தேசிய கல்வியியல் கல்லூரில் மாணவி விபரீத முடிவு : நடந்தது என்ன?

வயம்ப தேசிய கல்வியியல் கல்லூரியில் கல்வி கற்கும் மாணவி ஒருவர் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்துக்கொண்டுள்ளதாக பிங்கிரிய பொலிஸார் தெரிவித்தனர். இந்த சம்பவம் நேற்று வெள்ளிக்கிழமை (23) மாலை இடம்பெற்றுள்ளது.

வயம்ப தேசிய கல்வியியல் கல்லூரியின் விஞ்ஞான பீடத்தில் கல்வி கற்று வந்த களுத்துறை – வெலிகெட்டிய பிரதேசத்தைச் சேர்ந்த மாணவி ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இவர் தனது கல்லூரி விடுதியில் வைத்து உயிரை மாய்த்துக்கொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். உயிரிழந்த மாணவியின் சடலம் சிலாபம் வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மேலும் மாணவி உயிரிழந்தமைக்கான காரணம் வெளியாகாத நிலையில் சம்பவம் தொடர்பில் பிங்கிரிய பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

சற்று முன் மீண்டுமொரு பேருந்து விபத்து : 7 பேர் படுகாயம்!!

வெல்லவாய – தனமல்வில பிரதான வீதியில் இன்று (24) மணல் ஏற்றிச் சென்ற டிப்பர் லாரி ஒன்று இலங்கை போக்குவரத்து சபை பேருந்தின் பின்புறத்தில் மோதியதில் விபத்து ஏற்பட்டுள்ளது.

இந்த விபத்தில் பேருந்தில் பயணித்த ஒரு பெண் உட்பட ஆறு பேர் காயமடைந்து தனமல்வில பிராந்திய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

விபத்தில் பலத்த காயமடைந்தவர்களை ஹம்பாந்தோட்டை பொது மருத்துவமனைக்கு மாற்றுவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

விபத்து தொடர்பாக டிப்பர் லாரியின் சாரதி தனமல்வில தலைமையக காவல் நிலைய அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பில் தனமல்வில பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

உலக அழகி போட்டியின் இறுதிச் சுற்றுக்கு தெரிவான இலங்கையைச் சேர்ந்த அனுதி குணசேகர!!

72ஆவது உலக அழகி போட்டியின் இறுதிச் சுற்றுக்கு இலங்கையைச் சேர்ந்த அனுதி குணசேகர என்பவர் தெரிவு செய்யப்பட்டுள்ளார். இந்தியாவின் தெலுங்கானாவில் நடைபெறும் இந்த போட்டியில் இறுதிச் சுற்றுக்கு 24 பேர் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

அந்த 24 பேரில், உலக அழகி போட்டியின் “ HEAD TO HEAD presentation ” பிரிவில் ஆசியாவின் முதல் 5 அழகிகளில் இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்தி அனுதி குணசேகர என்பவர் இறுதிச் சுற்றுக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

அனுதி குணசேகர இலங்கையின் அநுராதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த 25 வயதுடைய பட்டதாரி ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இளைஞனுக்கு எமனான பேருந்து : தீவிரமாகும் பொலிஸ் விசாரணை!!

கம்பஹா மாவட்டம் மல்வத்துஹிரிபிட்டிய பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட யக்கல – கிரிந்திவெல வீதியில் வாரபலான பகுதியில் இடம்பெற்ற விபத்தில் இளைஞன் ஒருவன் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த விபத்து நேற்று (23) இடம்பெற்றுள்ளது.

கிரிந்திவெலவிலிருந்து யக்கல நோக்கிப் பயணித்த மோட்டார் சைக்கிள் ஒன்று எதிர்த்திசையில் பயணித்த பஸ்ஸூடன் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

விபத்தில் மோட்டார் சைக்கிள் பயணித்த இருவரும் பலத்த காயமடைந்து கம்பஹா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் மோட்டார் சைக்கிளின் செலுத்துனர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். உயிரிழந்தவர் பூகொடை பிரதேசத்தைச் சேர்ந்த 21 வயதுடைய இளைஞர் ஒருவர் ஆவார்.

