தொடர் அரசியல் படுகொலைகள் அச்சமடைய வைக்கிறது – சீமான்!!

seeman-press

தமிழகத்தில் தொடர்ந்து நடந்து வரும் அரசியல் படுகொலைகள் மக்களை அச்சத்தில் ஆழ்த்தும் வகையில் உள்ளது என்று நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான் கூறியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கை..

பா.ஜ.க.வைச் சேர்ந்த கட்சி நிர்வாகிகள் சிலரும், அவர்களோடு கொள்கை உறவு கொண்ட இந்து சமயக் கட்சியினர் சிலரும் அடுத்தடுத்து கொல்லப்பட்டுள்ளனர். இம்மாத தொடக்கத்தில் அக்கட்சியைச் சேர்ந்த வெள்ளையப்பன் என்பவர் இதேபோன்று கொடூரமாக கொல்லப்பட்டிருக்கிறார்.

மற்றொரு மாநில நிர்வாகியான காந்தி என்பவர் நடைபயிற்சி செய்துக் கொண்டிருந்தபோது பட்டப்பகலில் நடந்த கொலை முயற்சியில் இருந்து படுகாயத்துடன் தப்பியுள்ளார். தங்கள் கட்சியினர் அடுத்தடுத்து கொல்லப்பட்டதை பட்டியலிட்டுள்ள அக்கட்சியின் பொதுச் செயலர் தமிழிசை செளந்தரராசன் கூறியுள்ளது போல், இது திட்டமிட்ட படுகொலைகளாகவே தெரிகிறது.

ஆனால் காவல்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்காத காரணத்தினால்தான் இப்படிப்பட்ட படுகொலைகள் தடையின்றி தொடர்கிறது என்று கூறியுள்ளார். இந்த கொலைகள் செய்தவர்களைப் பற்றி வெளியாகும் தகவல்கள் அனைத்தும், பணத்திற்கு கொலை செய்யும் கூலிப் படையினரை ஏவிவிட்டு நடத்தப்பட்டுள்ளது நன்கு தெரிகிறது.

பாஜக பொதுச் செயலாளர் ரமேஷை அரிவாளால் வெட்டிக்கொன்ற மூன்று பேர் கும்பல் எவ்வித பதற்றமுமின்றி மிகச் சாதாரணமாக நடந்து தெரு முனைக்குச் சென்று தப்பியதாக நேரில் பார்த்தவர் கூறியுள்ளார். இதிலிருந்து கொலையாளிகள் கூலிப்படையினர்தான் என்பது புலனாகிறது. தமிழ்நாட்டில் சமீப காலமாக கூலிப்படையினரின் அராஜகம் தலைவிரித்தாடுகிறது.

12 ஆண்டுகள் காத்திருந்து என் கணவரைக் கொன்ற எதிரியை பழி தீர்த்தேன் என்று காவல்துறையினரிடம் ஒரு குற்றவாளி வாக்குமூலம் தந்த செய்தி நாளிதழ்களில் வந்தது. இதேபோல் பல சமூக குற்றவாளிகள் அவர்களின் தொழில் எதிரிகளால் படுகொலை செய்யும் செய்திகள் அடிக்கடி வருகின்றன.

கேரளத்தில் மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சியிலிருந்து வெளியேறி புரட்சி மார்க்சிஸ்ட் கட்சியை தொடங்கிய டி.பி. சந்திரசேகர் படுகொலை செய்யப்பட்டது குறித்து தனது துயரத்தை வெளிப்படுத்திய மலையாள நடிகர் மோகன்லால் நான் கொல்லப்பட்டிருந்தால் எனது தாய் எப்படி துடித்திருப்பாரோ அதுபோலத்தானே சந்திரசேகரனின் தாய் துடிதுடித்திருப்பார். அந்த தாயின் மன நிலையில் இருந்து அந்தத் துயரத்தை பகிர்ந்து கொள்கிறேன் என்று கூறினார்.

கொலை செய்யப்படுபவர் யாராயினும், அதற்கு கொள்கையோ, அரசியலோ காரணமாயினும் கொல்லப்பட்டவரின் தாயார் மற்றும் குடும்பத்தாருக்கு ஏற்படும் இழப்பும், துயரமும் பொதுவானதுதான். கொள்கை எதிரிகளை தீர்த்துக்கட்டுவது என்கிற நிலை, அதுவும் கூலிப்படை கொண்டு கணக்குத் தீர்ப்பது என்று போனால், அது நமது சமூக, அரசியல் வாழ்விற்கே பெரும் அச்சுறுத்தலாகிவிடும்.

எனவேதான் இப்பிரச்சனையை தீவிரமாக கையாண்டு கொலையாளிகளையும், அவர்களை பின்னின்று இயக்கிய வர்களையும் காவல் துறையினர் கண்டுபிடித்து நீதிமன்றத்தில் நிறுத்த வேண்டும் என்று கேட்டுகொள்கிறோம். கொலை கொள்ளை செய்திகள் இல்லாத நாளே இல்லை என்று கூறும் அளவிற்கு குற்றச்செயல்கள் தமிழ்நாட்டில் முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு பெருகியுள்ளது.

