அவுஸ்திரேலியாவில் கடுமையான குடிவரவுக் கொள்கை – தேர்தல் வாக்குறுதி

328

ausஅவுஸ்திரேலியாவில் கடுமையான புதிய குடிவரவுக் கொள்கைகளை கண்சர்வேடிவ் கட்சித் தலைவரான டோனி அப்பாட் பிரேரித்துள்ளார்.

அந்நாட்டில் அடுத்த மாதம் பொதுத் தேர்தல் நடக்கவுள்ள நிலையில், தமது கட்சியின் தேர்தல் வாக்குறுதிகளில் ஒன்றாக அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

அவுஸ்திரேலியாவில் தற்போது தஞ்சக் கோரிக்கை நிலுவையில் உள்ளவர்களுக்கு வேலை பார்க்க கட்டுப்பாடுகளை ஏற்படுத்தும் விதமான தற்காலிக வதிவிட உரிமை மட்டுமே வழங்குவது என்றும், நிரந்தர வதிவிட உரிமை வழங்குவதில்லை என்றுமான மாற்றத்தை இத்தேர்தலில் தமது கட்சி ஆட்சிக்கு வந்தால் ஏற்படுத்தும் என அப்பாட் கூறினார்.

தஞ்சக் கோரிக்கை மறுக்கப்பட்டவர்களுக்கு அம்முடிவை எதிர்த்து மேல்முறையீடு செய்ய இருந்துவரும் உரிமை ரத்து செய்யப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

அவுஸ்திரேலியாவில் தஞ்சக் கோரிக்கையாளர்கள் விவகாரம் தேர்தல் வெற்றிக்கு உதவும் என்று இரண்டு முக்கியக் கட்சிகளும் நம்புவதால், இந்த விவகாரத்தில் யார் மிகவும் கடுமையான நிலைபாட்டை எடுப்பது என்பதில் அவற்றின் தலைவர்கள் போட்டிபோடும் ஒரு சூழல் காணப்படுவதாக சிட்னியிலுள்ள பிபிசி செய்தியாளர் கூறுகிறார்.