5ம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சை வகுப்புக்களை நடாத்தத் தடை..!

356

examஐந்தாம் ஆண்டு புலமைப் பரில் பரீட்சை வகுப்புக்களை நடாத்தத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இன்று நள்ளிரவு முதல் எதிர்வரும் 25ம் திகதி வரையில் புலமைப் பரிசில் பரீட்சை வகுப்புக்களை நடாத்தக் கூடாது என உத்தரவிடப்பட்டுள்ளது.

வகுப்புக்களையோ அல்லது கருத்தரங்குகளையோ நடத்தக் கூடாது என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

ஐந்தாம் புலமைப் பரிசில் பரீட்சை எதிர்வரும் 25ம் திகதி நடைபெறவுள்ளது.

மாதிரிப் பரீட்டைகள், கருத்தரங்குகள், வகுப்புக்கள், மீட்டல் வகுப்புக்கள் உள்ளிட்ட எந்தவொரு பரீட்சை வழிகாட்டல் நடவடிக்கைகளையும் நாளை முதல் பரீட்சை இடம்பெறும் நாள் வரையில் மேற்கொள்ளக் கூடாது என உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்த உத்தரவினை மீறிச் செயற்படுவோர் தொடர்பில் அருகில் இருக்கும் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்ய முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.