இதனையடுத்து பஸ் சாரதி சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மல்வத்துஹிரிபிட்டிய பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

யாழில் அதிர்ச்சி சம்பவம் : பட்டதாரி மகள்களுக்கு திருமணமாகாததால் தந்தை எடுத்த விபரீத முடிவு!!

தனது இரண்டு பெண் பிள்ளைகளுக்கும் திருமணம் ஏற்படவில்லை என மனமுடைந்த தந்தை ஒருவர் தவறான முடிவெடுத்து உயிரிழந்துள்ள சம்பவம் யாழ். மாவட்ட சங்கானை வைத்தியசாலை வீதியில் நேற்று (23) இடம்பெற்றுள்ளது.

இந்த சம்பவத்தில் அதே இடத்தை சேர்ந்த 63 வயதுடைய தந்தையே உயிரிழந்துள்ளார். பட்டதாரிகளான இரண்டு பெண் பிள்ளைகளுக்கும் திருமணம் நடைபெறவில்லை என மனமுடைந்த நிலையில் காணப்பட்ட அவர் நேற்று (23) வீட்டில் தூக்கில் தொங்கி உயிரிழந்துள்ளார்.

உடற்கூற்று பரிசோதனைகளின் பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. மேலதிக விசாரணைகளை மானிப்பாய் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

திருமணத்திற்கு மறுத்த காதலி : கழுத்தை நெரித்து கொலை செய்து கால்வாயில் வீசிய காதலன்!!

உத்தரப்பிரதேச மாநிலம் பிஜ்னோரில் வசித்து வந்தவர் ருச்சிகா. 25 வயதான இவர் திருமணம் செய்ய மறுத்ததற்காக தனது காதலனால் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

இந்த கொலையை அவரது காதலன் சிவம் மற்றும் அவரது பெற்றோரும் நேரடியாக ஈடுபட்டிருந்தனர். போலீசார் 12 நாட்களில் வழக்கை தீர்த்து வைத்து, மூவரையும் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

அழகு நிலையத்துக்குச் சென்று திரும்பாத ருச்சிகாவை தேடி களைத்த அவரது தந்தை தேவ் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். ராம்கங்கா ஃபீடர் சேனல் கால்வாயில் ஒரு பையில் சடலமாக ருச்சிகா மீட்கப்பட்டார்.

பிரேத பரிசோதனை அறிக்கைப்படி சுமார் 6-7 நாட்களுக்கு முன்பே கொலை செய்யப்பட்டதாக குறிப்பிடப்பட்டது.

விசாரணையில், சிவம் தனது காதலியான ருச்சிகாவை திருமணம் செய்து கொள்ள விரும்பியதையும், ஆனால் ருச்சிகா அவரை “முதலில் அரசு வேலையில் சேருங்கள், பிறகு திருமணம்” என மறுத்ததையும் ஒப்புக்கொண்டார்.

தொடர் வாக்குவாதத்தால் ஆத்திரம் அடைந்த சிவம் கோபத்தில் தாவணியைப் பயன்படுத்தி அவரை கழுத்தை நெரித்து கொன்றதாகவும், உடலை பெற்றோருடன் சேர்ந்து ஒரு பையில் அடைத்து ராம்கங்கா கால்வாயில் வீசிவிட்டதாகவும் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.

ருச்சிகாவின் செருப்புகள் மற்றும் கொலையில் பயன்படுத்தப்பட்ட பையையும் போலீசார் கைப்பற்றியுள்ளனர். பிஜ்னோர் கிழக்கு பகுதி எஸ்.பி அமித் கிஷோர் ஸ்ரீவஸ்தவா , “இருவரும் பல வருடங்களாக காதலித்து வந்தனர்.

திருமணத்திற்கு வற்புறுத்தப்பட்டாலும், ருச்சிகா அரசு வேலை கிடைக்கும்வரை திருமணத்தை தள்ளிப்போட விரும்பியதால், கொடூரமாக இந்த செயல் தொடர்ந்தது.மூவரும் குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளனர்.

