சடலத்துடன் தகாத உறவு கொண்ட மூவர் : டிக்கோயா கிளங்கன் ஆதார வைத்தியசாலையில் சம்பவம்!!

டிக்கோயா கிளங்கன் ஆதார வைத்தியசாலையில் பிணவறையில் வைக்கப்பட்டிருந்த இறந்த பெண் ஒருவரின் சடலத்துடன் தகாத உறவு கொண்ட மூன்று வைத்தியசாலை ஊழியர்கள் தொடர்பாக, டிக்கோயா ஆதார வைத்தியசாலைக்கு முன் பொது மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

குறித்த போராட்டமானது இன்று (03.02.2026) முன்னெடுக்கப்பட்டுள்ளது. டிக்கோயா ஆதார வைத்தியசாலையில் பிணவறையில் வைக்கப்பட்டிருந்த 23 வயது பெண்ணின் சடலத்தை இரவு நேரத்தில் மூன்று வைத்தியசாலை ஊழியர்கள் பாலியல் வன்கொடுமை செய்ததாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பாக,

மருத்துவமனை நிர்வாகத்திற்கு எதிராக தோட்டத் தொழிலாளர்கள் குழு ஒன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஹட்டன் பொலிஸ் பிரிவில் உள்ள அபோஸ்லி தோட்டத்தைச் சேர்ந்த 23 வயதுடைய எஸ். ஹரினி என்ற பெண், குடும்ப தகராறு காரணமாக கடந்த 23 ஆம் திகதி தனது வீட்டில் தற்கொலை செய்து கொண்டதை அடுத்து,

ஹட்டன் பொலிஸ் அதிகாரிகள் முறையான விசாரணை நடத்தி, உடலை பிரேத பரிசோதனைக்காக டிக்கோயா ஆதார வைத்தியசாலையின் தடயவியல் நிபுணரிடம் ஒப்படைத்தனர்.

அன்றிரவு சடலம் டிக்கோயா ஆதார வைத்தியசாலையில் பிண அறையில் வைக்கப்பட்டது.

அன்று அதிகாலை பிணவறைக்குள் நுழைந்த டிக்கோயா ஆதார வைத்தியசாலையின் மூன்று ஊழியர்கள் பூட்டுகளை உடைத்து உடலில் இருந்து துணிகளை அகற்றி காணப்பட்டதாக வைத்தியசாலையின் பிரேத அறை மேலாளர் டிக்கோயா ஆதார வைத்தியசாலை பணிப்பாளரிடம் புகார் அளித்துள்ளார்.

எனினும் இந்த சம்பவம் தொடர்பாக வைத்தியசாலை நிர்வாகம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனக் கூறி, தோட்டத் தொழிலாளர்கள் மற்றும் அரசியல் சார்ந்த தலைவர்கள் குழு (03) காலை டிக்கோயா ஆதார மருத்துவமனைக்கு முன்னால் உள்ள ஹட்டன்- பொககவந்தலாவ பிரதான வீதியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த சம்பவம் தொடர்பாக இதுவரை எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து வைத்தியசாலை பணிப்பாளர் மற்றும் மருத்துவமனை நிர்வாகத்தை அழைக்குமாறு நோர்வூட் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியிடம் போராட்டக்காரர்கள் கோரிக்கை விடுத்தனர்.

இந்த கோரிக்கையைத் தொடர்ந்து, நோர்வூட் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி, டிக்கோயா ஆதார மருத்துவமனையின் இயக்குநர் டாக்டர் எம்.எஸ். ஃபஸீல் ஆகியோருடன் சேர்ந்து போராட்டக்காரர்களிடம் வந்து,

சம்பவம் குறித்து அறிந்ததும், மருத்துவமனையின் பாதுகாப்பு கேமரா அமைப்பு சரிபார்க்கப்பட்டதாகவும், மருத்துவமனை ஊழியர்கள் மூன்று பேர் (24) அதிகாலையில் பிணவறைக்குச் சென்றதை தரவுத்தளத்தில் பதிவு செய்துள்ளதாகவும் கூறியுள்ளார்.

போராட்டக்காரர்களின் கோரிக்கை

அதன்படி, சம்பவம் குறித்து விசாரிக்க மருத்துவமனை நிபுணர்களைக் கொண்ட மூன்று பேர் கொண்ட குழு நியமிக்கப்பட்டது,

மேலும் அந்தக் குழு (03) இன்று விசாரணையைத் தொடங்கி உள்ளது எனவும் விசாரணை பாரபட்சமின்றி நடத்தப்படும் என்றும், மருத்துவமனை ஊழியர்கள் யாராவது தவறு செய்திருந்தால் அதிகபட்ச ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மருத்துவமனை இயக்குநர் போராட்டக்காரர்களிடம் கூறியுள்ளார்.

