நீரில் மூழ்கி பாடசாலை மாணவர் பலி..!
கட்டுநாயக்க - கொவின்ன கங்கையில் நீராடச் சென்ற பாடசாலை மாணவர்கள் இருவரில் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.
தரம் 8இல் கல்வி பயிலும் 13 வயதுடைய மாணவரே உயிரிழந்துள்ளார்.
சடலம் நீர்கொழும்பு வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
வட மாகாணத்திற்கும் புதிதாக தாவரவியல் பூங்கா..!
முப்பது வருட யுத்தம் நிறைவு பெற்ற வட மாகாணத்தில் புதிதாக தாவரவியல் பூங்கா ஒன்று அமைக்கப்படும்.எதிர் வரும் டிசம்பர் மாதத்துக்கு முன்னர் தாம் இந்த பூங்காவை அமைக்க திட்டமிட்டுள்ளதாக தாவரவியல் பூங்கா மற்றும்...
இலங்கையில் உரப் பற்றாக்குறை: கவலையில் விவசாயிகள்
இலங்கையில் உரத்திற்கு ஏற்பட்டுள்ள தட்டுப்பாடு காரணமாக விவசாயிகள் பெரும் சிரமங்களை எதிர்கொள்வதாகக் கூறுகின்றார்கள்.
உரத்தின் விலை அதிகரித்ததையடுத்து, அரசாங்கம் மானிய விலையில் விவசாய சேவை நிலையங்களின் ஊடாக உரத்தை விவசாயிகளுக்கு விநியோகித்து வருகின்றது.
ஆயினும், இவ்வாறு...
புத்தளம் அரசாங்கப் பணியாளர்கள் அமைதி ஊர்வலம்..!
இலங்கையில் புத்தளம் மாவட்டத்தில் அரச அதிகாரி ஒருவர் பொதுமக்களால் தாக்கப்பட்ட சம்பவத்தைக் கண்டித்து அரசாங்க பணியாளர்கள் கண்டன ஊர்வலம் ஒன்றை நடத்தியுள்ளார்கள்.
உதவி அரசாங்க அதிபர் மாலிக் என்பவரும் அவரது வாகன ஓட்டுனரும் தாக்கப்பட்ட...
நீர்கொழும்பில் நைஜீரியா, கென்யா பிரஜைகள் கைது
நீர்கொழும்பு பொலிஸ் பிரிவில் நீர்கொழும்பு கடற்கரையில் வைத்து நைஜீரியா மற்றும் கென்யா நாட்டு பிரஜைகள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இலங்கையில் தங்கியிருக்க இவர்களிடம் விசா இருக்கவில்லை என நீர்கொழும்பு சுற்றுலா பொலிஸார் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள்...
கண்டியில் ஒரே பிரசவத்தில் ஐந்து குழந்தைகளை ஈன்றெடுத்த தாய்..!
கண்டி பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட 32 வயதுடைய கர்ப்பிணித் தாய் இன்று ஒரே பிரசவத்தில் ஐந்து குழந்தைகளை ஈன்றெடுத்துள்ளார்.
மடவல பிரதேசத்தைச் சேர்ந்த குறித்த தாய்க்கு நான்கு ஆண் குழந்தைகளும் ஒரு பெண் குழந்தையும் பிறந்துள்ளது.
இவ்...
குவைத்தில் இலங்கை பெண்ணை கொன்ற தமிழக இளைஞர்களின் மரண தண்டனை ரத்து..!
இலங்கை பெண் ஒருவரை கொலை செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட தமிழகத்தை சேர்ந்த இருவரின் மரண தண்டனையை குவைத் நீதிமன்றம் ரத்து செய்துள்ளது.
இந்தியா, நாகை மாவட்டம், முத்துபேட்டையை சேர்ந்தவர் 30 வயதான சுரேஷ் மற்றும்...
ராமேஸ்வரம் மீனவர்கள் 8 பேருக்கு விளக்கமறியல் நீடிப்பு..!
இலங்கை அநுராதபுரம் சிறையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த ராமேஸ்வரத்தைச் சேர்ந்த 8 மீனவர்களுக்கும் விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.
குறித்த மீனவர்கள் இன்று மன்னார் நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்ட போது எதிர்வரும் ஜூலை 11ம் திகதிவரை அவர்களை...
