சிம்புவுக்கு போட்டியாக களம் இறங்கும் சிவகார்த்திகேயன்..!

sivaசின்னத்திரையில் நிகழ்ச்சித் தொகுப்பாளராக இருந்த சிவகார்த்திகேயன் தற்போது தமிழ் சினிமாவை கலக்கி வருகின்றார்.
சின்னத்திரையில் பார்த்த சிவகார்த்திகேயனை நடிகராக ஏற்றுக்கொண்ட மக்கள் இப்போது பாடகராகவும் அவரை ஏற்றுக்கொண்டுள்ளனர்.

வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தில் சிவகார்த்திகேயன் பாடிய பாடலை யு-டியூப்பில் வெளியிட்டுள்ளதால் இப்பாடலானது சூப்பர் ஹிட்டாகியுள்ளது.

இந்த ஹிட்டைப் பார்த்து சிவகார்த்திகேயனே ஆச்சர்யப்பட்டுப் போனாராம். இதனைத் தொடர்ந்து சிவகார்த்திகேயனுக்கு பல பாடங்களில் பாடுவதற்கு வாய்ப்புகள் குவிந்த வண்ணம் உள்ளன.

இப்போதுள்ள நடிகர்களில் சிம்பு தான் எல்லா கதாநாயகர்களுக்கும் பாடுகின்றார். விஜய், தனுஷ் இருவரும் தாங்கள் நடிக்கும் படங்களில் மட்டுமே பாடுகின்றார்கள்.

எனவே, சிம்புவுக்குப் போட்டியாக தானும் களத்தில் குதிக்கலாம் என்ற முடிவுக்கு வந்திருக்கிறாராம் சிவகார்த்திகேயன்.

ஆஷஸ்: இரண்டாவது போட்டியிலும் இங்கிலாந்து அபார வெற்றி..!

ashesஅவுஸ்திரேலியாவுக்கு எதிரான 2–வது டெஸ்டிலும் இங்கிலாந்து அணி அபார வெற்றி பெற்றுள்ளது.

அவுஸ்திரேலியா – இங்கிலாந்து கிரிக்கெட் அணிகள் இடையிலான ஆஷஸ் தொடரின் 2–வது டெஸ்ட் போட்டி லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் கடந்த 18–ந் திகதி தொடங்கியது. இதில் முதல் இன்னிங்சில் இங்கிலாந்து 361 ஓட்டங்களும், அவுஸ்திரேலியா128 ஓட்டங்களும் எடுத்தன. பின்னர் 233 ஓட்டங்கள் முன்னிலையுடன் 2–வது இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்து அணி 3–வது நாள் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு333 ஓட்டங்கள் எடுத்திருந்தது. ஜோ ரூட் 178ஓட்டங்களுடனும், பேர்ஸ்டோ 11 ஓட்டங்களுடனும் களத்தில் இருந்தனர்.

இந்த நிலையில் 4–வது நாள் ஆட்டம் நேற்று நடந்தது. தொடர்ந்து ஆடிய பேர்ஸ்டோ20 ஓட்டங்களுடன் விக்கெட் கீப்பர் ஹேடினிடம் பிடிகொடுத்து ஆட்டமிழநதார். இரட்டை சதம் அடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட ஜோ ரூட் மேற்கொண்டு 2 ஓட்டம் மட்டுமே சேர்த்த நிலையில், ரையான் ஹாரிசின் பந்து வீச்சில் ஆட்டமிழந்தார். அவர் 180 ஓட்டங்களுடன் (338 பந்து, 18 பவுண்டரி, 2 சிக்சர்) வெளியேறினார். அத்துடன் இங்கிலாந்து அணி தனது இன்னிங்சை முடித்துக் கொண்டது. இதன்படி இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 7 விக்கெட் இழப்புக்கு 349 ஓட்டங்கள் குவித்து ‘டிக்ளேர்’ செய்தது.

இதன் மூலம் அவுஸ்திரேலியாவுக்கு583 ஓட்டங்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் இதுவரை யாருமே சேசிங் செய்திராத இமாலய இலக்கை நோக்கி அவுஸ்திரேலியா 2–வது இன்னிங்சை தொடங்கியது. இந்த முறையும் இங்கிலாந்து பந்துவீச்சாளர்களின் ‘பிடி’யில் சிக்கி அவுஸ்திரேலிய துடுப்பாட்ட வீரர்கள் சிதறி போனார்கள்.