தற்போதைய சூழ்நிலையில், சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு வரும் பெண்களின் பாதுகாப்பு குறித்து சிக்கல் இருப்பதாகவும், சம்பவம் குறித்து விசாரிக்க நியமிக்கப்பட்ட மூன்று பேர் கொண்ட குழு நடத்தும் விசாரணையில் தங்களுக்கு நம்பிக்கை இல்லை என்றும், அதன்படி, பொலிஸாரே விசாரணை நடத்த வேண்டும் என்றும் போராட்டக்காரர்கள் கூறியுள்ளனர்.

சம்பவத்தில் தொடர்புடைய மூன்று மருத்துவமனை ஊழியர்களையும் பொலிஸ் காவலில் எடுத்து விசாரணை நடத்த வேண்டும் என்ற போராட்டக்காரர்களின் கோரிக்கைக்கு பதிலளிக்கும் விதமாக, மருத்துவமனை இயக்குநர், ஹட்டன் பொலிஸாரிடம் சென்று இது தொடர்பாக முறைப்பாடு பதிவு செய்து, மூன்று ஊழியர்களையும் கைது செய்யுமாறு பொலிஸாரிடம் கோரிக்கை வைப்பதாகக் கூறியுள்ளார்.

குறித்த சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

குற்றங்கள் தொடர்பில் இறுக்கமான சட்டங்களை கொண்டு மூன்று நபர்களுக்கும் அதிகபட்ச தண்டனை வழங்கப்படலாம் என போராட்டக்காரர்கள் சார்பில் எதிர்ப்பார்க்கப்படுகிறது.

பற்றி எரியும் வளைகுடா : கொழும்பிலிருந்து துபாய்க்கு செல்லும் முதல் விமானம்!!

கொழும்புக்கும் துபாய்க்கும் இடையிலான விமானங்களை முதலாவதாக இலங்கை விமான நிறுவனமாக ஃபிட்ஸ்ஏர் மீண்டும் ஆரம்பித்துள்ளது.

மத்திய கிழக்கில் நடந்து வரும் போரின் காரணமாக பல வான்பரப்புக்கள் மூடப்பட்டுள்ள நிலையில் பல பிராந்திய விமான நிறுவனங்கள் நடவடிக்கைகளை நிறுத்தி வைத்திருக்கின்றன. இதற்கிடையில், விமான ஃபிட்ஸ்ஏர் நிறுவனம் மீண்டும் சேவைக்குத் திரும்பியுள்ளது.

அவசரமாகப் பயணம் செய்ய, குடும்பத்தினருடன் மீண்டும் ஒன்றிணைய அல்லது முக்கியமான கடமைகளில் கலந்து கொள்ள வேண்டிய பயணிகளுக்கு ஃபிட்ஸ்ஏரின் இந்த நடவடிக்கை நிவாரணத்தையும் வசதியையும் வழங்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பிராந்தியத்தில் நிலையற்ற சூழ்நிலை இருந்தபோதிலும், பயணிகளின் பாதுகாப்பு மற்றும் நேரத்தை கடைபிடிப்பதற்கு முன்னுரிமை அளித்து, சீரான, நம்பகமான மற்றும் தொந்தரவு இல்லாத பயண அனுபவத்தை தொடர்ந்து வழங்குவதாக விமான நிறுவனம் ஒரு அறிக்கையில் உறுதியளித்துள்ளது.

அத்துடன், மத்திய கிழக்கு முழுவதும் வான்வெளியில் மோதல் தொடர்ந்து பாதிப்பை ஏற்படுத்தி வருவதால், பயணிகள் www.fitsair.com என்ற இணைய தளத்தில் ஒன்லைனில் டிக்கெட்டுகளைப் பெறலாம் மற்றும் புதுப்பிக்கப்பட்ட பயணத் தகவல்களை அணுகலாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

உலக சந்தையில் எரிவாயு விலையில் ஏற்பட்ட திடீர் மாற்றம் : ஆசியாவில் கடுமையான தாக்கம்!!

அமெரிக்காவும் இஸ்ரேலும் வார இறுதியில் ஈரானை தாக்கத் தொடங்கியதிலிருந்து உலகளாவிய எண்ணெய் மற்றும் எரிவாயு விலைகள் உயர்ந்துள்ளன.

ஈரானின் ஹோர்முஸ் நீரிணையை மூடும் முடிவால் ஆசிய மற்றும் ஐரோப்பிய சந்தைகள் கடுமையாக பாதிக்கப்படும் என தொழில்துறை ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர்.

உலகின் மிகப்பெரிய ஏற்றுமதியாளர்களில் ஒன்றான கத்தார் எனர்ஜி, அதன் உற்பத்தி நடவடிக்கைகளை தற்காலிகமாக நிறுத்தியுள்ளது. இதனையடுத்து சடுதியாக எல்என்ஜி இயற்கை எரிவாயு விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ளன.

உலகின் ஐந்தில் ஒரு பங்கு எல்என்ஜி ஹோர்முஸ் நீரிணை வழியாக செல்கிறது. மேலும் கத்தார் அதன் எல்என்ஜி ஏற்றுமதியில் 90 சதவீதம் ஓமன் மற்றும் ஈரானுக்கு இடையே உள்ள ஹோர்முஸ் நீரிணை வழியாக கொண்டு செல்கிறது.

