இலங்கையில் நடைபெறவுள்ள பொதுநலவாய நாடுகளின் மாநாட்டை எந்த ஒரு பொதுநலவாய நாடும் புறக்கணிக்காது என மாநாட்டின் செயற்குழு தெரிவித்துள்ளது.
இந்த மாநாட்டுகக்கான ஏற்பாடுகளை கண்காணிப்பதற்காக, பொதுநலவாய நாடுகளின் செயற்குழு பணிப்பாளர் ரிச்சர்ட் உகு உள்ளிட்ட, 17 நாடுகளின் பிரதிநிதிகள் இலங்கை வந்துள்ளனர்.
இந்த நிலையில் நேற்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த ரிச்சர்ட் உகு, இந்த முறை இலங்கையில் நடைபெறும் மாநாட்டில் அனைத்து நாடுகளும் பங்கேற்கும்.
எந்த ஒருநாடும் இதனை புறக்கணிக்காது என்று தெரிவித்துள்ளார். இலங்கையின் மனித உரிமை மீறல்களை கருத்தில் கொண்டு, இந்த மாநாட்டை கனடா புறக்கணிக்கும் என்று தெரிவிக்கப்பட்டு வந்தது.
எனினும் கனடாவும் இந்த மாநாட்டில் கலந்துக் கொள்ளும் என்று அவர் தெரிவித்துள்ளார்.