அவுஸ்திரேலிய அணி 2–வது இன்னிங்சில் 235 ஓட்டங்களுக்கு சுருண்டது. இதன் மூலம் 347ஓட்டங்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து அபார வெற்றி பெற்றது. சுழற்பந்து வீச்சாளர் ஸ்வான் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இந்த வெற்றியின் மூலம் 5 போட்டி கொண்ட தொடரில் இங்கிலாந்து 2–0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. 3–வது டெஸ்ட் போட்டி வருகின்ற1–ந்தேதி மான்செஸ்டரில் தொடங்குகிறது.

பரீட்சை தினத்துக்கு 05 நாட்களுக்கு முன் டியூசன் வகுப்புக்கள் தடை..!

seminarபரீட்சை தினத்திலிருந்து 05 நாட்களுக்கு முன் டியூசன்இ கருத்தரங்குகளை நிறுத்தல்
வர்த்தமானி நேற்று வெளியானது

க.பொ.த சாதாரண தரம்- உயர்தரம்- 5 ஆம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சைகள் நடைபெறும் திகதியிலிருந்து ஐந்து நாட்களுக்கு முன்னரேயே டியூஷன் வகுப்புக்கள்- கருத்தரங்குகள் நிறுத்தப்பட வேண்டும் என்ற சட்டம் தொடர்பான அரசாங்க வர்த்தமானி அறிவித்தல் நேற்று வெளியிடப்பட்டது.

1968 ஆம் ஆண்டின் 25 ஆம் இலக்க பகிரங்கப் பரீட் சைகள் சட்டத்தின் 22வது பந்தியின் கீழ் கல்வி அமைச்சர் பந்துல குணவர்தனவுக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தின் படி இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

இதன்படி மேற்படி மூன்று பரீட்சைகளும் ஆரம்பமாகும் தினத்துக்கு ஐந்து நாட்களுக்கு முன்னிருந்து பரீட்சைகள் முடிவடையும் திகதிவரை டியூஷன் வகுப்புக்கள்- கருத்தரங்குகள்- மீட்டல் வகுப்புக்கள் எதுவும் நடத்தப்படக் கூடாது.

அதேபோன்று- பரீட்சைகளுடன் தொடர்புடைய மாதிரி வினாத்தாள்கள் தயாரித்தல்- அச்சிடல்- பகிர்ந்தளித்தல்- போஸ்டர்கள்- பனர்கள்- துண்டுப் பிரசுரங்கள் வழங்குதல்- மின்னஞ்சல்கள் அனுப்புதல் அல்லது இவற்றை அருகில் வைத்திருத்தல் என்பன தண்டனைக்குரிய குற்றம் என குறித்த வர்த்தமானி அறிவித்தலில் அறிவிக்கப்பட்டிருப்பதாக பரீட்சைகள் ஆணையாளர் டபிள்யூ.எம். என்.ஜே.புஷ்பகுமார தெரிவித்துள்ளார்.

சீனாவில் இன்று அதிகாலை பாரிய நிலநடுக்கம்! – 11 பேர் பலி..!

chinaசீனாவின் மேற்குப் பகுதியில் உள்ள சனஅடர்த்தி மிக்க கன்சூ மாகாணத்தில் தையான்சூயி பகுதியில் இன்று காலை 7.45 மணியளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 6.6 ஆக பதிவானது. இந்த நிலநடுக்கத்தால் பலத்த சேதங்கள் ஏற்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. 11 பேர் மரணமானதாகவும், 81 பேர் காயமடைந்ததாகவும், முதற்கட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

2.7 மில்லியன் மக்கள் வசிக்கும் கட்டடங்கள் செறிவான பகுதியில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதால், சேதங்கள் அதிகமாக இருக்கும் என்று கருதப்படுகிறது.