சீனா, இந்தியா, தாய்வான் மற்றும் தென் கொரியா ஆகியவை எல்என்ஜி எரிவாயு விநியோகத்தில் அதிகம் பாதிக்கப்படும் ஆசிய நாடுகளில் அடங்கும் என ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

5 இலட்சத்தை நோக்கி நகரும் தங்கத்தின் விலை : தங்க வரலாற்றில் பதிவாகும் தலைகீழ் மாற்றம்!!

கொழும்பு செட்டியார்தெருவின் இன்றைய தகவல்களின் படி 22 கரட் தங்கப் பவுணொன்றின் விலை 393000 ரூபாவாக பதிவாகியுள்ளது. அத்துடன் 24 கரட் தங்கப்பவுணொன்றின் விலையானது 425000 ரூபாவாக பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதேவேளை உலக சந்தையில் இன்றைய நிலவரப்படி ஒரு அவுண்ஸ் தங்கத்தின் விலை சுமார் USD 5,360 முதல் 5,380 டொலர்களாக பதிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த நிலையில் இலங்கையிலும், உலக சந்தையிலும் தங்கத்தின் விலையானது வரலாறு காணாத அளவிற்கு அதிகரிக்கும் சாத்தியம் உள்ளதாக பொருளாதார ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

 

நடுவீதியில் கை, கால்கள் ஒன்றாக கட்டப்பட்டு இளைஞர் கொலை!!

களுத்துறை – பாணந்துறையில் கை,கால்கள் கட்டப்பட்ட நிலையில் இளைஞரொருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

குறித்த சடலம் இன்று (03) காலை பாணந்துறை – கொழும்பு பழைய வீதியில் பாணந்துறை தெற்கு பொலிஸாரால் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு உயிரிழந்தவர் பாணந்துறை வடக்கு, ஞானசேன மாவத்தையில் வசித்து வந்த 37 வயதுடைய ஒருவர் என தெரியவந்துள்ளது.

இந்த கொலை எவ்வாறு இடம்பெற்றது என்பது குறித்த தகவல்கள் இதுவரை வெளியாகவில்லை என தெரிவிக்கப்படுகின்றது. சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

எரிபொருள் தட்டுப்பாடு தொடர்பில் ஜனாதிபதி அநுர வெளியிட்ட அறிவிப்பு!!

ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க, நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடு இல்லை என குறிப்பிட்டுள்ளார். நாடாளுமன்றத்துக்கு இன்று முற்பகல் சமுகமளித்த அவர், கையிருப்பிலுள்ள எரிபொருளின் அளவு குறித்தும் விளக்கமளித்துள்ளார்.

மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள போர் பதற்றத்தை தொடர்ந்து, இலங்கையில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படலாம் என்ற அச்சம் நிலவி வருகின்றது.

அண்மைய நாட்களாக, நாட்டில் மக்கள் எரிபொருள் நிலையங்களில் வரிசையாக நின்ற நிலையில் எரிபொருளை கொள்வனவு செய்து வருகின்றனர்.

இதன் காரணமாக, அரசாங்கத்தினால் தொடர்ந்து, எரிபொருள் பற்றாக்குறை ஏற்படாது என வலியுறுத்தி வரப்படும் அதேவேளை, சட்டவிரோதமாக பதுக்கி வைப்பவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கப்பட்டு வந்தது.

இந்நிலையில், இன்றைய தினம், நாடாளுமன்றத்திற்கு சமுகமளித்த ஜனாதிபதி, டீசல் – 33 நாட்களுக்கும் பெட்ரோல் – 27 நாட்களுக்கும் விமான எரிபொருள் – 49 நாட்களுக்கும் மசகு எண்ணெய் – 44 நாட்களுக்கும் கையிருப்பில் உள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

அதேநேரம், மக்கள் இது தொடர்பில் தொடர்ந்து பதற்றம் கொள்ள தேவையில்லை எனவும் எரிபொருளை கொள்வனவு செய்ய வரிசையில் காத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை எனவும் அரசாங்கம் வலியுறுத்தி வருகின்றது.

 

15 நாடுகளுடன் போட்டியிட்டு சாதனை படைத்த ஈழத்தமிழன்!!

கிரீஸ் நாட்டில் நடைபெற்ற மேற்கு ஐரோப்பிய நாடுகளுக்கிடையிலான fruits and vegetable carving championship போட்டியில் பங்குபற்றி ஈழத்தமிழர் ஒருவர் சாதனை படைத்துள்ளார்.

இத்தாலி நாட்டின் போட்டியாளராக பங்கேற்ற chef தனுராஜ் ரவிராஜ் (தனு) என்பவரே இவ்வாறு வெற்றி பெற்றுள்ளார். இதன்போது தனுராஜ் ரவிராஜ்க்கு வெள்ளிப்பதக்கமும், Greece culinary professional என்னும் அதியுயர் விருதையும் வழங்கிக் கௌரவிக்கப்பட்டது.