அதையும் தாண்டி இப்படிப்பட்ட அரசியல் படுகொலைகள் சர்வ சாதாரணமாக நிகழ்ந்து வருவது மக்களை மேலும் அச்சமடையச் செய்துள்ளது. பா.ஜ.க. பொறுப்பாளர்கள் அடுத்தடுத்துக் கொல்லப்பட்டதன் பின்னணியை கண்டுபிடித்து நாட்டு மக்களுக்கு தெரிவிக்க வேண்டிய கடமை அரசுக்கு உள்ளது என்று அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், ஆடிட்டர் ரமேஷ் அவர்களை கோர மரணத்தில் பறிகொடுத்து, துயரத்தில் துடி துடிக்கும் அவரது குடும்பத்தினருக்கும், பாரதிய ஜனதா கட்சியினருக்கும் நாம் தமிழர் கட்சியின் சார்பில் தனது இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார் சீமான்.

வவுனியாவில் நடைபெறவுள்ள வடக்கு பிரதேச செயலக கலாச்சார விழா!!

pirathesa

வவுனியா வடக்கு பிரதேச செயலகத்தின் கலாசார விழா எதிர்வரும் 25ஆம் திகதி வியாழக்கிழமை பிரதேச செயலக வளாகத்தில் இடம்பெறவுள்ளது.

“இயல் இசை நாடகத்தால் இன்பத் தமிழ் வளர்ப்போம்” எனும் தொனிப்பொருளில் வட மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களம் மற்றும் கலாசார அலுவல்கள் திணைக்களத்துடன் இணைந்து நடத்தப்படவுள்ள இக் கலாசார விழா காலை 9 மணிக்கு பிரதேச செயலாளர் க.பரந்தாமன் தலைமையில் பண்பாட்டு பேரணியுடன் ஆரம்பமாகவுள்ளது.

இதனையடுத்து பிரதம விருந்தினராக கலந்து கொள்ளவுள்ள வட மாகாண கல்வி, பண்பாட்டலுவல்கள், விளையாட்டுத்துறை அமைச்சின் செயலாளர் எஸ்.சத்தியசீலனால் மங்கலவிளக்கேற்றப்பட்டு நெடுங்கேணி மகாவித்தியாலய மாணவிகளால் தமிழ் தாய் வாழ்த்து இசைக்கப்படவுள்ளது.

தொடர்ந்து புளியங்குளத்தை சேர்ந்த நிருத்திய கலாசேஸ்திர நுண்காலைக் கல்லூரி மாணவிகளின் வரவேற்பு நடனமும் வவுனியா வடக்கு உதவி பிரதேச செயலாளர் வே.ஆயகுலனின் வரவேற்புரையும் இடம்பெறவுள்ளது.

தலைமையுரையினை வவுனியா வடக்கு பிரதேச செயலாளர் க.பரந்தாமன் ஆற்ற “காலம் தோறும் தமிழ்” எனும் இலக்கிய சொற்பொழிவினை இலக்கிய சுடர் ஐ.கதிர்காமசேகரமும் நெடுங்கெணி நாவலர் முன்பள்ளி மாணவர்களின் இசைவும் அசைவும் நிகழ்வும் கவிக்கதிர் தம்பித்துரை ஐங்கரனின் தலைமையில் கவிஞர் மாணிக்கம் ஜெகன், வன்னியூர் நிசான், நந்தா, மருதோடை நிலா ஆகியோரின் பங்கேற்புடன் “நல்லதோர் வீணை செய்வோம்” எனும் தலைப்பில் கவியரங்கமும் கண்ணீந்த கண்ணப்பன் எனும் தலைப்பில் திருக்காலத்தி வில்லிசைக்குழுவினரின் வில்லிசையும் “மருதமுகில்” நூல் வெளியீடும் இடம்பெறவுள்ளது.

நூலின் வெளியீட்டுரையினை வவுனியா தேசிய கல்வியியல் கல்லூரியின் விரிவுரையாளர் மி.சூசைதாசனும் ஏற்புரையினை மலராசிரியர் ஜெ.கோபிநாத்தும் ஆற்றவுள்ளதுடன் நெடுங்கேணி செம்மொழிக்கலாமன்றத்தை சேர்ந்த இராஜேந்திரம், தவபாலன் ஆகியோரின் மதுரக்குரலிசையும் இலக்கியச்சுடர் ஐ.கதிர்காமசேகரம் தலைமையில் இன்றைய உலகில் தமிழர் பாரம்பரியம் பெரிதும் பின்பற்றப்படுகின்றதா? பின்தள்ளப்படுகின்றதா? எனும் தலைப்பில் இன்தமிழ் இனியன் எஸ்.எஸ்.வாசன், இளங்கலைச்சுடர் ஜெ.கோபிநாத், க.தவபாலசிங்கம், ஜெ.திருவரங்கன், பா.ரஜீவன், த.தர்மேந்திரா ஆகியோரின் பங்கேற்புடன் பட்டிமன்றமும் நடைபெறவுள்ளது

மேலும் நெடுங்கேணி மகாவித்தியாலய மாணவிகளின் செம்பு நடனமும், புளியங்குளத்தை சேர்ந்த நிருத்திய கலாசேஸ்திர நுண்கலைக் கல்லூரி மாணவிகளின் கீதாஞ்சலியும், வவுனியா வடக்கு சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்களின் “இனியாகினும் திருந்துவோம்” எனும் தலைப்பில் தாளலயமும், நெடுங்கேணி மகாவித்தியாலய மாணவிகளின் சுளகு நடனமும், கனகராஜன்குளம் மகாவித்தியாலய மாணவர்களின் அரிச்சந்திர மயான காண்டம் இசை நாடகமும், மதியாமடு விவேகாநந்தா வித்தியாலய மாணவா்களின் சுமைதாங்கி எனும் சமூக நாடகமும் நடைபெறவுள்ளது.