மன்னார், வவுனியா ஆசன பங்கீட்டில் குழப்பம்..!

tnaதமிழ் தேசியக் கூட்டமைப்பு வடக்கில் ஐந்து மாவட்டங்களிலும் வேட்பாளர்களை நிறுத்துவது என நேற்று காலை வவுனியாவில் நடைபெற்ற கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்ட போதும் கூட்டு கட்சிகளுக்கு ஆசனங்களை பகிர்வது குறித்து இன்னும் இணக்கம் ஏற்படவில்லை.சிக்கலில் இருந்த யாழ். மாவட்டத்தில் போட்டியிட கூட்டுக் கட்சிகளுக்கு ஆசனங்கள் இணக்கப்பாட்டுடன் பிரித்துக் கொடுக்கப்பட்டுள்ளன.

அதன்படி, யாழ்ப்பாணத்தில் கூட்டமைப்பின் பொது வேட்பாளராக சி.வி.விக்னேஸ்வரன் நிறுத்தப்படவுள்ளார். எனவே எஞ்சியுள்ள 18 ஆசனங்களில் தமிழரசுக் கட்சிக்கு 7 ஆசனங்களும், ஈ.பி.ஆர்.எல்.எவ். கட்சிக்கு 4 ஆசனங்களும், ரெலோவுக்கு 3 ஆசனங்களும், புளொட் மற்றும் தமிழர் விடுதலைக் கூட்டணி என்பவற்றுக்கு தலா 2 ஆசனங்களும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.

நேற்றைய கூட்டத்தில் இலங்கை தமிழரசு கட்சி, ஈபிஆர்எல்எப், டெலோ, புளொட் ஆகிய கட்சிகள் கலந்து கொண்டதுடன், கூட்டமைப்பின் வடக்கு மாகாண முதலமைச்சர் வேட்பாளர் சீ.வி. விக்னேஸ்வரனும் கலந்து கொண்டார்.

யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா, மன்னார் மாவட்டங்களில் 33 வேட்பாளர்களை நிறுத்துவது என தீர்மானிக்கப்பட்டுள்ளது.

எனினும் வவுனியா மற்றும் மன்னார் மாவட்டங்களின் ஆசன பங்கீடு குறித்து இறுதி முடிவு நேற்று எடுக்கப்படவில்லை.

அதற்கு காரணம் தமிழர் விடுதலை கூட்டணி இவ்விரு மாவட்டங்களிலும் அதிக ஆசனங்களை கோரி வருவதாக கூட்டமைப்பின் உள்ளக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதனால் நேற்றைய கூட்டம் இறுதி முடிவு எடுக்கப்படாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ள அதேவேளை, எதிர்வரும் 25 ஆம் திகதிக்கு முன்னர் இறுதி தீர்மானம் எடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

நீர்கொழும்பு மீனவர்கள் இருவர் இராமேஸ்வரத்தில் தஞ்சம்..!

ramesமீன்பிடி படகில் இன்ஜின் கோளாறு ஏற்பட்டதால் இராமேஸ்வரம் அக்னி தீர்த்த கடற்கரையில், சிங்கள மீனவர்கள் இருவர் தஞ்சமடைந்துள்ளனர்.

இலங்கை நீர்கொழும்புவை சேர்ந்த வர்ணகுல ஜெயபுஷ்பகுமார், 52, வர்ணகுல ஜெலஸ்டின் ஜினோமணி, 34 என்ற இரு மீனவர்களே தஞ்சமடைந்துள்ளனர்.

நேற்று (21) மாலை, மன்னார் கடற்கரையில் இருந்து, பைப்பர் கிளாஸ் படகில் மீன்பிடிக்க புறப்பட்டு, இந்திய, இலங்கை கடல் எல்லையில் மீன்பிடித்த போது படகில் இன்ஜின் கோளாறு ஏற்பட்டுள்ளது.

உடனே, அங்கு மீன்பிடித்த, இராமேஸ்வரம் நாட்டுபடகு மீனவர் உதவியுடன் ராமநாதசுவாமி கோயில் கோபுர மின்விளக்கு வெளிச்சத்தில், இரவு 8.30 மணிக்கு, அக்னி தீர்த்த கடற்கரையில், தஞ்சம் அடைந்தனர்.

மீனவர்கள் இருவரும் மது அருந்தி இருந்ததால், படகை திருடி வந்திருப்பார்களா குற்ற வழக்கில் இருந்து தப்பிக்க இங்கு வந்திருப்பார்களா என பொலிசார் விசாரணை நடத்தினார்.

ஜெலஸ்டின் ஜினோமணி கூறியதாவது: ஒரு வருடமாக மன்னார் கடற்கரையில் தங்கி மீன்பிடித்து வருகிறோம்.