அத்துடன், Serbia நாட்டைச்சேர்ந்த ICU Honorary Member DANIJELA PANTIC VLAHOVIC அவர்களிடருந்து சிறந்த ஆளுமைக்கான அங்கீகாரத்தையும் பெற்றுக்கொண்டார்.

இந்த போட்டியில் 15 நாடுகளை சேர்ந்த போட்டியாளர்கள் கலந்து கொண்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், நடுவர்களாக உலகத்தரம் வாய்ந்த போட்டிகளின் தமைமை நடுவர்களான Andy Cuthbert – President Worldchefs (World Association of Chefs Societies),

Dimitris Kyriakopoulos – President Culinary Professionals, George Damianou – Continental Director of Southern Europe, Roberto Beltramini – Chief of Judges, Christos Gkotsis – Organizing Chairman SECC 2026 ஆகியோர் கலந்து கொண்டனர்.

அவர்களின் மதிப்பீட்டிலேயே Chef தனுவிற்கான குறித்த அங்கீகாரம் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

 

இலங்கையிலிருந்து வெளிநாட்டுக்கு பொருட்களை அனுப்புவதில் சிக்கல்!!

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் போர் சூழ்நிலை காரணமாக பல்வேறு நாடுகளுக்கு பொருட்களை அனுப்புவதில் சிக்கல் நிலவுவதாக தபால் மா அதிபர் ஜெனரல் எஸ்.ஆர்.டபிள்யூ.எம்.ஆர்.பி. சத்குமார கூறியுள்ளார்.

இன்று ( 03) ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர், கடந்த வெள்ளிக்கிழமை ஏற்றுக்கொள்ளப்பட்ட பல பொருட்கள் இன்னும் அனுப்பப்படவில்லை.மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் சூழ்நிலை காரணமாக, சில பகுதிகளுக்கு பொருட்களை அனுப்புவது குறைவாக உள்ளது.

மேலும் சில பொருட்களை அனுப்புவதில் இடையூறுகள் இருக்கலாம்.சர்வதேச அஞ்சல் சேவைகள் நேரடியாக பாதிக்கப்பட்டுள்ளன.

குறிப்பாக அந்த பகுதிக்கான ஏராளமான விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதால் தாமதங்கள் குறித்து பொதுமக்களுக்குத் தெரிவிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மேலும் அந்தந்த நாடுகளின் அஞ்சல் நிர்வாகங்களுடன் தொடர்ந்து தொடர்பில் இருக்கின்றோம். சர்வதேச அஞ்சல் சேவைகள் இயல்புநிலைக்கு திரும்பியவுடன் மீண்டும் பொருட்களை அனுப்பும் நடவடிக்கை தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

குறிப்பாக அழியக்கூடிய பொருட்களினால், தாமதம் ஏற்படுவதால் ஆபத்துகள் உள்ளன என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

எனவே, தற்போதைய சூழ்நிலையைப் புரிந்துகொண்டு பொருட்களை வெளிநாடுகளுக்கு அனுப்ப நடவடிக்கை எடுக்குமாறு பொதுமக்கள் கேட்டுக் கொள்ளப்படுகின்றார்கள்.

சம்பந்தப்பட்ட இடங்களுக்கு பொருட்களை அனுப்புவதில் உள்ள சிரமங்கள் இலங்கைக்கு மட்டுமல்ல, பிற நாடுகளுக்கும் உள்ளன என்று அவர் மேலும் கூறியுள்ளார்.

அவசரமாக மூடப்படும் வான் பரப்புக்கள் இலங்கையிலும் விமான சேவைகள் இரத்து!!

புதிய இணைப்பு : மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் போர் காரணமாக, மத்திய கிழக்கு இடங்களுக்குச் செல்லும் அனைத்து விமானங்களையும் இன்று (03) இரத்து செய்ய ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் முடிவு செய்துள்ளது.

தீவிரமடையும் போர் பதற்றம் மற்றும் வான்வெளி மூடல்களை உன்னிப்பாக கண்காணித்து வருவதாகவும், பயணிகளின் பாதுகாப்பிற்காக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும் விமான நிறுவனம் தெரிவித்துள்ளது.

இரண்டாம் இணைப்பு : கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திலிருந்து மத்திய கிழக்கு நாடுகளுக்கு பயணிக்க திட்டமிடப்பட்ட 57 விமானங்கள் இன்று (03) இரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

முதலாம் இணைப்பு : மத்திய கிழக்கில் வான்வெளி மூடப்பட்டதால், மத்திய கிழக்கு நாடுகளில் இருந்து நேற்று (02) நள்ளிரவு 12.00 மணி முதல் இன்று நள்ளிரவு 12.00 மணி வரை கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வரும் 33 விமானங்கள் இரத்து செய்யப்பட்டுள்ளன.