அவர்கள் மீது IPC பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்” எனத் தெரிவித்துள்ளார். இச்சம்பவம் மாநிலம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பார்வை இல்லாதது தான் என் பலம் : எவரெஸ்ட் சிகரத்தை தொட்டு வரலாறு படைத்த இந்தியப் பெண்!!

பார்வையற்ற இந்திய பெண்ணொருவர் எவரெஸ்ட் சிகரத்தை அடைந்து வரலாறு படைத்துள்ளார்.

ஹிமாச்சலப் பிரதேச மாநிலத்தின் கின்னோர் மாவட்டத்திலுள்ள சாங்கோ எனும் சிறிய கிராமத்தை சேர்ந்த பழங்குடியின பெண்ணான சொன்சின் அங்க்மோ (Chhonzin Angmo),

உலகின் மிக உயரமான மலைச் சிகரமான மவுண்ட் எவரெஸ்ட் மீது இந்திய தேசியக்கொடியை நட்டுள்ள முதல் பார்வையற்ற இந்திய பெண் என்கிற வரலாற்று சாதனையைப் படைத்துள்ளார்.

8 வயதில் பார்வை இழந்த அங்க்மோ, டெல்லி பல்கலைக்கழகத்தின் மிராண்டா ஹவுசில் பட்டமும் முதுநிலையும் முடித்துள்ளார். தற்போது யூனியன் வங்கியில் கஸ்டமர் சர்வீஸ் அசோசியேட்டாக பணியாற்றுகிறார்.

“பார்வையின்மையில் தான் என் பலம் இருக்கிறது” என தைரியமாக கூறும் அவர், “என் பயணம் இனிதான் ஆரம்பமே” எனத் தன்னம்பிக்கையுடன் கூறுகிறார்.

2024 அக்டோபரில் எவரெஸ்ட் பேஸ் கேம்ப் சென்று, அதையும் வெற்றிகரமாக கடந்தவர். லடாக் பகுதியில் உள்ள காங் யட்சே 2 போன்ற சவாலான சிகரங்களையும் வென்றுள்ளார்.

Operation Blue Freedom திட்டத்தின் கீழ் 2021-இல் பங்கேற்ற அவர், உலகின் மிக உயர்ந்த போர்க்களமாக சியாச்சின் பனிப்பாறையும் கடந்தார்.

அவரது சாதனைகள் பிரதமர் மோடியின் ‘மன் கி பாத்’ நிகழ்ச்சியிலும் பாராட்டப்பட்டுள்ளன. சர்வஷ்ரேஷ்ட திவ்யாங்ஜன் தேசிய விருது (Sarvshresth Divyangjan National Award) உள்ளிட்ட பல பாராட்டுகளும் பெற்றுள்ளார்.

அங்க்மோவின் துணிச்சல், இந்திய பெண்கள் மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த உலக மக்களுக்கும் ஊக்கமளிக்கிறது.

 

கேரளாவில் கொரோனாவால் இருவர் உயிரிழப்பு!!

கடந்த சில நாட்களாக இந்தியாவில் பல்வேறு மாநிலங்களிலும் கொரோனா தொற்று பரவி வரும் நிலையில், கொரோனா தொற்றால் கேரளாவில் இருவர் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகின்றது.

கேரளாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் கடந்த 2 நாட்களில் கேரள மாநிலத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 182 ஆக உயர்ந்துள்ளது.

கொரோனாவால் பாதிக்கப்பட்டு திருவனந்தபுரம் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த ஆண்கள் இருவர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கேரளாவில் 2020-ம் ஆண்டு முதல் தற்போது வரை கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 72,141 ஆக அதிகரித்துள்ளது.

கொரோனாவால் உயிரிழந்த 2 நபர்களுக்கு ஏற்கனவே இதய நோய் உள்ளிட்ட உடல்நல பாதிப்புகள் இருந்ததாக கூறப்பட்டுள்ளது. அதேவேளை கொரோனா பரவல் குறித்து பொதுமக்கள் அச்சம் கொள்ளத் தேவையில்லை என கேரள சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

மின்னல் தாக்கம் தொடர்பில் சிவப்பு எச்சரிக்கை!!