நேற்று இன்ஜினில் கோளாறு ஏற்பட்டதால் மன்னார் கரைக்கு திரும்ப முடியாமல் தமிழக நாட்டுபடகு மீனவர் உதவியுடன் இராமேஸ்வரம் கரைக்கு வந்தோம் என்றார்.

முறிகண்டிப் பிள்ளையாரைப் புரட்டிய இலங்கை மின்சாரசபை வாகனம்!!

muri

அனுராதபுரத்திலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்துக்கொண்டிருந்த இலங்கை மின்சாரசபைக்கு சொந்தமான வாகனம் பழைய முறிகண்டி பகுதியில் நேற்று அதிகாலை விபத்துக்குள்ளானதில் ஒருவர் காயமடைந்தார்.

வீதியின் அருகில் இருந்த பழைய முறிகண்டி பிள்ளையார் கோயிலும் முற்றாக சேதமடைந்துள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக மேலும்
தெரியவருவதாவது,

ஏ-9 வீதியில் வேகமாக வந்த கனரக வாகனம் கட்டுப்பாட்டை மீறி வீதியை விட்டுவிலகி அருகில் இருந்த கோயிலை இடித்து தள்ளியுள்ளது. இதனால் கோயில் முற்றாகச் சேதமடைந்துள்ளது.

இதன்போது வாகனத்தின் உதவியாளர் காயமடைந்து கிளிநொச்சி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பில் மாங்குளம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்.

muri1

muri3 muri2

இந்த அதிசயத்தை உங்களால் நம்ப முடிகின்றதா?(படங்கள்)

சீனாவைச் சேர்ந்த பெண்ணொருவர் கண்ணிமையை நீளமாக வளர்த்ததன் மூலம் உலகின் மிக நீளமான கண்ணிமைக்கு சொந்தக்காரர் என்று சாதனை படைத்துள்ளார்.

கண் இமையில் இவ்வளவு அதிகமான முடிகள் வளர்வதற்கு சாத்தியம் இல்லையொன்றாலும், சில ஹோமோன் மாற்றங்கள் மூலம் தலைமுடி போல கண்ணிமையும் வளரலாம் என்கின்றனர் மருத்துவர்கள்.

1 3 2

தமன்னாவின் வாய்ப்பைப் பறித்த ஸ்ருதி?

thamana-sruthi

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில், விஜயகாந்த் நடிப்பில் ஹிட்டான படம் ரமணா. இந்தப் படத்தைத் தற்போது இந்தியில் ரீமேக் செய்ய இருக்கிறார்கள்.

வானம் படத்தின் இயக்குநர் க்ரிஷ், இந்தியில் இயக்கப் போகிறார். விஜயகாந்த் வேடத்தில் அக்‌ஷய் குமார் நடிக்கிறார். சஞ்சய் லீலா பன்சாலி இந்தப் படத்தைத் தயாரிக்கிறார்.

அக்‌ஷய் குமாருக்கு ஜோடியாக தமன்னா நடிக்கிறார் என்று கூறப்பட்டது. ஆனால் ஸ்ருதி தான் நடிக்கப் போகிறார் என தற்போது செய்தி பரவுகிறது.

ஏற்கெனவே அக்‌ஷய் குமாருடன் தமன்னா நடித்துவிட்டதால் ஸ்ருதியை ஒப்பந்தம் செய்தார்கள் என்கிறது படக்குழு.

ஆனால், உண்மை அதுவல்ல. பொலிவுட்டில் எப்படியாவது காலூன்றிவிட வேண்டும் என தவித்து வரும் ஸ்ருதி என்ன மந்திரமோ செய்து தமன்னாவின் வாய்ப்பைப் பறித்து விட்டாராம்.

அக்‌ஷய் குமாருடன் நடிப்பதன் மூலம் தனக்கும் பொலிவுட்டில் நல்ல இடம் கிடைக்கும் என நம்புகிறாராம் ஸ்ருதி.

தனுஷூக்கு இரண்டு விருதுகள்!!

danush

தென்னிந்தியத் திரைப்பட விருது விழாக்களில் ஒன்றான 60-வது ஃபிலிம்பேர் விருது விழா ஐதராபாத்தில் நடைபெற்றது.