தம்புள்ளையில் சட்டவிரோத கருக்கலைப்பு நிலையம் முற்றுகை..!
உள்நாட்டு மருந்துகளை பயன்படுத்தி இயங்கி வந்த சட்டவிரோத கருக்கலைப்பு மத்திய நிலையம் ஒன்றை தம்புள்ளை பொலிஸ் நிலைய அதிகாரிகள் சுற்றிவளைத்துள்ளனர்.
தம்புள்ளை பொலிஸாருக்கு கிடைத்த தகவல் ஒன்றை அடுத்து முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கையில் தம்புள்ளை...
மாதுருஓயா காட்டுப் பகுதியில் தீ..!
மகாஓயா பிரதேசத்தில் அரலங்வில வீதியில் மாதுருஓயா காட்டுப் பகுதியில் தீ பரவல் ஏற்பட்டுள்ளது.
நேற்று இத் தீ பரவல் ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
தற்போது பொலிஸ், இராணுவம், விமானப் படை மற்றும் இடர்...
அதிகரிக்கப்பட்ட பஸ் கட்டண அறிவிப்பு இன்று..!
பஸ் கட்டண அதிகரிப்பு தொடர்பில் இன்று பஸ் சங்க உறுப்பினர்களுக்கிடையே விசேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெறவுள்ளதாக தனியார் பஸ் போக்குவரத்து அமைச்சு தெரிவித்துள்ளது.
ஜூலை மாதம் முதலாம் திகதியிலிருந்து பஸ் கண்டன அதிகரிப்பு...
தொலைபேசியில் காதல் வலை வீசி பல பெண்களை ஏமாற்றிய காதல் மன்னன் கைது..!
பல பெண்களை கையடக்கத்தொலைபேசி மூலம் ஏமாற்றி பணம் மற்றும் நகைகளை பறித்து வந்த நுவரெலியாவைச் சேர்ந்த இளைஞர் ஒருவரை மட்டக்களப்பு தலைமையக பொலிஸார் கைது செய்துள்ளனர்.
கல்முனை பஸ் தரிப்பு நிலையத்தில் வைத்து 32...
நாயை கடித்துக் குதறிய இளைஞன் வைத்தியசாலையில் அனுமதி..!
யாழ்ப்பாணம், திருநகர் பகுதியைச் சேர்ந்த இளைஞன் ஒருவர் மதுபோதையில் தன்னைக் கடிக்க வந்த நாயைக் கடித்து குதறியதால் மயக்கமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,
இன்று (26) காலை மதுபோதையில் துவிச்சக்கர...
நாடு திரும்புவோரின் பாதுகாப்புக்கு உத்தரவாதம் -அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ்..
இலங்கையிலிருந்து வெளிநாடுகளுக்குச் செல்வோரின் புகலிடக் கோரிக்கைகளின் உண்மைத்தன்மை குறித்து தனக்கு உடன்பாடில்லையென அவுஸ்திரேலிய வலையமைப்பில் உள்ள நியூஸ்லைன் இணையத்தளத்திற்குத் தெரிவித்துள்ள அமைச்சர் பீரிஸ் அவர்கள் இலங்கையில் ஆபத்து எதனையும் எதிர்நோக்கவில்லையென்பதில் அவுஸ்திரேலியா நம்பிக்கை...
வடமாகாண இளைஞர்களுக்கு தொழில் பயிற்சி..!
வட மாகாணத்தில், 1000 இளைஞர்களுக்கு தொழில் பயிற்சி வழங்க வடமாகாண சபையினால் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பினைப் பெற்றுக்கொடுக்கும் நோக்கில் சர்வதேச செஞ்சிலுவைச் சம்மேளனமும் தொழிற் பயிற்சி அதிகார சபையும் இந்த பயிற்சிகளை...
இலங்கை குறித்த மத்திய அரசின் கொள்கையில் திருப்தியில்லை – பாஜக..!
இலங்கை குறித்த இந்திய மத்திய அரசாங்கத்தின் கொள்கைகள் திருப்தி அளிக்கும் வகையில் இல்லை என பாரதீய ஜனதா கட்சி தெரிவித்துள்ளது.
மத்திய அரசாங்கத்தின் பலவீனமான வெளியுறவுக் கொள்கைகளின் காரணமாக இலங்கையுடனான உறவுகளில் விரிசல் நிலைமை...