சேலையில் கழுத்து இறுகி சிறுவன் பலி..!

496

childகாலி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பிரதேசத்தில் 11 வயதுச் சிறுவன் ஒருவன் கழுத்து இறுகி உயிரிழந்த சம்பவம் தொடர்பில் பொலிஸர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

பொலிஸ் அவசர அழைப்பு பிரிவுக்கு கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டை தொடர்ந்து விசாரணைகள் மேற்கொள்ளப்படுகின்றன.

தலாபிட்டிய, காலி பிரதேசத்தைச் சேர்ந்த சிறுவன் ஒருவனே இவ்வாறு உயிரிழந்துள்ளான்.

சிறுவனது தாயார் வெளிநாட்டு பயணத்தை மேற்கொண்டுள்ள நிலையில் தந்தை காலி ஹோட்டல் ஒன்றில் வேலை செய்து வருகிறார்.

இந்நிலையில் சிறுவன் தனது பாட்டியின் பாதுகாப்பில் மூத்த மற்றும் இளைய சகொதரர்களுடன் வசித்து வந்துள்ளார்.

சே​லையினால் ஆன ஊஞ்சலில் விளையாடிக் கொண்டிருக்கும்போது அதில் கழுத்து இறுகி சிறுவன் உயிரிழந்திருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

சிறுவனது சடலம் காலி, கராப்பிட்டி வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.

பிரேத பரிசோதனைகள் இன்று (18) இடம்பெறவுள்ளது.