இந்த விழாவில் நடிகர் தனுஷ் இரண்டு விருதுகளை தட்டிச் சென்றார். “3” படத்தில் நடித்ததற்காக சிறந்த நடிகர் விருது வழங்கப்பட்டது. அதுபோல “3” படத்தில் தனுஷ் பாடிய வை திஸ் கொலவெறி பாடலுக்காக சிறந்த பாடகர் விருது தனுஷுக்கு வழங்கப்பட்டது.

நீதானே என் பொன்வசந்தம் படத்தில் நடித்த சமந்தாவுக்கு சிறந்த நடிகைக்கான விருது வழங்கப்பட்டது. சிறந்த படமாக வழக்கு எண் 18/9, சிறந்த இயக்குநராக பாலாஜி சக்திவேல் (வழக்கு எண் 18/9) தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

ஒரு கல் ஒரு கண்ணாடி படத்தில் நடித்த உதயநிதி ஸ்டாலினுக்கு சிறந்த புதுமுக நடிகர் விருதும், சுந்தரபாண்டியன்´ படத்தில் நடித்த லட்சுமி மேனனுக்கு சிறந்த புதுமுக நடிகைக்கான விருதும் வழங்கப்பட்டது.

சிறந்த துணை நடிகருக்கான விருது தம்பி ராமையாவுக்கும் (கும்கி), சிறந்த துணை நடிகைக்கான விருது சரண்யா பொன்வண்ணனுக்கும் (நீர்ப்பறவை) வழங்கப்பட்டது.

சிறந்த இசை அமைப்பாளர் விருது டி.இமானுக்கும் (கும்கி), சிறந்த பாடலாசிரியர் விருது யுகபாரதிக்கும் (சொல்லிட்டாலே அவ காதல கும்கி) வழங்கப்பட்டது.

சிறந்த பாடகிக்கான விருது என்.எஸ்.கே.ரம்யாவுக்கு நீதானே என் பொன்வசந்தம் கிடைத்தது.

நாய் வாகனம் ஓடி பார்த்திருக்கின்றீர்களா?(வீடியோ)

இதை நம்புவது கொஞ்சம் கடினம்தான். ஆனாலும் மறுக்கமுடியாத உண்மை. “Driving Dogs” என்ற அமைப்பொன்று நாய்களுக்கு வாகனம் ஓட்ட பயிற்சியளித்து வருவதுடன் இந்த முயற்சியில் வெற்றியும் கண்டுள்ளது.

முஸ்லிம் பெண்கள் புர்கா அணிவதற்கு எதிர்ப்பு – பாரிஸில் பரபரப்பு!!

Muslim

பிரான்ஸ் தலைநகர் பாரிஸின் புறநகர்ப் பகுதிகளில் இரண்டாவது இரவும் வன்முறைகள் நடந்துள்ளன. பிரான்ஸின் பொது இடங்களில் முஸ்லிம் பெண்கள் முகத்திரை- புர்கா அங்கி அணிவதற்கு உள்ள தடையை எதிர்த்து நடந்துவரும் போராட்டங்களிலேயே இந்தக் கலவரங்கள் நடந்துள்ளன.

போலிசார் கண்ணீர்ப்புகை மற்றும் தடியடிப் பிரயோகம் நடத்தி போராட்டக்காரர்களைக் கலைத்துவருகின்றனர். கடந்த வியாழக்கிழமை, முகத்தை முழுமையாக மூடி புர்கா அணிந்திருந்த பெண்ணொருவரை போலிசார் எச்சரித்தபோது, அந்தப் பெண்ணின் கணவனான இளைஞர் போலிசாரின் கழுத்தைப் பிடித்துள்ளார்.

முகத்திரையை அகற்றுமாறு தனது மனைவிக்கு உத்தரவிடப்பட்டதை அந்த இளைஞர் எதிர்த்துள்ளார். அந்த இளைஞரை போலிசார் கைதுசெய்ததை அடுத்தே போராட்டம் வெடித்துள்ளது. இனச் சிறுபான்மை மக்கள் செறிவாக வாழும் பாரிஸின் புறநகர்ப் பகுதிகளில் பெருமளவு கொந்தளிப்பு நிலை காணப்படுகிறது.