இந்தக் காலகட்டத்தில் கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து மத்திய கிழக்கு நாடுகளுக்குப் புறப்படவிருந்த 32 விமானங்களும் இரத்து செய்யப்பட்டுள்ளதாக கட்டுநாயக்க விமான நிலையப் பொறுப்பாளர் தெரிவித்துள்ளார்.

4 விமானங்கள் கட்டுநாயக்கவில் தரையிறக்கம்

மத்திய கிழக்கிலிருந்து இலங்கைக்கு வந்த கல்ஃப், ஏர் அரேபியா, ஃப்ளை துபாய் மற்றும் கத்தார் ஏர்வேஸ் ஆகிய 04 விமானங்கள் கட்டுநாயக்க விமான நிலையத்திலேயே தரையிறக்கப்பட்டுள்ளதாகவும், அந்த நாடுகளுக்குத் திரும்ப முடியாமல் தவிப்பதாகவும் விமான நிலையப் பொறுப்பாளர் உறுதிப்படுத்தியுள்ளார்.

இருப்பினும், இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஷ் மற்றும் நேபாளம் போன்ற மத்திய ஆசிய நாடுகள், ரஷ்யா, இங்கிலாந்து, பிரான்ஸ் மற்றும் ஜெர்மனி போன்ற ஐரோப்பிய நாடுகள் மற்றும் சீனா, சிங்கப்பூர், மலேசியா, ஜப்பான் மற்றும் தென் கொரியா போன்ற தூர கிழக்கு நாடுகளுக்கான விமானங்கள் வழக்கம் போல் இயக்கப்படுகின்றன.

விசா காலம் முடிந்தும் நாட்டில் தங்கியுள்ள வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கான விசாக்களை மேலும் 14 நாட்களுக்கு கட்டணம் வசூலிக்காமல் நீட்டிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது,

மாற்று விமான சேவைகளை ஏற்பாடு

மேலும் அவர்கள் தங்கள் சொந்த நாடுகளுக்குத் திரும்ப மாற்று விமான சேவைகளை ஏற்பாடு செய்யவும் அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருகின்றது.

சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் மட்டும் 115 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக விமான நிலைய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

மத்திய கிழக்கில் நடந்து வரும் மோதல்கள் காரணமாக கிட்டத்தட்ட 10,000 சுற்றுலாப் பயணிகள் தங்கள் நாடுகளுக்குத் திரும்ப முடியாமல் இலங்கையில் சிக்கித் தவிக்கின்றனர்.

இலங்கையில் எதிர்வரும் ஏப்ரல் முதலாம் திகதி தொடக்கம் கட்டாயமாக்கப்படும் நடைமுறை!!

இலங்கையில் எதிர்வரும் ஏப்ரல் முதலாம் திகதி தொடக்கம் கட்டாயமாக்கப்படும் TIN சான்றிதழ் தொடர்பான புதிய நடைமுறை குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

அந்த வகையில் முக்கியமான பல நிதி மற்றும் பொதுச் சேவைகளைப் பெற்றுக்கொள்வதற்கு வரி செலுத்துவோர் TIN சான்றிதழை சமர்ப்பிப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

2026ஆம் ஆண்டின் உள்நாட்டு இறைவரி (திருத்தச்) சட்டத்தின் கீழ் இந்த புதிய நடைமுறை கொண்டுவரப்படவுள்ளது.

புதிய சட்டம்

புதிய சட்டத்தின்படி, நிதி நிறுவனங்களில் ஏதேனும் ஒரு வங்கிக் கணக்கை ஆரம்பித்தல், கடன் அட்டைகளை பெற்றுக் கொள்ளுதல், காணிகளைப் பதிவு செய்தல் அல்லது காணி உரிமையை உறுதிப்படுத்துதல்,

கட்டடத் திட்டங்களுக்கான உத்தியோகபூர்வ அனுமதியைப் பெற்றுக்கொள்ளுதல், மோட்டார் வாகனங்களைப் பதிவு செய்தல், மோட்டார் வாகன வருமான வரி அனுமதிப்பத்திரத்தை புதுப்பித்தல்,

புதிய வணிகங்களைப் பதிவு செய்தல், இலங்கையில் பதிவு செய்யப்பட்ட நிறுவனங்களின் பங்குகளை கைமாற்றுதல் (வாங்குபவர் மற்றும் விற்பவர் இருவருக்கும் இது பொருந்தும்) போன்ற சேவைகளைப் பெற்றுக் கொள்ளும் போது செல்லுபடியாகும் TIN சான்றிதழை சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் சமர்ப்பிக்க வேண்டியது அவசியமாகும்.

வர்த்தமானி அறிவித்தலின்படி, வங்கி மேலாளர்கள், பதிவாளர்கள், மாகாண அல்லது பிரதேச செயலாளர்கள் உள்ளிட்ட குறிப்பிட்ட அதிகாரிகள், தத்தமது சேவைகளை வழங்குவதற்கு முன் விண்ணப்பதாரரின் TIN சான்றிதழை சரிபார்க்க வேண்டியது கட்டாயமாகும்.