கடுமையான மின்னல் தாக்கம் தொடர்பில் நான்கு மாவட்டங்களுக்கு வளிமண்டலவியல் திணைக்களம் சிவப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.

அதன்படி, ஊவா மாகாணம், மட்டக்களப்பு மற்றும் அம்பாறை மாவட்டங்களில் இன்று கடுமையான மின்னல் தாக்கம் ஏற்படுவதற்கான வாய்ப்பு உள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இன்று இரவு 11.00 மணி வரை நடைமுறையில் உள்ள இந்த எச்சரிக்கையின்படி, 21 மாவட்டங்களுக்கு மின்னல் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, இன்று (23.05) மேல், சப்ரகமுவ, வடமேற்கு மற்றும் மத்திய மாகாணங்களிலும், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

இந்த காலகட்டத்தில் மின்னல் தாக்கத்தால் ஏற்படும் சேதங்களைக் குறைக்க பொதுமக்கள் போதுமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

பலத்த மழையால் ஒரே மேடையில் நடந்த இந்து முஸ்லீம் திருமணம்!!

பலத்த மழையின் காரணமாக ஒரே மேடையில் இந்து முஸ்லீம் திருமணம் நடைபெற்று மத நல்லிணக்கத்திற்கு எடுத்துக்காட்டாக அமைந்துள்ளது.

புனேவின் வான்வாடி பகுதியில் உள்ள திருமண மண்டபம் ஒன்றில் முஸ்லீம் குடும்பம் திருமண ஏற்பாடு செய்திருந்தது. அதே திருமண மண்டபத்திற்கு வெளியே இந்து குடும்பம் ஒன்று திருமண ஏற்பாடு செய்திருந்தது.

அப்போது மாலை 7 மணியளவில் திருமண நேரம் நெருங்கி முகூர்த்த நேரம் வந்தவுடன், திடீரென வானம் மேகமூட்டமாகி இடி மின்னலுடன் பலத்த மழை பெய்தது.

இதன் காரணமாக வெளியில் அமைக்கப்பட்டிருந்த விதானம் நனைந்து சுப நிகழ்வு தடை பட்டது. இதனால் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் கவலை அடைந்தனர். மேலும், மழை குறைந்த பாடில்லை.

பின்னர், மண்டபத்தில் தங்கள் திருமண வரவேற்பைக் கொண்டாடிக் கொண்டிருந்த முஸ்லிம் குடும்ப உறுப்பினர்களை இந்து குடும்ப உறுப்பினர்கள் அணுகினர்.

அவர்களிடம் தங்களது சூழ்நிலையை விளக்கி திருமண மண்டபத்தில் திருமணத்தை நடத்த அனுமதி தருமாறு கேட்டுக் கொண்டனர். அதற்கு முஸ்லீம் குடும்பமும் சம்மதம் தெரிவித்தனர்.

இதையடுத்து, அவர்களது மேடையிலே இந்து திருமண சடங்குகளுக்கு தேவையான ஏற்பாடுகளைச் செய்வதில் உதவினார்கள். பின்னர் சரியான நேரத்தில் இந்து திருமணம் நடைபெற்று முடிந்தது. இரு குடும்பத்தினரும் ஒன்றாக இரவு உணவு சாப்பிட்டனர்.

குளிர்பானம் கொடுத்து கணவனை தீர்த்துகட்டி மாணவர்கள் துணையுடன் உடலை எரித்த ஆசிரியை!!

மகாராஷ்டிரா மாநிலத்தில் லோகோரா பகுதியில் தலைமை ஆசிரியராக பணிபுரிந்து வருபவர் நிதி. இவர் தன் கணவரை ஜூஸ் கொடுத்து கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

23 வயதான நிதி என்பவர் ஒரு பள்ளியில் தலைமை ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். இவரது கணவர் சாந்தனு தேஷ்முக்.