விஜய்யைத் தவிர்த்த பிரபுதேவா!

vijay

டான்ஸர், நடிகர், இயக்குநர் என பல முகங்கள் கொண்டவர் பிரபுதேவா. அத்தனை முகங்களிலும் தன்னுடைய சாதனையைப் பதித்தவர்.
சில நாட்களுக்கு முன்பு பத்திரிகையாளர்களுக்கு அவர் பேட்டி அளித்தபோது, “எந்தெந்த நடிகர்கள் சூப்பராக டான்ஸ் ஆடுவார்கள்?” என கேட்கப்பட்டது.

அவரும் சிரஞ்சீவி, ஹ்ருத்திக், ஷாகித், ரன்பீர், ராம் சரண், அல்லு அர்ஜுன், ஜுனியர் என்.டி.ஆர். தனுஷ், சிம்பு, ஜெயம் ரவி என நடிகர்களின் பெயரைச் சொல்லியிருக்கிறார்.

மாதுரி தீக்‌ஷித், தேவி, சோனாக்‌ஷி ஷின்கா, பிரியங்கா சோப்ரா என நன்றாக டான்ஸ் ஆடக்கூடிய நடிகைகளின் பெயரையும் சொல்லி இருக்கிறார்.

ஆனால், கடைசிவரை விஜய்யின் பெயரைச் சொல்லவே இல்லையாம். இத்தனைக்கும் விஜய்யை வைத்து இரண்டு படங்களையும் இயக்கியுள்ளார் பிரபுதேவா.

பொலிவுட் ஸ்டார்கள் அக்‌ஷய் குமார், ஷாருக்கான் ஆகியோரே விஜய்யின் நடனத்தை வியந்து பாராட்டியிருக்கிறார்கள். அப்படி இருக்கும்போது பிரபுதேவா விஜய்யைத் தவிர்த்த மர்மம் என்ன என்பது தெரியவில்லை.

கொலையானதாக கருதப்பட்ட பெண் கள்ளக்காதலருடன் உலா வந்ததால் பரபரப்பு!!

kovai

கொலை செய்து சாக்கு மூட்டையில் கண்டெடுக்கப்பட்ட பெண் உயிருடன் தனது கள்ளக்காதலருடன் இருப்பது தெரிய வந்து பரபரப்பு ஏற்பட்டது. தற்போது உண்மையில் கொலையான பெண் யார் என்ற விசாரணையை போலீஸார் முடுக்கி விட்டுள்ளனர்.

வேலூர் மாவட்டம் பனப்பாக்கம் அருகே உள்ள நங்கமங்கலம் ஏரியில் கடந்த 17-ந்தேதி சாக்கு மூட்டையில் இளம்பெண் பிணம் கிடந்தது. 25 வயது மதிக்கதக்க அந்த பெண் நிர்வாண நிலையில் கிடந்தார். தலையில் வெட்டுக் காயங்கள் இருந்தன. அடையாளம் தெரியாமல் இருக்க முகம் சிதைக்கபட்டிருந்தது.

சம்பவ இடத்தில் சிவப்பு கலர் சுடிதாரும் வெள்ளை நிற டாப்சும் கையுறைகளும் இருந்தன. அவற்றை போலீசார் கைப்பற்றினர். போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில் ராணிப்பேட்டையை சேர்ந்த தனியார் பள்ளி ஆசிரியர் திலகவதி என்பவர் காவேரிப்பாக்கம் போலீஸ் நிலையம் சென்று சென்னை திருநின்றவூரில் வசிக்கும் தனது அண்ணன் மகள் கங்காதேவி (27) கடந்த சனிக்கிழமை காணாமல் போனார்.

எனவே பிணமாக கிடந்ததா அவரா என்று சந்தேகப்படுகிறோம். எனவே உடலைப் பார்க்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். இதையடுத்து திலகவதி, அவரது அண்ணன், அண்ணி சரஸ்வதி, கங்காதேவியின் கணவர் சரவணன் ஆகியோர் விரைந்து வந்தனர். வாலாஜா அரசு மருத்துவமனை பிரேதக் கிடங்கில் உடலைப் பார்த்தனர்.