மேலும் நெடுங்கேணி மகாவித்தியாலய மாணவிகளின் சத்தியவான் சாவித்திரி இசை நாடகமும், சின்னடம்பன் பாரதி வித்தியாலய மாணவா்களின் காணல் நீர் சமூக நாடகமும், நெடுங்கேணி மகாவித்தியாலய ஆசிரியா்கள் மற்றும் மாணவா்கள் இணைந்து வழங்கும் ஸ்ரீவள்ளி எனும் இசை நாடகமும், சின்னப்பூவரசன்குளம் விக்கினேஸ்வரா வித்தியாலய மாணவர்களின் காலங்கள் மாறினாலும் எனும் தலைப்பில் சமூக நாடகமும், மாறாவிலுப்பை அ.த.க. பாடசாலையின் ஏழு பிள்ளை நல்ல தங்காள் எனும் இசை நாடகமும், கலைவேந்தன் இசை நாடக வள்ளல் ம.தைரியநாதன் குழுவினரின் பூதத்தம்பி இசை நாடகமும், கற்சிலை மடு பரந்தாமன் நாடக கலாமன்றத்தினரின் பண்டார வன்னியனார் எனும் வரலாற்று நாடகமும் இடம்பெறவுள்ளன.

இந் நிகழ்வுக்கு சிறப்பு விருந்தினராக வவுனியா மேலதிக அரசாங்க அதிபர் திருமதி ச. மோகநாதன், வவுனியா வடக்கு வலய கல்வி பணிப்பாளர் திருமதி ப.கணேசலிங்கம், சிரேஸ்ட ஊடகவியலாளரும் ஆய்வாளருமான அருணா செல்லத்துரை ஆகியோரும் கௌரவ விருந்தினர்களாக வவுனியா வடக்கு பிரதேச சபையின் தவிசாளர் மு. பாலசுப்பிரமணியமும் முன்னாள் வவுனியா நகரபிதா ஜி.ரி. லிங்கநாதனும் சேவா லங்காவின் நிகழ்சி திட்ட பிரதி பணிப்பாளர் திருமதி அனட்ரோய் பிரேமலதாவும் பொஸ்டோ நிறுவன நிகழ்சி திட்ட முகாமையாளர் பி. செந்தில் குமரனும் ஐக்கிய நாடுகள் அபிவிருத்தி திட்டத்தின் நிகழ்ச்சி திட்ட அலுவலர் சா. சயந்தனும் கலந்து கொள்ளவுள்ளனர்.

யாழ். பல்கலை மாணவிகள் தங்கியிருந்த வீட்டின் மீது கல்வீச்சு!!

uoj

யாழ். பல்கலைக்கழக மாணவிகள் தங்கிருந்த வீட்டுக்கு இனம்தெரியாத நபர்கள் மது போத்தல்கள் மற்றும் கற்கள் என்பனவற்றை வீசி தாக்குதல் மேற்கொண்டுள்ளனர். யாழ். பல்கலைக்கழகத்தில் கல்வி பயிலும் தென்னிலங்கை மாணவிகள் பல்கலைக்கழகத்திற்கு பின் புறமாக உள்ள கம்பஸ் லேனில் தனியார் வீடு ஒன்றை வாடகைக்கு பெற்று தங்கி கல்வி கற்று வருகின்றனர்.

குறித்த வீட்டுக்கு நேற்று நள்ளிரவு மது போதையில் சென்ற சிலர் கத்தி கூச்சலிட்டதுடன் வாயில் கதவையும் தள்ளி திறக்க முற்பட்டுள்ளனர்.
கதவை திறக்க முடியாது போனமையினால் வீட்டுக்கு கற்கள் மற்றும் வெற்று மது போத்தல்கள் என்பவற்றை வீசியுள்ளார்கள் .

இதனால் வீட்டு யன்னல் கண்ணாடிகள் உடைந்துள்ளதுடன் வீட்டின் முன்பகுதி முழுவதும் வீசப்பட்ட போத்தல்களின் கண்ணாடிகள் சிதறியுள்ளன. இச் சம்பவம் தொடர்பாக பல்கலைக்கழக நிர்வாகத்திற்கு மாணவிகளால் அறிவிக்கப்பட்டதை அடுத்து நிர்வாகத்தினால் அங்கு தங்கியிருந்த 16 தென்னிலங்கை மாணவிகளும் பாதுகாப்பாக யாழ். பல்கலைக்கழக விடுதிக்கு இடம் மாற்றப்பட்டுள்ளார்கள்.

அதேவேளை இச் சம்பவம் தொடர்பாக கோப்பாய் பொலிசாருக்கும் அறிவிக்கப்பட்டதை அடுத்து சம்பவ இடத்திற்கு வந்த பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

கூட்டமைப்புக்குள் எந்த பிளவும் இல்லை தலைமையின் முடிவை ஏற்று நடக்கிறோம் – மாவை சேனாதிராஜா!!

