வடக்கில் 4 தொகுதிகளில் அரசாங்கம் வெல்லும் – டளஸ் அழகப்பெரும..!

399

votingகருத்து கணிப்புகளுக்கு அமைய எதிர்வரும் மாகாண சபைத் தேர்தலில் வடமேல் மாகாணத்தில் 19 தொகுதிகளிலும், மத்திய மாகாணத்தில் 21 தொகுதிகளில் 20 தொகுதிகளிலும் வடக்கில் 14 தொகுதிகளில் 4 தொகுதிகளிலும் அரசாங்கம் வெற்றிபெறும் என அமைச்சர் டளஸ் அழகப்பெரும தெரிவித்தார்.

கொழும்பில் இன்று மதியம் நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் அவர் இதனை கூறினார்.

வடக்கில் உள்ள தேர்தல் தொகுதிகளில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு 5 தொகுதிகளை கைப்பற்றும் ஏனைய 05 தொகுதிகளில் நிச்சயமற்ற நிலைமை காணப்படுகிறது.

தேர்தல் நடைபெறவுள்ள மூன்று மாகாணங்களில் ஜனாதிபதி கலந்து கொள்ளும் 14 கூட்டங்கள் நடத்தப்பட உள்ளன. 54 தொகுதிகளில் 54 கூட்டங்களும் நடத்தப்பட உள்ளன.

சுதந்திரமாகவும் அமைதியான முறையிலும் தேர்தல் பிரசாரங்களில் ஈடுபடுமாறு ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் வேட்பாளர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது என அவர் மேலும் தெரிவித்தார்.