மதிமுக பொதுச்செயலாளர் வைகோ உட்பட நூற்றுக்கணக்கானோர் கைது..!

412

ykoஇலங்கையில் நடைபெறும் பொதுநலவாய நாடுகளின் மாநாட்டில் இந்தியா பங்கேற்கக் கூடாது என்று வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டு கைதாகியுள்ளதாக மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.

திருச்சியில் இன்று பிரதமர் வருகையைக் கண்டித்து கறுப்புக் கொடி போராட்டம் நடத்தி, வைகோ மற்றும் பல்வேறு கட்சிகளின் தலைவர்கள் உட்பட நூற்றுக்கணக்கானோர் கைது செய்யப்பட்டனர்.

அப்போது பேசிய வைகோ, இலங்கையில் நடைபெறும் பொதுநலவாய நாடுகளின் மாநாட்டில் இந்தியா பங்கேற்கக் கூடாது.

இலங்கையில் பொதுநலவாய நாடுகளின் மாநாடு நடைபெற்றால், அதன் மூலம் 53 நாடுகளின் தலைவராக இலங்கை அதிபர் ராஜபக்ச பொறுப்பேற்கும் வாய்ப்பு உள்ளது. எனவே இந்தியா அதில் பங்கேற்கக் கூடாது.

ஒரு வேளை இந்தியா பங்கேற்றால், இவ்வளவு நாள் தமிழகத்தில் நடந்த போராட்டங்கள் அனைத்தும் அர்த்தமற்றதாகப் போய்விடும் என்பதால், நாங்கள் “பாரதப் பிரதமரே திரும்பிப் போ” என்ற முழக்கத்துடன் போராட்டம் நடத்தி கைதாகியுள்ளோம் என்று கூறினார்.

பிரதமர் வருகை! கறுப்புக் கொடி காட்ட முயன்ற வைகோ உட்பட நூற்றுக்கணக்கானோர் கைது

திருச்சிக்கு வருகை தரும் பிரதமர் மன்மோகன் சிங்குக்கு கறுப்புக் கொடி காட்ட முயன்ற மதிமுக பொதுச் செயலாளர் வைகோ மற்றும் பிற கட்சித் தலைவர்கள் உட்பட நூற்றுக்கணக்கானோர் கைது செய்யப்பட்டனர்.

திருச்சியை அடுத்த திருமயத்தில் பிஎச்இஎல் நிறுவனத்தின் ஒரு ஆலையைத் தொடக்கி வைக்க பாரதப் பிரதமர் மன்மோகன் சிங் வெள்ளிக்கிழமை திருச்சி வருகிறார்.

தமிழகத்தில் எத்தனையோ பிரச்சினைகள் இருக்க, அதற்கெல்லாம் செவி கொடுக்காத பிரதமர், ஒரு ஆலையைத் தொடக்கி வைக்கும் ஒரு நிகழ்ச்சிக்காக தமிழகம் வருவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து மதிமுக உட்பட் பல்வேறு கட்சிகள் சார்பில் கெறுப்புக் கொடி ஆர்ப்பாட்டம் நடத்த திட்டமிட்டிருந்தனர்.

இதையடுத்து, மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, தமிழர் வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகன், தமிழ் தேச பொதுவுடையை கேட்சித் தலைவர் மணியரசன் மற்றும் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் பொதுச் செயலாளர் கு. ராமகிருஷ்ணன் உட்பட நூற்றுக்கணக்கோனார் திருச்சி விமான நிலையத்தில் கூடியிருந்தனர்.

பிரதமர் வருகையின் போது கறுப்புக் கொடி காட்ட முயன்ற மதிமுக பொதுச்செயலாளர் வைகோ உட்பட நூற்றுக்கணக்கானோரை காவல்துறையினர் கைது செய்தனர்.

இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

yko

vko2