இலங்கை செய்திகள்

பொது மன்னிப்பின் கீழ் 3000 இலங்கை பணியாளர்கள் நாடு திரும்பியுள்ளனர்..!

சவுதி அரேபிய அரசாங்கத்தால் வழங்கப்பட்ட பொது மன்னிப்பு காலத்தில், விசா காலாவதியாகியும் அந்நாட்டில் தங்கியிருந்த சுமார் 3000ற்கும் மேற்பட்ட இலங்கையர்கள் நாடு திரும்பியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. முதல்கட்ட குழுவாகவே இவர்கள் வந்துள்ளதாகவும் இன்னும் பலர் வரக்கூடும்...

மாகாண சபைத் தேர்தல்கள் – முஸ்லிம் காங்கிரஸ் தனித்து போட்டி!!

இலங்கையின் வடக்கு உட்பட மூன்று மாகாண சபைகளுக்கு நடைபெறவுள்ளத் தேர்தலில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தனித்து போட்டியிட முடிவு செய்துள்ளது.இதை அக்கட்சியின் பொதுச் செயலர் ஹஸன் அலி உறுதிப்படுத்தியுள்ளார். கடந்த மூன்று வாரங்களாக இது...

இலங்கை இளைஞர்கள் இருவர் பிரித்தானியாவில் கைது..!

இலங்கை இளைஞர்கள் இருவர் பிரித்தானியாவில் கைது செய்யப்பட்டுள்ளதாக பிரித்தானிய குடிவரவு குடியகழ்வு அமைச்சர் தெரிவித்துள்ளார். வீசா காலாவதியான நிலையிலும் பிரித்தானியாவில் தங்கியிருந்த குற்றத்திற்காகவே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். 21 மற்றும் 22 வயதுடைய இளைஞர்கள் இருவர்...

அவுஸ்திரேலியாவுக்கு 60 பேரை அனுப்பி வைத்த மூவர் கைது..!

சட்டவிரோதமான முறையில் அவுஸ்திரேலியாவிற்குச் செல்வதற்கு உதவிய குற்றசச்சாட்டின் பேரில் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். திக்வெல்ல பிரதேசத்தில் வைத்து இவர்கள் மூவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் மாவனல்லை, நீர்கொழும்பு மற்றும் நகுலுகமுவ பிரதேசங்களில் வசித்து வருபவங்கள் என...

ஐரோப்பிய ஒன்றிய பாராளுமன்ற தூதுக்குழு இலங்கை வருகை..!

ஒருவார கால உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு ஐரோப்பிய ஒன்றியப் பாராளுமன்றத்தூதுக்குழுவொன்று நேற்று இலங்கையை வந்தடைந்துள்ளதாக கொழும்பில் உள்ள ஐரோப்பிய ஒன்றிய காரியாலயம் தெரிவித்துள்ளது. தெற்காசிய நாடுகளுடனான உறவுகளுக்கான ஐரோப்பிய பாராளுமன்றத் தூதுக்குழுவின் தலைவரான ஜீன்...

வெளிநாட்டு ஊடகவியலாளர்களுக்கும் வீசா அனுமதி வழங்குமாறு பிரிட்டன் கோரிக்கை..!

இலங்கையில் எதிர்வரும் நவம்பர் மாதம் நடைபெறவுள்ள பொதுநலவாய மாநாட்டுக்குச் செல்ல பொதுநலவாய செயலகத்தின் அனுமதியை பெறுகின்ற எல்லா வெளிநாட்டு ஊடகவியலாளர்களுக்கும் இலங்கை அரசாங்கம் வீசா அனுமதி கொடுக்க வேண்டும் என்று பிரிட்டன் தெரிவித்துள்ளது. வெளிநாட்டு...

இளவரசன் மரணமானது எப்படி? – நாளை மர்ம முடிச்சுகள் அவிழும்..!

தர்மபுரி இளவரசன் தற்கொலை செய்து கொண்டதாக போலீசும், சாவில் சந்தேகம் இருப்பதாக பெற்றோர் மற்றும் உறவினர்களும் கூறினார்கள். எனவே இளவரசன் பிணத்தை மீண்டும் பரிசோதனை செய்ய உத்தரவிடக் கோரி சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு விசாரணையின் முடிவில், இளவரசன்...

சஞ்சீவ பண்டார பல்கலைக்கழகங்களுக்குள் செல்ல தடை..!

அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டாளரான சஞ்சீவ பண்டார பல்கலைக்கழக வளாகங்களிற்குள் நுழைவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினால் ஏற்பாடுசெய்திருந்த ஆர்ப்பாட்டத்தின் போது பொது மக்களுக்கு இடையூறு விளைவித்ததாக  குற்றம் சாட்டப்பட்டு...

கூட்டமைப்பின் முதலமைச்சர் வேட்பாளராக விக்னேஸ்வரன் அறிவிப்பு..!

வடமாகாண சபைத் தேர்தலுக்கான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முதலமைச்சர் வேட்பாளராக முன்னாள் பிரதம நீதியரசர் சி.வி. விக்னேஸ்வரன் நியமிக்கப்பட்டுள்ளார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்றக் குழுத் தலைவர் இரா.சம்பந்தன் இந்த அறிவிப்பை விடுத்துள்ளார். பம்பலப்பிட்டியிலுள்ள கூட்டமைப்பின்...

கூட்டமைப்பின் முதலமைச்சர் வேட்பாளர் குறித்து இன்று இறுதி தீர்மானம்..!

வடமாகாண சபைத் தேர்தலுக்கான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முதலமைச்சர் வேட்பாளராக முன்னாள் பிரதம நீதியரசர் சி.வி. விக்னேஸ்வரனை நியமிப்பதற்கு அக் கட்சியினர் தீர்மானித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முதலமைச்சர் வேட்பாளர் தொடர்பில்...

மூழ்கிய கப்பலில் இருந்த இலங்கையர்களை காணவில்லை..!

சோமாலியாவில் கடந்த இரண்டு ஆண்டுகளாக கடற்கொள்ளையர்களின் பிடியிலிருந்தபோது, கடந்தவாரம் கடலில் மூழ்கிய கப்பலில் இருந்த 11 கப்பல் பணியாளர்கள் உயிர்தப்பியுள்ளதாக அந்தப் பிராந்திய கடற்பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கடற்கொள்ளையர்களின் பிடியிலுள்ள இன்னொரு மீன்பிடி கப்பலுக்கு...

தொலைபேசியில் அச்சுறுத்தல் வந்தால் உடனடியாக பொலிஸாரை நாடவும்..!

தொலைபேசி மூலமாக பலரை அச்சுறுத்தி பணம் பறிப்பது தொடர்பில் அதிகளவான முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது. இது தொடர்பில் பொலிஸ் தலைமையகம் விசெட அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. பணம் கேட்டு அச்சுறுத்தும் நபர்கள்...

கூட்டமைப்பின் முதலமைச்சர் வேட்பாளர் நாளை அறிவிப்பு..!

வடமாகாண சபைத் தேர்தலுக்கான முதலமைச்சர் வேட்பாளர் அறிவிப்பு நாளை விடுக்கப்படும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. நேற்று நடைபெறவிருந்த அக் கட்சியின் விசேட கூட்டம் நாளைவரை ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ சுமந்திரன்...

உயர்தர பரீட்சை அனுமதிப்பத்திரம் விநியோகம் ஆரம்பம்..!

இம்முறை இடம்பெறவுள்ள கல்விப் பொது தராதர உயர் தரப் பரீட்சைக்கு விண்ணப்பித்த 292,706 விண்ணப்பதரர்களுக்கான பரீட்சை அனுமதிப் பத்திரம் தபாலிடப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. பாடசாலை பரீட்சாத்திகளுக்கான பரீட்சை அனுமதிப்பத்திரம் பாடசாலை அதிபர்களுக்கு விநியோகிக்கப்பட்டுள்ளது. இதேவேளை...

புத்தளத்தில் தமிழ் வர்த்தகர் கடத்தல்..!

சிவப்பு நிற காரில் வந்த சிலர் வர்த்தகர் ஒருவரை கடத்திச் சென்றுள்ளதாக முறைப்பாடு கிடைத்துள்ளதென புத்தளம் பொலிஸார் தெரிவித்தனர். நேற்று மாலை இந்த கடத்தல் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர். உடப்பு - ஆனமடு பகுதியைச்...

கனடா அழைத்துச் செல்வதாகக் கூறி பண மோசடி செய்த பெண் கைது..!

கனடா நாட்டிற்கு அழைத்து செல்வதாக, 210 இலங்கை தமிழர்களிடம், 2.10 கோடி இந்திய ரூபாய் வரை வசூல் செய்து விட்டு, தப்பி ஓட முயன்ற பெண்ணை, பாதிக்கப்பட்ட இலங்கை தமிழர்கள், ஆத்தூர் நீதிமன்றத்தில்...