வரி செலுத்தும் முறையை முறைப்படுத்துவதற்காகவும், வெளிப்படைத்தன்மையை உறுதிப்படுத்துவதற்காகவும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக உள்நாட்டு இறைவரித் திணைக்களம் தெரிவித்துள்ளது.

 

இலங்கையில் ஒரே நாளில் மூன்று முறை அதிகரித்துள்ள தங்கத்தின் விலை!!

மத்திய கிழக்கில் நிலவும் பதற்றம் காரணமாக இலங்கையின் தங்கத்தின் விலை எதிர்பாராத அளவு அதிகரித்துள்ளதாக இலங்கை நகையக வியாபாரிகள் சங்கம் அறிவித்துள்ளது.

அதன்படி இன்று ஒரே நாளில் மூன்று முறை தங்கம் விலை அதிகரித்துள்ளது. அந்தவகையில், தற்போதைய தங்க விலை நிலவரப்படி, 24 கரட் தங்கம் பவுண் ஒன்று 410,000 ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது.

22 கரட் தங்கம் பவுண் ஒன்று 379,300 ரூபாயாகவும், விற்பனை செய்யப்படுகிறது.

இதன்படி, 24 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 51,250 ரூபாயாகவும், 22 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 47,413 ரூபாயாகவும், விற்பனை செய்யப்படுகிறது.

ஆறு ஆண்டுகளுக்கு முன் மாயமான சிறுவன் : பாபநாசம் திரைப்பட பாணியில் ஒரு கொலை!!

இந்தியாவின் ராஜஸ்தானில், ஆறு ஆண்டுகளுக்கு முன் மாயமான சிறுவன் ஒருவனை அவனது உறவினர்களே பாபநாசம் திரைப்பட பாணியில் கொன்று புதைத்துவிட்டது தெரியவந்துள்ளது.

ராஜஸ்தானைச் சேர்ந்த ஜக்மோகன் பைரவா என்னும் நபரின் மகன் டில்லு என்னும் பிரின்ஸ். பிரின்ஸ் ஆறு ஆண்டுகளுக்கு முன் ஒருநாள் காணாமல் போனான்.

ஆறு ஆண்டுகளாக பொலிசார் அவனைத் தேடிவந்தும் சிறுவன் கிடைக்காததால், எப்படியாவது அவனைக் கண்டுபிடிக்க நீதிமன்றம் ஒன்று உத்தரவிட்டது.

அதைத் தொடர்ந்து பொலிசார் மேற்கொண்ட விசாரணையில், பிரின்ஸின் உறவினர்களான அனில் மற்றும் கிருஷ்னா தம்பதியர் சிறுவனைக் கொன்று புதைத்தது தெரியவந்துள்ளது.

2020ஆம் ஆண்டு, ராஜஸ்தான் வழியாக டெல்லி மும்பை நெடுஞ்சாலை அமைக்கப்பட்டபோது, குழந்தையைக் கொன்று சாலை அமைக்கும் இடத்தில் புதைத்துவிட்டதாக அனில், கிருஷ்னா தம்பதியர் தற்போது தெரிவித்துள்ளனர்.

ஆகவே, நெடுஞ்சாலையின் ஓரமாக, பூமிக்கடியில் ஸ்கேன் செய்யும் இயந்திரங்கள் மற்றும் ஜேசிபி வாகனங்களின் உதவியுடன் பிரின்ஸின் உடலைத் தேடும் பணி துவக்கப்பட்டுள்ளது.

விடயம் என்னவென்றால், குழந்தை காணாமல்போன அன்று அனில் கிருஷ்னா தம்பதியரும் கவலையுடன் குழந்தையைத் தேடினார்களாம்.

பிரின்ஸுடைய அக்காவான அர்ச்சனாவும் அண்ணனான சமரும் அதை நினைவுகூர்ந்துள்ளதுடன், அவர்கள் இப்படி செய்திருப்பார்கள் என தாங்கள் நினைக்கவேயில்லை என்றும் கண்ணீருடன் தெரிவித்துள்ளார்கள்.

பிரபல நடிகை மாடியிலிருந்து தள்ளிவிட்டு கொலை : கணவருக்கு ஆயுள் தண்டனை!!

ஒடிசாவின் புகழ்பெற்ற சின்னத்திரை நடிகை லட்சுமிப்பிரியா பெஹரா (நிகிதா) 2019 ஜனவரி 4ஆம் தேதி கட்டாக் நகரில் உள்ள வீட்டின் மாடியில் இருந்து விழுந்து உயிரிழந்தார்.

