசோதனை செய்யப்பட்டது.
குறித்த சிறுமி பாலியல் பலாத்காரத்திற்கு உட்படுத்தப்பட்டு, கழுத்து நெரிக்கபட்டு கொலை செய்யப்பட்டமைக்கான தடயங்கள் காணப்படுவதாகவும் மரண விசாரணை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இப்பிரேத பரிசோதனையின் முடிவில் திடீர் மரண விசாரனை அதிகாரி சிவநாதன் கிஸோர் அவர்களால் குறித்த சிறுமியின் மரணம் கொலை என்று மரண அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகளை வவுனியா பெரும் குற்றத்தடுப்புப் பொலிசாரை நீதிமன்றத்திற்கு அறிவித்து மேற்கொள்ளுமாரும் தெரிவித்துள்ளார்.
தொடர்புபட்ட செய்திகள் :
வவுனியாவில் பாடசாலை மாணவி மர்மமான முறையில் மரணம் : கொலையா? தற்கொலையா?