Mavai Senathirajah தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினராகிய நாம் ஒன்றுபட்டு நிற்கின்றோம் என்பதை சர்வதேசத்துக்கு தெரியப்படுத்த வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழ்த் தேசியக்கூட்டமைப்பின் செயலாளருமாகிய மாவை சேனாதிராஜா தெரிவித்தார். எங்கள் தலைமையின் முடிவை நாங்கள் பூரணமாக வரவேற்பவர்கள். ஆற்றலும் ஆளுமையும் அனுபவமும் கொண்ட நீதியரசர் ஒருவரை முதலமைச்சர் வேட்பாளராக நிறுத்தியுள்ளோம். அவரின் வெற்றிக்குப் பின்னால் நாம் நிற்போம் என அவர் குறிப்பிட்டுள்ளார். ஊடகம் ஒன்று வழங்கிய செவ்வியின் போதே இந்த கருத்தினை தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், மாகாண சபை தேர்தலில் நான் போட்டியிட வேண்டுமென மக்களும் ஆதரவாளர்களும் என்னை வற்புறுத்திய போதும் அதில் எனக்கு ஆர்வம் இருக்கவில்லை. ஆனால் மக்கள், கட்சி ஆகியன விரும்புமாக இருந்தால் அவர்களின் விருப்பங்களை நிறைவேற்றுவதற்கு நான் தயாராகவுள்ளேன் என்பதை மாத்திரமே நான் கூறியிருந்தேன். யாரிடமும் என்னை முதலமைச்சர் வேட்பாளரக நியமியுங்கள் என நான் கேட்கவில்லை. இந்த நிலையில்தான் எமது கட்சியின் தலைவருக்கும் செயலாளருமாகிய எனக்குமிடையில் ஒரு பிளவு ஏற்பட்டு விடக்கூடாது. நாம் ஒன்று சேர்ந்து நிற்கின்றோம் என்பதை சர்வதேசத்துக்கு சொல்ல வேண்டும். சர்வதேசத்தில் நிலவுகின்ற இந்த நல்ல சந்தர்ப்பத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் அரசாங்கமானது பேசி தீர்வு காணப்பட வேண்டுமென சர்வதேசம் அழுத்தம் கொடுத்து வருகின்ற நிலையில் நான் ஒரு வேட்பாளனாக நின்று ஒரு போட்டியை பிளவை ஏற்படுத்த எனது மனம் இடங்கொடுக்கவில்லை. அதன் காரணமாகவே நான் அந்தப் போட்டியினைத் தவிர்த்துக்கொண்டேன். இன்று கூட்டமைப்பினால் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கின்ற விக்னேஸ்வரன் அவர்கள் ஒரு சிறந்த நீதியரசர். மதிப்புப்பெற்றவர். அதன் காரணமாகவே அவரை நாம் முதலமைச்சர் வேட்பாளராக ஏற்றுக்கொண்டிருக்கின்றோம். இதுகட்சியின் ஏகோபித்த முடிவு. நான் தலைமைக்கு கட்டுப்பட்டவன். எனக்கும் தலைமைக்கும் இடையில் எந்த வேறுபாடும் பிளவும் இல்லையென்பதையும் கூட்டமைப்பில் சிறந்த ஒற்றுமை உருவாக்கப்பட்டிருக்கிறது என்பதையும் வெளிக்காட்டுவதாகவே எனது முடிவு அமைந்திருந்தது என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

லிங்குசாமி கதையும் அம்பேல்? சர்ச்சையில் சூர்யா..!

suryaஎன்னுடைய கதையை லிங்குசாமி கொப்பியடித்துவிட்டார் என இயக்குனர் சீமான் இயக்குனர்கள் சங்கத்தில் கொடுத்த புகாரால் சங்கம் கலகலத்து போயுள்ளது.

லிங்குசாமி இயக்கத்தில் சூர்யா விரைவில் ஒரு படம் நடிக்கிறார். படத்தின் பெய‌ர், கதாநாயகி, தொழில்நுட்பக் கலைஞர்கள் என எதுவும் உறுதி செய்யப்படவில்லை.

இந்நிலையில் லிங்குசாமி படத்தின் கதை இதுதான் என்று இரண்டுவ‌ரி கதை ஒன்று ஊடகங்களில் பிளாஷானது.

மருத்துவராக இருக்கும் சூர்யா மக்களுக்கு நல்லது செய்கிறார். மருத்துவராக இருந்தால் ஒரு குறிப்பிட்ட எல்லைவரையே மக்களுக்கு நன்மை செய்ய முடியும் என பொலிஸ் அதிகாரியாக மாறுகிறார். இதுதான் அந்த இரண்டுவ‌ரி கதை.

சீமான் பல வருடங்களாக சொல்லிக் கொண்டிருக்கும் பகலவன் படத்தின் ஒன்லைனும் இதுதான். மருத்துவராக இருக்கும் கதாநாயகன் பொலிஸ் அதிகா‌ரியாக மாறி அநியாயத்தை வேரறுப்பது.

விஜய், ‌ஜீவா இருவரும் பகலவனில் இருந்து விலகிய நிலையில் தற்போது ஜெயம் ரவியை வைத்து பகலவனை எடுக்கும் முடிவில் இருக்கிறார் சீமான். இந்நிலையில் பத்தி‌ரிகையில் லிங்குசாமியின் கதையை பற்றிய விவரம் தெ‌ரிந்ததும் கடும் அதிர்ச்சிடைந்தவர் இயக்குனர்கள் சங்கத்தில் புகார் தந்திருக்கிறார்.

சீமான் பகலவன் கதையை பல வருடங்களாக பல‌ரிடம் சொல்லி வந்தது அனைவருக்கும் தெ‌ரியும் என்பதால் லிங்குசாமி சூர்யாவுக்காக புதிய கதை செய்ய வேண்டிய சூழல் ஏற்பட்டிருக்கிறது.

இப்படியொரு சர்ச்சையில் சிக்கிய பின் சூர்யா லிங்குசாமியின் கதையில் நடிப்பாரா என்பதும் சந்தேகமே.