இவருக்கு சம்பவ நாளில் ஜூஸில் விஷம் கலந்து கொடுத்துள்ளார். பின்னர் தன் கணவன் இறந்தபிறகு தன்னிடம் டியூஷன் படிக்கும் 3 மாணவர்களின் உதவியுடன் காட்டிற்கு கணவனின் உடலை எடுத்துச் சென்று பெட்ரோல் ஊற்றி எரித்துவிட்டதாக தெரிகிறது.

கணவன் அடிக்கடி அடித்து ஆபாச வீடியோக்களை காண்பித்து மிரட்டி துன்புறுத்தியுள்ளார். இதனால் கணவனை தீர்த்து கட்ட முடிவு செய்தார் தலைமை ஆசிரியர்.

இச்சம்பவம் மே 15 ம் தேதி நடைபெற்ற நிலையில் காட்டில் எரிந்த நிலையில் ஒரு உடல் கண்டெடுக்கப்பட்டு போலீசார் விசாரணை நடத்தினர்.

இதன் அடிப்படையில் நிதியை கைது செய்து காவல்துறையினர் தொடர்ந்து அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

இவரை கண்டால் அறிவியுங்கள் : தவிக்கும் குடும்பத்தினர்!!

திருகோணமலை வெருகல் பகுதியைச் சேர்ந்த திருமதி. கனகராசா ஈஸ்வரி என்ற 53 வயதுடைய தாய் கடந்த 20 ஆம் திகதி காலை திருகோணமலைக்கு செல்வதாக கூறி பஸ்ஸில் சென்றுள்ள நிலையில் இதுவரை வீடு திரும்பவில்லை என குடும்பத்தினர் தெரிவிக்கின்றனர்.

இந்நிலையில் பெண் காணாமல்போனமை தொடர்பில் ஈச்சிலம்பற்று பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்.

அதேவேளை காணாமல்போன பெண், சில நேரங்களில் மன அழுத்தம் காரணமாக மறந்துபோய் எங்கே செல்கிறோம் என்று தெரியாமல் பாதை தவறிச் சென்றுள்ளதாகவும் தெரிவிக்கின்றனர்.

எனவே, காணாமல்போன பெண் தொடர்பில் தகவல் தெரிந்தவர்கள் 0752440702. , 0755314983 எனும் தொலைபேசி இலக்கங்களுக்கு அறியத் தருமாறு கேட்டுக் கொள்கின்றனர்.

பாடசாலைகளில் தமிழ் – சிங்கள மொழி கற்கை குறித்து கட்டாயமாக்கப்படவுள்ள நடைமுறை!!

ஆறாம் வகுப்பு முதல் ஒன்பதாம் வகுப்பு வரையிலான சிங்கள மாணவர்கள் தமிழை இரண்டாவது மொழியாகவும், தமிழ் மாணவர்கள் சிங்களத்தை இரண்டாவது மொழியாகவும் கற்க வேண்டியது கட்டாயமாக்கப்படவுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

இன்றைய தினம் (23.05.2025) நாடாளுமன்றத்தில் உரையாற்றும் போதே அவர் மேற்கண்ட விடயம் தொடர்பில் குறிப்பிட்டார். அதன்படி, ஆறாம் வகுப்பு முதல் ஒன்பதாம் வகுப்பு வரையிலான தமிழ் மாணவர்கள் சிங்கள மொழியை இரண்டாம் மொழியாக கற்க வேண்டும்.

அதேவேளை, ஆறாம் வகுப்பு முதல் ஒன்பதாம் வகுப்பு வரையிலான சிங்கள மாணவர்கள் தமிழ் மொழியை இரண்டாம் மொழியாக கற்க வேண்டும்.

இதற்கமைய, ஆசிரியர்களுக்கு குறித்த மொழிகளைக் கற்பிக்க பயிற்சி அளிக்கப்படும் வரை இந்தத் திட்டம் ஒரு முன்னோடித் திட்டமாக மேற்கொள்ளப்படும் என்று அவர் கூறினார்.

அன்ஜலோ மெத்தியூஸ் ஓய்வு அறிவிப்பு!!