குடும்ப தகராறு காரணமாக கணவர் லிபன் சாஹு தள்ளிவிட்டதாக போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். நிகிதாவின் தந்தை அளித்த புகாரின் பேரில் வரதட்சணை கொடுமை மற்றும் கொலை உள்ளிட்ட பிரிவுகளில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கில் கட்டாக் மூன்றாவது கூடுதல் மாவட்ட நீதிமன்றம் நேற்று தீர்ப்பளித்தது. மனைவியை திட்டமிட்டு கொலை செய்த குற்றம் நிரூபிக்கப்பட்டதாக கூறி நடிகர் லிபன் சாஹுவுக்கு ஆயுள் தண்டனை மற்றும் ரூ.20,000 அபராதம் விதிக்கப்பட்டது. நீதிமன்றம் தனது தீர்ப்பில் குற்றவாளிக்கு உரிய தண்டனை வழங்கப்பட்டதாக குறிப்பிட்டது.

போதிய ஆதாரங்கள் இல்லாததால் லிபன் சாஹுவின் பெற்றோர் விடுவிக்கப்பட்டனர்.

‘ஏசிபி நிகிதா’, ‘தபஸ்யா’ போன்ற தொடர்களில் நடித்த லட்சுமிப்பிரியா பெஹரா, பல படங்களிலும் நடித்திருந்தார். அவரது மரணம் ஒடிசா மாநிலத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.

இயக்குநரை கடத்தி நகை பறிப்பு : நடிகை உட்பட 11 பேர் கைது!!

பெங்களூருவில் தமிழ்நாட்டைச் சேர்ந்த திரைப்பட இயக்குநர் ஒருவரை மர்மமான முறையில் கடத்தி, தாக்கிய வழக்கில் கன்னட நடிகை உட்பட 11 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ள சம்பவம் திரைத்துறையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தைச் சேர்ந்த அனிஷ் (35) என்ற இயக்குநர், கன்னடத்தில் ‘ஜீவனத பாஷே’ என்ற திரைப்படத்தை இயக்கி வந்தார்.

இந்தப் படத்தின் தயாரிப்புப் பணிகளுக்காக அவர் ஆஷீர்வாத் என்ற நடிகரிடம் சுமார் ரூ.6 லட்சம் கடனாகப் பெற்றதாகக் கூறப்படுகிறது. கடனைத் திருப்பிச் செலுத்தாதது மற்றும் படத்தின் படப்பிடிப்பைப் பாதியிலேயே நிறுத்தியது போன்ற காரணங்களால் இருவருக்கும் இடையே மோதல் வெடித்துள்ளது.

இந்நிலையில் கடந்த பிப்ரவரி 9ம் தேதி, தனது காரை விற்பனை செய்ய உதவுமாறு நடிகை ஐஸ்வர்யாவை அனிஷ் அணுகியுள்ளார். இதைப் பயன்படுத்திக் கொண்ட ஐஸ்வர்யா, காரை வாங்க ஆள் இருப்பதாகக் கூறி பிப்ரவரி 22ம் தேதி அனிஷை பெங்களூருவுக்கு வரவழைத்துள்ளார்.

பெங்களூரு இந்திரா நகரில் உள்ள ஒரு வீட்டிற்கு அனிஷ் சென்றபோது, அங்கு மறைந்திருந்த ஆஷீர்வாத் மற்றும் அவரது நண்பர்கள் அனிஷை ஒரு அறைக்குள் பூட்டி வைத்து கிரிக்கெட் மட்டையால் கடுமையாகத் தாக்கியுள்ளனர்.

அவரிடமிருந்து 22 கிராம் தங்கச் சங்கிலி, செல்போன் மற்றும் 30 ஆயிரம் ரூபாய் ரொக்கத்தைப் பறித்துக்கொண்ட கும்பல், அவரை நகருக்கு வெளியே கொண்டு சென்றும் தாக்கியுள்ளது. காயமடைந்த அனிஷை ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்த்துவிட்டு அந்தக் கும்பல் தப்பியோடியது.

இது குறித்து மருத்துவமனை அளித்த தகவலின் பேரில் வழக்குப்பதிவு செய்த ஆடுகோடி போலீசார், தீவிர விசாரணைக்குப் பிறகு நடிகை ஐஸ்வர்யா மற்றும் நடிகர் ஆஷீர்வாத் உள்ளிட்ட 11 பேரைக் கைது செய்துள்ளனர். விசாரணையில் இவர்கள் அனைவரும் கன்னடத் திரையுலகில் நுழைய முயன்று வரும் புதுமுகங்கள் என்பது தெரிய வந்துள்ளது.

 

வீட்டுக்கு வந்தவரை கொலை செய்த வீட்டு உரிமையாளர் : இலங்கையில் அதிர்ச்சி சம்பவம்!!

அனுராதபுரம் சாலியபுர – தெப்பங்குளம் பகுதியில் கூர்மையான ஆயுதத்தால் தாக்கப்பட்டு நபர் ஒருவர் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

வீட்டு உரிமையாளருக்கும் வீட்டிற்கு வந்த ஒருவருக்கும் இடையே ஏற்பட்ட தர்க்கம் முற்றியதில், வீட்டு உரிமையாளர் வீட்டிற்கு வந்தவர் மீது இவ்வாறு தாக்குதல் நடத்தியுள்ளார்.