ஏழு விமான நிலையங்களைத் தகர்க்க தீவிரவாதிகள் குறி!!

airport

இந்தியாவில் உள்ள 7 விமான நிலையங்களைத் தகர்க்க தீவிரவாதிகள் குறி வைத்துள்ளதாக இந்திய உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதுகுறித்து உளவுத்துறை விடுத்துள்ள எச்சரிக்கையில் இந்தியாவிலுள்ள சென்னை, மும்பை, பெங்களூர், டெல்லி, அகமதாபாத் உள்பட 7 விமான நிலையங்களைத் தகர்க்க தீவிரவாதிகள் குறி வைத்துள்ளனர்.

இந்த தாக்குதலுக்கு சிறிய வினமானங்களை பயன்படுத்தவும் தீவிரவாதிகள் திட்டமிட்டுள்ளனர் எனத் தெரிவித்துள்ளனர்.

சந்தானம் தன் தாய்க்கு செய்துகொடுத்த சத்தியம்..!

santhanamசந்தானம் தனது தாய்க்கு ஒரு சத்தியம் செய்து கொடுத்துள்ளார். சந்தானம் தாய் சொல்லைத் தட்டாதவர். அவர் என்ன சொன்னாலும் மறுபேச்சு பேசாமல் நடப்பாராம்.

படங்களில் சந்தானம் இரட்டை அர்த்த வசனங்களை அதிகம் பயன்படுத்துவார் என்பது அனைவரும் அறிந்ததே.

கிருத்திகா உதயநிதி இயக்கும் வணக்கம் சென்னை படத்தில் சந்தானம் நடிக்கிறார். என் படத்தில் இரட்டை அர்த்த வசனங்கள் கூடவே கூடாது என்று கிருத்திகா சந்தானத்திடம் கறாராக தெரிவித்துவிட்டார்.

இந்நிலையில் சந்தானத்தின் வசனங்கள் அவரது தாய்க்கும் பிடிக்கவில்லை போலும். இதையடுத்து இனி தான் நடிக்கும் படங்களில் அருவெறுப்பான வசனங்களை பேசவே மாட்டேன் என்று சந்தானம் தனது தாய்க்கு சத்தியம் செய்து கொடுத்துள்ளார்.

தமிழ்மொழி பயிற்சியை நிறைவு செய்து 62 பொலிஸார் வெளியேறினர்..!

வவுனியா, மன்னார், மாங்குளம் பொலிஸ் பிரிவுகளைச்சேர்ந்த 62 பொலிஸார் தமிழ் மொழி பயிற்சி நெறியை பூர்த்தி செய்து வெளியெறியுள்ளனர்.

கடந்த 5 மாதகாலமாக வவுனியா பொலிஸ் தலைமையகத்தில் இடம்பெற்ற இப்பயிற்சி நெறியின் இறுதிநாள் நிகழ்வுகள் நேற்றுமுன்தினம் (வெள்ளிக்கிழமை) வவுனியா சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் பணிமனையில் இடம்பெற்றிருந்தது.

தமிழ் பிரதேசங்களில் பணியாற்றும் சிங்கள மொழியிலான பொலிஸ் அதிகாரிகள் தமிழ் மக்களினுடைய பிரச்சனைகளை அறிந்து செயற்படவும் அவர்களது தேவைகளை இலகுவான முறையில் பூர்த்தி செய்து கொடுக்கும் முகமாகவும் இப்பயிற்சி நெறி இடம்பெற்று வருகின்றது.

இறுதி நாள் நிகழ்வின் போது தமிழ் மொழி பயிற்சி நெறியை பூர்த்தி செய்தவர்களின் கலை நிகழ்வுகளும் இடம்பெற்றிருந்தது.

இந் நிகழ்வுக்கு வவுனியா, மன்னார் பிரதி பொலிஸ்மா அதிபர் எச். விக்கிரமசிங்க, உதவி பொலிஸ் அதிதியட்சகர் சமுத்திர ஜீவா, வவுனியா பொலிஸ் நிலைய கணக்கு ஆய்வாளர் எஸ். இரவிச்சந்திரன் ஆகியோர் அதிதிகளாக கலந்து கொண்டிருந்தனர்.

police1 police2 police3

வவுனியாவில் 12 ஜோதி லிங்க தரிசனம்..!

பாரதத்தின் மகிமை வாய்ந்த 12 ஜோதி லிங்கங்களின் தரிசனம் வவுனியாவில் இடம்பெற்று வருகின்றது.

வவுனியா சுத்தானந்த இந்து இளைஞர் சங்க மண்டபத்தில் பிரமகுமாரிகள் இராஜயோக நிலையத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இவ் வழிபாட்டில் சோமநாத், விஸ்வநாத், திரியம்பகேஸ்வரர், வைத்யாநாத், நாகேஸ்வர், இராமேஸ்வரம், கிருஸ்ணேஸ்வர், பீமாசங்கர், கேதார்நாத், ஓங்காரேஸ்வரர், மகாகாளேஸ்வரர், மல்கார்ஜூன் ஆகிய 12 ஜோதி லிங்கங்கள் வழிபாட்டுக்காக வைக்கப்பட்டுள்ளது.

பாரதத்தின் பல்வேறு மாநிலங்களில் உள்ள மகிமை வாய்ந்த 12 சிவத்தலங்களை சேர்ந்த ஜோதி லிங்கங்களை சிவ பக்தர்கள் ஒரே இடத்தில் தரிசித்து வழிபட வேண்டியே இலங்கை பிரமகுமாரிகள் இராஜயோக நிலையம் இதனை ஏற்பாடு செய்துள்ளது.