இலங்கை அணியின் நட்சத்திர கிரிக்கெட் வீரர் அன்ஜலோ மெத்தியூஸ் ஓய்வு அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெற்றுக்கொள்வதாக அறிவித்துள்ளார்.

மெத்யூஸ் இலங்கை டெஸ்ட் கிரிக்கெட் அணியின் தலைவராகவும் கடமையாற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இலங்கை கிரிக்கட் அணியின் சிறந்த சகலதுறை வீரர்களில் ஒருவராக மெத்யூஸ் கருதப்படுகின்றார்.

கடந்த 17 ஆண்டுகளாக இலங்கைக்காக டெஸ்ட் கிரிக்கட் போட்டிகளில் விளையாடக் கிடைத்தமை பெருமிதமானதும் மகிழ்ச்சியானதுமாகும் என அவர் தெரிவித்துள்ளார்.

தேசிய அணிக்காக விளையாடும் போது ஏற்படும் உணர்வினை வார்தைகளினால் விபரிக்க முடியாது என அவர் தெரிவித்துள்ளார்.

இந்த கிரிக்கட் பயணத்தில் தனது ஏற்றத் தாழ்வுகளின் போது தொடர்ந்தும் ஆதரவு வழங்கிய கிரிக்கெட் ரசிகர்களுக்கு நன்றி பாராட்டுவதனை பெரும் பாக்கியமாக கருதுவதாகக் குறிப்பிட்டுள்ளார்.

இந்த விளையாட்டின் மீதான காதல் எப்போதும் தீராது என அவர் தனது டுவிட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

வவுனியாவில் மலேரியா நோய் தொற்றைக் கட்டுப்படுத்த விசேட நடவடிக்கை!!

வவுனியாவில் அண்மையில் சில நாட்களாக மலேரியா நோய் தடுப்பு செயற்றிட்ட நடவடிக்கை இடம்பெற்று வருகின்றது. அந்தவகையில் கடந்த மூன்று நாட்களாக சாந்தசோலைப் பகுதியிலுள்ள வீடுகள், கிணறுகள், சுற்றுப்பகுதிகள் என்பன கண்காணிப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

இந்தியாவின் ஐயப்ப மலைக்குச் சென்று திரும்பிய பக்தர்கள் சிலரிடம் காணப்பட்ட மலேரியா நோய் தொற்றுக் காரணமாகவும் மேலும் இத்தொற்று சமூகத்தில் பரவாமல் இருப்பதற்காகவும் இந்நடவடிக்கை இடம்பெற்று வருகின்றது.

மேலும், பொதுமக்கள் தமது இருப்பிடங்களைத் சுத்தம் செய்து வைத்திருக்குமாறும் தமது பகுதியில் டெங்கு நுளம்பு பெருகும் இடங்கள் இனங்காணப்பட்டால் அவற்றிற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாகவும் இந்தடவடிக்வடிக்கைக்கு பொதுமக்கள் தமது பூரண ஒத்துழைப்புக்களை வழங்குமாறும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

புதுக்குடியிருப்பில் இளம் குடும்பஸ்தர் மர்மமான முறையில் உயிரிழப்பு!!

முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பில் இளம் குடும்பஸ்தரின் சடலம் ஒன்று நேற்று வியாழக்கிழமை (22.05) மாலை மீட்கப்பட்டதாக புதுக்குடியிருப்பு பொலிஸார் தெரிவித்தனர். சடலமாக மீட்கப்பட்டவர் புதுக்குடியிருப்பு, 10வது தொகுதியைச் சேர்ந்த 24 வயதுடையவர் ஆவார்.

நபர் ஒருவர் புதரில் கிடப்பதாக புதுக்குடியிருப்பு பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் பொலிஸார் குறித்த இடத்திற்கு சென்று விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

பின்னர் குறித்த நபர் புதுக்குடியிருப்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது அவர் உயிரிழந்துள்ளதாக வைத்தியர்கள் தெரிவித்தனர்.

மரணத்திற்கான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை என பொலிஸார் தெரிவித்தனர்.

மேலும் சடலம் புதுக்குடியிருப்பு வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை புதுக்குடியிருப்பு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.