வவுனியா, கிளிநொச்சியில் போலி நாணயத் தாள்களை அச்சிட்ட மூவர் கைது!!

400


vavuniya

கிளிநொச்சியில் போலி நாணயத் தாள்களை அச்சிட்டதாக கூறப்படும் ஒருவரும் அவற்றை வைத்திருந்த இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.கிளிநொச்சி பொலிஸாருக்கு கிடைத்த தகவலொன்றின் அடிப்படையில், தும்ரியபொல வீதி கிளிநொச்சி பிரதேசத்தில் போலி 1000 ரூபாய் நாணயத் தாள்களுடன் ஒருவர் கைதானார். நேற்றையதினம் கைதான இவர் வசமிருந்து 28 போலி 1000 ரூபா நாணயத் தாள்கள் கைப்பற்றப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேகநபர் வழங்கிய தகவலின் அடிப்படையில் வவுனியா பிரதேசத்தில் 20 போலி 1000 ரூபா நாணயத் தாள்களுடன் மேலுமொருவர் கைதுசெய்யப்பட்டார்.இவர்கள் இருவரிடமும் தீவிர விசாரணைகளை மேற்கொண்டதில் வவுனியா தோணிக்கல் பிரதேசத்தில் போலி நாணயத் தாள்களை அச்சிடுபவர் என சந்தேகிக்கப்படும் ஒருவர் கைதானார்.மேலும் நாணயத் தாள்கள் அச்சிட பயன்படுத்தப்பட்ட கொன்கோட் வகை தாள்கள் 15, கனிணி மற்றும் அச்சுப்பொறி உள்ளிட்ட பொருட்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.


கைப்பற்றப்பட்ட பொருட்களுடன் சந்தேகநபர்கள் இன்று கிளிநொச்சி நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.