இந்தத் தாக்குதலினால் குறித்த நபர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இவ்வாறு உயிரிழந்தவர் சாலியபுர பிரதேசத்தைச் சேர்ந்த 41 வயதுடையவராவார்.

சம்பவம் தொடர்பாக வீட்டு உரிமையாளரைப் கைது செய்துள்ள அனுராதபுரம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

விஜய் மீது அடுக்கடுக்காக குற்றம் சுமத்தும் மனைவி சங்கீதா!!

நடிகரும், தமிழக வெற்றி கழக தலைவருமான விஜய் , தமிழக சட்டமன்ற தேர்தலில் போட்டியிடவுள்ள நிலையில், அவரது மனைவி சங்கீதா விவாகரத்து கேட்டு மனுத்தாக்கல் செய்துள்ளமை தமிழகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஒரு நடிகையுடனான திருமணத்திற்கு மீறிய தொடர்பே விவகாரத்துக்கு காரணம் என சங்கீதா மனுவில் குறிப்பிட்டுள்ளதாக கூறப்படுகின்றது. இது தொடர்பில் இந்திய ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளதாவது,

“நடிகையுடன் திருமணத்தை மீறிய உறவை கொண்டிருந்தார் விஜய். இது எனக்கு 2021 ஏப்ரலில் தெரிய வந்தது. நான் இதை கண்டுபிடித்த பிறகும் இரக்கமே இல்லாமல் அந்த உறவை தொடர்ந்தார். இது வலியையும், மன உளைச்சலையும் கொடுத்தது.

கடந்த 5 ஆண்டுகளாக மனதளவில் அவர் என்னை பிரிந்து வாழ்ந்து வருகிறார். அவர் நடிகையுடன் தொடர்பில் இருந்ததால் மன உளைச்சலுக்கு ஆளானேன். அந்த உறவை முறித்துக்கொள்வதாக கூறினார். ஆனால் அவரது நடவடிக்கையில் மாற்றம் இல்லை.

திருமணத்தை மீறிய அந்த உறவை தட்டிக் கேட்டதால், வீட்டில் எனக்கான உரிமைகளை விஜய் நிறுத்திவிட்டார். கட்டுப்பாடுகளையும் ஏற்படுத்தினார். சம்பந்தப்பட்ட நடிகையோடு விஜய் வெளிநாடுகளுக்கு சென்றார். வெளிநாடுகளுக்கு சென்றதை நடிகையே பகிர்ந்தார்.

விஜய் உடன் அடிக்கடி வெளிநாடு சென்று அங்கு எடுத்த புகைப்படங்களை அந்த நடிகை சமூக ஊடகங்களில் பகிர்ந்ததால், அது என்னையும் எனது குழந்தைகளையும் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாக்கியது.

பொது வெளியில் நன்மதிப்பை கெடுக்கக்கூடாது என்பதால் நடிகையின் பெயரை குறிப்பிடவில்லை. கணவரிடம் ஏதேனும் அழுத்தம் வந்தால் அந்த நடிகையின் பெயரை வெளியிடுவேன். தேவைப்பட்டால் எனது கணவருடன் உறவில் இருக்கும் நடிகையை வழக்கின் 2 ஆவது எதிர்மனுதாரராக சேர்ப்பேன்.

விஜய்யின் நடத்தை குழந்தைகளுக்கு அவமானம் ஏற்பட்டது. என்னை தொடர்ந்து அலட்சியப்படுத்தியதால் தனித்து வாழ்ந்து வருகிறேன். விஜய்யிடம் சமூக அந்தஸ்து மற்றும் வருவாயை கருத்தில் வைத்து எனக்கு ஜீவனாம்சம் வாங்கித் தர வேண்டும்.

விஜயின் பொதுவெளி பிம்பத்தைக் கருதி நீதிமன்றத்தை நாடாமல் இருந்தேன். பேச்சுவார்த்தை நடத்த இருமுறை முயற்சி மேற்கொண்டும் அது தோல்வியில் முடிந்தது” என்றும் பரபரப்பு குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார்.

அதேவேளை 2025 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் சங்கீதா விவாகரத்து கோரி மனுதாக்கல் செய்துள்ளதாக கூறப்படும் நிலையில், வரும் ஏப்ரல் மாதம் மனு விசாரணைக்கு வரவுள்ளதாக கூறப்படுகின்றது.

இந்நிலையில் விஜய் அரசியலில் காலடி எடுத்து வைத்தது முதல் பல்வேறு சிக்கலகளை எதிர்கொண்டு வருவதாகவும், எல்லாவற்றையும் முறியடித்து மக்கள் மனங்களில் இடம்பிடித்த விஜய்யை அவரது தனிப்பட்ட வாழ்க்கையில் ஏற்பட்ட பிரச்சனைகளை சிலர் பெரிது படுத்தி சேறுபூசும் நடவடிக்கையில் ஈடுபடுவதாகவும் விஜய் ஆதரவாளர்கள் கூறியுள்ளனர்.