இன்று ஞாயிற்றுக்கிழமை வரை இடம்பெறவுள்ள இத் தரிசனத்தில் பாடசாலை மாணவாகள், இந்து மதத்தவர்கள் உட்பட பலரும் வருகை தந்து வழிபாடுகளை மேற்கொண்ட வண்ணமுள்ளமை குறிப்படத்தக்கது.

jothi1 jothi2 jothi3 jothi4

சூர்யா வேண்டாம், சரத்குமாரே போதும் : கௌதம் மேனன் முடிவு..!

gowthamகௌதம் மேனன் படத்தில் சூர்யாவுக்கு பதில் சரத்குமார் நடிப்பதாக கோலிவுட்டில் பேசப்படுகிறது. சிங்கம் 2 படத்தையடுத்து சூர்யாவிடம் இயக்குனர்கள் கௌதம் மேனன், லிங்குசாமி கால்ஷீட் கேட்டிருந்தனர்.

யாருக்கு கால்ஷீட் தருவார் என்பதில் இழுபறி நிலவியது. இந்நிலையில் கௌதம் மேனன் இயக்கும் ‘துருவ நட்சத்திரம் படத்தின் படப்பிடிப்பு தொடங்குவது தொடர்பாக தொழில் நுட்ப சிக்கல் இருப்பதால் அதை சரி செய்துவரும்படி சூர்யா கூறினார்.

இதனால் அப்படத்தின் படப்பிடிப்பு தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. இதற்கிடையில் லிங்குசாமி படத்தில் நடிக்க முதலில் கால்ஷீட் கொடுத்திருக்கிறார் சூர்யா.

அதன் படப்பிடிப்பு தொடங்கியது. இந்நிலையில் சூர்யாவுக்கு பதிலாக சரத்குமாரை நடிக்க வைக்க கௌதம் மேனன் எண்ணி இருப்பதாக கோலிவுட்டில் பேசப்படுகிறது.

இதுபற்றி கௌதம் மேனன் கூறும்போது, இன்னும் சில நாள் பொருத்திருந்தால் அனைத்து விவரங்களையும் தருகிறேன் என்றார். துருவ நட்சத்திரம் படத்தில் நடிக்கிறீர்களா? என்று சரத்குமாரிடம் கேட்டதற்கு, அப்படத்தில் நான் நடிக்கவில்லை. ஆனால் அடுத்த வருடம் கௌதம் மேனன் இயக்கத்தில் நடிக்க உள்ளேன்.

இது மிகவும் ரசனையான ஸ்கிரிப்ட். கடந்த வருடமே இது பற்றி இருவரும் பேசி இருக்கிறோம். விரைவில் இருவரும் இணைந்து பணியாற்றுவோம் என்று நம்புகிறேன் என்றார்.

ஏற்கனவே கௌதம் மேனன் இயக்கிய பச்சைக்கிளி முத்துச்சரம் படத்தில் சரத் நடித்திருக்கிறார்.

ஆசஷ் 2–வது டெஸ்ட்: இங்கிலாந்து 566 ஓட்டங்களால் முன்னிலை..!

rootஇங்கிலாந்து– அவுஸ்திரேலியா மோதும்2–வது ஆசஷ் டெஸ்ட் போட்டி லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இங்கிலாந்து முதல் இன்னிங்சில்361 ஓட்டங்களும், அவுஸ்திரேலியா முதல் இன்னிங்சில் 128 ஓட்டங்களும் எடுத்தன. 233 ஓட்டங்கள் முன்னிலையில் 2–வது இன்னிங்சை ஆடிய இங்கிலாந்து 2–வது நாள் ஆட்டத்தின் முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 31 எ ஓட்டங்கள் எடுத்து இருந்தது.

நேற்று 3–வதுநாள் ஆட்டம் நடந்தது. தொடக்க வீரர் ஜோ ரூட் அபாரமாக ஆடி சதம் அடித்தார். நேற்றைய ஆட்டத்தின் முடிவில் இங்கிலாந்து 5 விக்கெட் இழப்புக்கு 333 ஓட்டங்களை எடுத்து இருந்தது. ஜோரூட் 178 ஓட்டங்களைக் குவித்து ஆட்டம் இழக்காமல் உள்ளார். பெல் 74 ஓட்டங்களையும் எடுத்தார்.

இங்கிலாந்து அணி 566 ஓட்டங்கள் முன்னிலை பெற்று வலுவான நிலையில் இருக்கிறது. கைவசம் 5 விக்கெட் உள்ளது. இன்னும் 2 நாள் ஆட்டம் இருக்கிறது.

தடைகளை தகர்த்து வெளிவர தயார் நிலையில் கோச்சடையான்..!

kochadayanகொலிவுட்டில் ரஜினிகாந்த் நடித்த கோச்சடையான் படம் டிராப் ஆகிவிட்டது என்று சமீபத்தில் பரபரப்பாகப் பேசப்பட்டு வந்தது.

இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் பொருட்டு ரஜினிகாந்தின் செயலாளர் படம் நிச்சயமாக வெளியாகும் என்று கூறியுள்ளார்.

கோச்சடையான் படத்தின் ட்ரைலர், ரஜினிக்கு திருப்தி அளிக்காத காரணத்தினால் தான் இன்னும் வெளியிடவில்லை.

ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் அளவிற்கு படம் இல்லை என்பதால் இந்தப் படத்தை கைவிட்டு விடும் முடிவுக்கு ரஜினிகாந்த் வந்து விட்டார் என்று சமீபத்தில் செய்திகள் வெளியாகின.

இதனால் கோச்சடையான் படம் டிராப் ஆகி விட்டது என்று ஊடகங்களிலும் வெளியானது.

இந்த செய்தி குறித்து கருத்து கூறிய ரஜினிகாந்தின் செயலாளர், கோச்சடையான் படம் நிச்சயம் வெளியாகும்.

தனது பகுதிக்கான டப்பிங்கை ரஜினிகாந்த் பேசி முடித்து விட்டார் என்றும் ரஜினிகாந்துக்கு படம் பிடிக்கவில்லை என்றால் அவர் ஏன் டப்பிங் பேச வேண்டும் எனவும் கூறியுள்ளார்.

ஏமாற்றி கற்பழிக்கப்பட்ட வவுனியா யுவதி – பஸ் சாரதி, நடத்துனர் கைது

rape

கொழும்புக்குச் சென்று கொண்டிருந்த வவுனியா யுவதி ஒருவரை ஏமாற்றி கற்பழித்த பஸ் சாரதியொருவரும், நடத்துனரும் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,

வவுனியாவைச் சேர்ந்த யுவதி ஒருவர் தனது தாயுடன் சண்டை பிடித்துக்கொண்டு தனியார் பஸ்ஸொன்றில் கொழும்புக்கு பயணித்துள்ளார். இதற்கிடையே நைசாகப் பேசி அந்த யுவதியின் நிலை அறிந்து கொண்ட பஸ் சாரதியும் நடத்துனரும் அவரை ஏமாற்றி பாலியல் வல்லுறவுக்குட்படுத்தி விட்டு தலைமறைவாகி விட்டனர்.

பின்னர் பாதிக்கப்பட்ட யுவதியின் முறைப்பாட்டின் பேரில் விசாரணை நடத்திய பொலிசார் குறித்த சாரதியையும் நடத்துனரையும் கைது செய்திருந்தனர்.

கொழும்பு நீதிமன்ற நீதவான் நிரோசா பெர்னாண்டோ முன்னிலையில் நடைபெற்ற அடையாள அணிவகுப்பில் பாதிக்கப்பட்ட யுவுதி அவர்கள் இருவரையும் அடையாளம் காட்டியுள்ளார்.

எனினும் சந்தேக நபர்கள் இருவரையும் ஐந்து இலட்சம் ரூபா பிணையில் செல்ல நீதிபதி அனுமதித்துள்ளார்.

மேலும் சந்தேக நபர்கள் இருவரும் வார இறுதி நாளான ஞாயிற்றுக்கிழமை கோட்டை பொலிஸ் நிலையத்தில் சமுகம் அளித்து கையொப்பம் இட வேண்டுமெனவும் நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

தெற்காசிய கால்பந்து போட்டியில் இலங்கை – இந்தியா இன்று மோதல்..!

football16 வயதுக்கு உட்பட்டவர்களுக்கான தெற்காசிய கால்பந்து போட்டி நேபாள தலைநகர் காட்மாண்டுவில் இன்று முதல் வரும் 30–ந் திகதி வரை நடக்கிறது.

இதில் கலந்து கொள்ளும் அணிகள் இரண்டு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன.

‘ஏ’ பிரிவில் நடப்பு சாம்பியன் பாகிஸ்தான், நேபாளம், பூடான் ஆகிய அணிகளும், ‘பி’ பிரிவில் இந்தியா, இலங்கை, பங்காளதேஷ் ஆகிய அணிகளும் இடம் பெற்றுள்ளன.

ஒவ்வொரு அணியும், தங்கள் அணியில் உள்ள மற்ற அணியுடன் தலா ஒரு முறை லீக் போட்டியில் மோத வேண்டும்.

லீக் முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள் அரை இறுதிக்கு தகுதி பெறும்.

இந்திய மற்றும் இலங்கை அணிகள் இன்றைய முதற் போட்டியில் மோதவுள்ளன.

அடங்கியது அவுஸ்ரேலிய கலவரம்..!

ausபசிஃபிக் தீவுத் தேசமான நவ்றுவில் அவுஸ்திரேலியா நடத்தும் தஞ்க் கோரிக்கையாளர் தடுப்பு முகாமில் கலவரம் வெடித்ததை அடுத்து அங்கு பொலிசார் தலையிட்டு ஒழுங்கை ஏற்படுத்தினர்.

வெள்ளிக்கிழமையன்று அம்முகாமின் கட்டிடங்கள் பலவற்றுக்கு தீ வைக்கப்பட்டதகாகவும், முகாமின் மருத்துவ மையம் அழிக்கப்பட்டதாகவும் தகவல்கள் கூறுகின்றன.

தஞ்சக் கோரிக்கையாளர்கள் 150 பேர் இந்தக் கலவரத்தில் ஈடுபட்டதாக அவுஸ்திரேலிய குடிவரவு அதிகாரிகள் கூறுகின்றனர்.

படகில் அவுஸ்திரேலியாவுக்கு வர முற்படும் தஞ்சக் கோரிக்கையாளர்களைத் தடுப்பதற்கான கடுமையான புதிய நடவடிக்கைகள் பற்றி ஆஸ்திரேலியப் பிரதமர் கெவின் ரட் அறிவித்த சில மணி நேரங்களில் இந்தக் கலவரம் ஆரம்பித்தது.

