2014 அரசாங்கத்தின் மொத்த செலவு 1542 பில்லியன்..!
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ சமர்பித்த வரவு - செலவுத் திட்டத்தின் படி 2014ம் நிதியாண்டின் அரசின் மொத்த செலவு 1542 பில்லியனாகும்.
அதில் அதிகபடியான 253,9 பில்லியன் நிதி பாதுகாப்பு மற்றும் நகர அபிவிருத்தி...
க.பொ.த. உயர்தரப் பரீட்சை பெறுபேறு! டிசம்பர் 24 க்கு முன் வெளிவரும் – பரீட்சைகள் திணைக்களம்..!
கடந்த ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளை எதிர்வரும் டிசம்பர் மாதம் 24ம் திகதிக்கு முன்னர் வெளியிட உத்தேசிக்கப்பட்டுள்ளதாக இலங்கைப் பரீட்சைகள் திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் ஜயந்த...
இலங்கை ஜனநாயக நாடு என்பதற்கு வடக்கு தேர்தல் சான்று: வரவு-செலவு திட்ட உரையில் ஜனாதிபதி..!
இலங்கை ஜனநாயக சோஷலிஸ குடியரசின் 68 ஆவது வரவு- செலவுத் திட்டத்தை ஜனாதிபதியும் நிதியமைச்சருமான மகிந்த ராஜபக்ஷ நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்துள்ளார்.
அவர் சமர்ப்பித்த வரவு செலவுத் திட்டத்தில் வாசிக்கப்பட்டவை:
வெளிநாட்டு வேலைவாய்ப்பு வருமான 7000 மில்லியன்...
கமரூனின் மனித உரிமைகள் தொடர்பான கருத்துக்களுக்கும் கொழும்பு பிரகடனத்துக்கும் எவ்வித தொடர்புமில்லை – அரசாங்கம்..!
பொதுநலவாய மாநாட்டின் இறுதியில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவினால் கைச்சாத்திடப்பட்ட கொழும்பு பிரகடனத்தில், மனித உரிமைகள் விவகாரம் தொடர்பில் இலங்கைக்கெதிராக அழுத்தம் கொடுக்கக் கூடிய எந்தவொரு கருத்துக்களும் இடம்பெற்றிருக்கவில்லையென பிரதம கொரடாவும், அமைச்சருமான தினேஷ்...
முத்தையா முரளிதரனுக்கு எதிராக போராட்டம் மேற்கொள்வதற்கு தயார்! தமிழ் தேசியக் கூட்டமைப்பு எச்சரிக்கை..!
பிரித்தானிய பிரதம மந்திரி டேவின் கமரூனின் யாழ்ப்பாண பயணம் குறித்து, முன்னாள் கிரிககெட் பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரன் வெளியிட்டிருந்த கருத்துக்கு, தமிழ் தேசிய கூட்டமைப்பு கடும் கண்டனத்தையும் எச்சரிக்கையையும் விடுத்துள்ளது.
பொதுநலவாய நாடுகளின்...
புதிய படம் தயாரிக்க சனல் 4 தொலைக்காட்சிக்கு அரசாங்கம் தகவல் வழங்கியுள்ளது – ஐ.தே.க..!
இலங்கை குறித்து புதிய படம் ஒன்றை தயாரிக்கவென சனல் 4 தொலைக்காட்சியின் ஊடகவியலாளர் குழுவிற்கு அரசாங்கம் தகவல் வழங்கியுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சி குற்றம் சுமத்தியுள்ளது.
சனல் 4 ஊடகவியலாளர்களுக்கு விசா வழங்கி அவர்களை...
பாதுகாப்பு தலைக்கவச புதிய சட்டம் தற்காலிகமாக இடைநிறுத்தம்..!
மோட்டார் சைக்கிளில் செல்வபவர்களுக்கு தலைக்கவசம் குறித்து பிறப்பிக்கப்பட்ட புதிய சட்டத்தை செயற்படுத்துவது தற்காலிகமாக இடைநிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
புதிய சட்டத்தை பயன்படுத்தி பெரிய வியாபாரிகள் அதிக பணம் கொடுத்து தலைக்கவசம் கொள்வனவு செய்கின்ற போதும் குறைந்த...
நெறிமுறைகளை மீறிவிட்டார் – கெமரூன் மீது இலங்கை பாய்ச்சல்..!
பிரித்தானியப் பிரதமர் டேவிட் கெமரூக் இராஜதந்திர நெறிமுறைகளை மீறிவிட்டதாக இலங்கை அரசாங்கம் குற்றம்சாட்டியுள்ளது.