பெரும்பாலும் ஈரானியர்கள் அடங்கிய தஞ்சக் கோரிக்கையாளர்கள் கூட்டம் ஒன்று தடுப்பு முகாமில் இருந்து தப்பிக்க முயன்றபோது இந்த கலவரம் வெடித்தது.

கலவரம் ஆரம்பித்த இரண்டு மணி நேரத்தில் தடுப்புக் காவல் மையத்தின் கட்டுப்பாட்டை தஞ்சக் கோரிக்கையாளர்கள் கைப்பற்றினர் என பெயர் குறிப்பிட விரும்பாத காவல் பணி ஊழியர் ஒருவரை மேற்கோள்காட்டி அவுஸ்திரேலிய செய்தி நிறுவனமான ஏபிசி தகவல் வெளியிட்டுள்ளது.

சமயலறையில் பயன்படுத்தப்படும் கத்திகளை கையிலெடுத்துக்கொண்டு தஞ்சக்கோரிக்கையாளர்கள் கலவரத்தில் ஈடுபட்டிருந்தனர். இதில் இலங்கை அகதிகளும் அடங்குவர்.

அப்போது நடந்த சண்டையில், தடுத்துவைக்கப்பட்டிருந்தவர்கள் குறைந்தது நான்கு பேரும், காவல் பணியாளர்கள் பலரும் காயமடைந்ததாக கூறப்படுகிறது.

கலவரம் செய்யும் தஞ்சக் கோரிக்கையாளர்களை பொலிசார் அடக்க முயன்றபோது, இரும்புக் குழாய்களையும், வெட்டுக் கத்திகளையும் ஏந்தி வந்து உள்ளூர்வாசிகள் பலர் உதவியிருந்தனர்.

வன்முறையைக் கட்டுப்படுத்துவதில் அதிகாரிகளுக்கு உதவ பெருந்திரளான உள்ளூர் வாசிகள் வந்து குவிந்ததை அடுத்து நான்கு மணி நேரம் நடந்த கலவரம் முடிவுக்கு வந்தது என்று உள்ளூர் செய்திப் புகைப்பட கலைஞர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

தற்போது அந்த இடத்தில் அமைதி நிலவுவதாகவும், கலகம் செய்யும் விதமாக தஞ்சக் கோரிக்கையாளர் எவரும் தற்போது இல்லை என்றும் அவுஸ்திரேலிய குடிவரவு கட்டுப்பாட்டுத் துறை தெரிவிக்கிறது.

தடுத்துவைக்கப்பட்டிருந்தவர் சிலர் கலவரத்தின்போது தப்பிக்க முயன்றிருந்தாலும் தற்போது அனைவரும் கணக்கில் வந்து விட்டார்கள் என்று குடிவரவுத்துறை அதிகாரி ஒருவர் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

தஞ்சம் கோரி அவுஸ்திரேலியாவுக்கு படகில் வரும் எவரும் அவுஸ்திரேலியாவில் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்றும் அவர்கள் பப்புவா நியு கினீக்கு அனுப்பப்படுவார்கள் என்றும் பிரதமர் ரட் வெள்ளியன்று அறிவித்திருந்தார்.

அவுஸ்திரேலியாவில் குடியேறும் கனவுடன் ஆபத்துமிக்க கடல் பயணத்தை மேற்கொள்வதை மக்கள் நிறுத்த வேண்டும் என்பதற்காக இந்த முடிவை தான் அறிவிப்பதாக அவர் கூறியிருந்தார்.

அவுஸ்திரேலியாவில் பொதுத்தேர்தல் விரைவில் வரவுள்ள சூழ்நிலையில் அந்நாட்டின் தஞ்சக் கோரிக்கையாளர் கொள்கையை மாற்றியமைப்பது பற்றிய அறிவிப்புகளை அவர் செய்திருந்தார்.

வட, கிழக்கு மக்களுக்கு காணி, பொலிஸ் அதிகாரம் வழங்கினால் என்ன தவறு? – சிவி.விக்னேஸ்வரன்..!

wiki13வது அரசியல் யாப்பு திருத்தத்தில் உள்ள குறைகள் திருத்தியமைக்கப்பட வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வட மாகாண முதலமைச்சர் வேட்பாளரும் உயர் நீதிமன்ற முன்னாள் நீதியரசருமான சிவி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதியுடன் கலந்தாலோசித்து இந்த திருத்தத்தை செய்ய வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

வடக்கில் தற்போது நிலைகொண்டுள்ள 1,50,000 இராணுவத்தால் மக்களுக்கு அசௌகரியம் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

வடக்கு, கிழக்கு தவிர்ந்த ஏனைய மாகாணங்களில் மக்கள் ஒரே மொழியை பயன்படுத்துவதால் வடக்கு, கிழக்கு மாகாணத்திற்கு காணி மற்றும் பொலிஸ் அதிகாரங்கள் வழங்குவதில் என்ன தவறு என விக்னேஸ்வரன் கேள்வி எழுப்பியுள்ளார்.

தான் நீதியரசராக இருந்த காலத்தில் வழங்கிய தீர்ப்புக்கள் குறித்து தான் ஓய்வுபெற்று ஓரிரு வருடங்களில் கதைத்தால் எவருக்கும் அதனை விசாரணை செய்ய முடியும்.

ஆனால் ஓய்வு பெற்று 10 வருடங்களின் பின் கதைத்தால் அது என்னை அச்சுறுத்துவதற்காகவே என தான் நினைப்பதாக விக்னேஸ்வரன் குறிப்பிட்டுள்ளார்.