இலங்கை அரசாங்க வட்டாரங்களை மேற்கோள்காட்டி, பிபிசி வெளியிட்டுள்ள செய்தியில், இலங்கைக்கான பயணத்தின் போது பிரித்தானியப் பிரதமர் டேவிட் கெமரூன் பலமுறை...
யாழ். கொக்குவில் பகுதியில் கைவிடப்பட்ட நிலையில் சிசு மீட்பு!!
யாழ்ப்பாணம் கொக்குவில் சம்பியன் வீதியில் கைவிடப்பட்ட நிலையில் அநாதரவாகக் கிடந்த பிறந்து ஒரு நாளேயான ஆண் குழந்தை ஒன்று மீட்கப்பட்டுள்ளது.
நேற்று காலை 6 மணியளவில் உரப்பையில் சுற்றப்பட்ட நிலையில் இப்பகுதியில் இந்த சிசு...
சவுதியில் தங்கியிருக்கும் 1500 பேரை உடனடியாக அழைத்துவர நடவடிக்கை..!
பொது மன்னிப்புக் காலம் முடிவடைந்த நிலையில் சவுதி அரேபியாவில் சட்டவிரோதமாக தங்கியிருக்கும் இலங்கை பணியாளர்களை உடனடியாக நாட்டிற்கு அழைத்து வருவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாக வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.
சட்டவிரோதமான முறையில் சவுதி...
சுதந்திரமான போர் குற்ற விசாரணைக்கு வலியுறுத்தினேன் : டேவிட் கெமரூன்!!
யுத்தக் குற்றம் குறித்து உண்மையான, வெளிப்படையான, சுதந்திர விசாரணை நடத்தப்பட வேண்டும் என இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் வலியுறுத்தியதாக பிரித்தானிய பிரதமர் டேவிட் கெமரூன் தெரிவித்துள்ளார்.
இலங்கை விஜயம் குறித்து பிரித்தானிய பிரதமர்...
மனித உரிமைகளை பாதுகாக்க இலங்கை நடவடிக்கை எடுக்க வேண்டும் : சீனா!!
இலங்கை மனித உரிமைகளை பாதுகாக்கவும் அதனை ஊக்குவிக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சீன அரசாங்கம் தெரிவித்துள்ளது.
பீஜிங்கில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பொன்றில் ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்தபோதே சீன வெளிவிவகார...
போர் குற்றங்கள் தொடர்பில் சிலர் பகல் கனவு காண்கின்றனர் : மகிந்த ராஜபக்ச!!
போர்க்குற்ற விசாரணைகள் தொடர்பில் சிலர் பகல் கனவு காண்பதாக ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்தார்.
கொழும்பு தெமட்டகொட சேன்புர தொடர் மாடி வீடுகளை திறந்து வைக்கும் வைபவத்தில் நேற்று கலந்து கொண்டு உரையாற்றும் போதே...
டேவிட் கமரூனுக்கு எதிராக ராஜதந்திர ரீதியில் எதிர்ப்பை வெளியிட வேண்டும் : வாசுதேவ நாணயக்கார!!
பொதுநலவாய நாடுகளின் மாநாட்டில் கலந்து கொண்ட பிரித்தானிய பிரதமர் டேவிட் கமரூன், இலங்கைக்கு எதிராக வெளியிட்ட கருத்து தொடர்பில் ராஜதந்திர ரீதியில் எதிர்ப்பை வெளியிட வேண்டும் என அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்தார்....
லொரி மோதி முதியவர் பலி: சாரதி விளக்கமறியலில்..!
கிரான்பாஸ், சிறிமாவோ பண்டாரநாயக்க வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் முதியவர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
நேற்று இகுருகடை சந்தியில் இருந்து ஆமர்வீதி நோக்கி பயணித்த லொரி ஒன்று முதியவர் மீது மோதியுள்ளது.
இதன்போது படுகாயமடைந்த அவர் கொழும்பு...
முஸ்லிம்களின் பிரச்சினை குறித்து இரண்டு வாரத்திற்குள் கடிதம் அனுப்புமாறு இந்தியா கோரிக்கை..!
இலங்கையிலுள்ள முஸ்லிம் மக்களுக்கு இந்தியாவின் பங்களிப்பு போதுமான வகையில் இல்லை என்று இந்திய வெளியுறவு அமைச்சருக்கு உள்ளூர் முஸ்லிம் அமைச்சர்களால் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த பல ஆண்டுகளாக இலங்கையிலுள்ள முஸ்லிம்கள் எதிர்கொண்ட பிரச்சினைகள் இந்திய அரசின்...