அப்போது அந்த உடல் தனது மனைவியுடையதுதான் என்று கணவர் சரவணன் கூறியுள்ளார். ஆனால் கங்காதேவியின் பெற்றோர் அதை உறுதிப்படுத்த முடியவில்லை என்று கூறினர். இதையடுத்து மரபணு சோதனைக்கு உத்தரவிடப்பட்டது. அதேசமயம், கங்காதேவிதான் கொலையானதாக கருதி போலீஸார் அந்த்க கோணத்தில் விசாரணையை முடுக்கினர்.

கங்காதேவியின் கணவர் திருவான்மியூரில் கம்ப்யூட்டர் என்ஜினீயராக பணியாற்றி வருகிறார். இவர்களுக்கு குழந்தை இல்லை. அடிக்கடி கங்காதேவி திருநின்றவூரில் உள்ள தாய் வீட்டுக்கு செல்வார். அப்போது அவருக்கும் பக்கத்து வீட்டு வாலிபரான கார்த்தி என்பவருக்கும் தொடர்பு ஏற்பட்டது. இது கங்கா தேவியின் பெற்றோருக்கு தெரிய வந்தது. அவர்கள் இருவரையும் கண்டித்தனர்.

கங்காதேவியின் சகோதரர் ரவிச்சந்திரன் கார்த்திக் வீட்டுக்கு சென்று அவரை கண்டித்து தகராறு செய்தார். இதனால் இரு வீட்டாருக்கும் தகராறு இருந்து வந்தது. இந்த நிலையில் தான் கங்காதேவி மாயமானார். கங்காதேவியின் உடல் அடையாளம் காணப்பட்டதால் கார்த்திக்கைத் தேடி வந்தனர் போலீஸார். ஆனால் அப்போதுதான் அவர்களுக்குத் திடுக்கிடும் தகவல் கிடைத்தது.

அதாவது கங்காதேவி சாகவில்லை. மாறாக தனது கள்ளக்காதலர் கார்த்திக்குடன் கோவையில் பதுங்கியிருப்பதாக அவர்களுக்குத் தகவல் கிடைத்தது. மேலும் கங்காதேவியும் தனது உடல் அடையாளம் காணப்பட்டதாக வெளியான பத்திரிக்கைச் செய்தியைப் படித்து அதிர்ச்சி அடைந்தார்.

உடனே தனது சகோதரரை தொடர்பு கொண்டு தான் உயிருடன் இருப்பதாக கூறியுள்ளார். போலீஸாரிடமும் பேசியுள்ளார். போலீஸாரிடம் மட்டும் தானும், கார்த்திக்கும் கோவையில் இருப்பதாக தெரிவித்துள்ளார் கங்காதேவி. மேலும் பாதுகாப்பும் கோரியுள்லார். இதையடுத்து போலீஸார் கோவை விரைந்துள்ளனர்.

மலையாள ரீமேக்கில் ஆண்ட்ரியா?

Andrea Jeremiah Hot Photoshoot Picsமலையாளத்தில் சூப்பர் ஹிட்டான படம் “அன்னயும் ரசூலும்”. இந்தப் படத்தில் இயக்குநர் பாசில் மகன் பர்கத் பாசிலும், ஆண்ட்ரியாவும் ஜோடியாக நடித்திருந்தனர்.

இதையடுத்து ஆண்ட்ரியாவைக் காதலிப்பதாக சமீபத்தில் பர்கத் பாசில் கூறியிருந்தார். அவருடைய இந்த அறிவிப்பு தமிழ் மற்றும் மலையாளப் பட உலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

ஆனால் பர்கத்தின் காதலை ஆண்ட்ரியா நிராகரித்து விட்டார். பர்கத்தை நண்பனாக மட்டுமே நினைத்து பழகினேன் என ஆண்ட்ரியா தெரிவித்தார்.தற்போது இந்தப் படத்தை தமிழில் ரீமேக் செய்யப் போகின்றனர்.

படத்தை உதயநிதி ஸ்டாலினின் “ரெட் ஜெயண்ட் மூவிஸ்” நிறுவனம் வாங்குவதற்கு பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருக்கிறது.

தமிழிலும் ஆண்ட்ரியாவே ஹீரோயினாக நடிப்பார் என தயாரிப்பாளர் வினோத் விஜயன் தெரிவித்து உள்ளார்.

கற்பழிக்கப்பட்ட எனக்கு 16 மாத சிறைத்தண்டனையா துபாயில் கதறும் நோர்வே பெண்!!

Marte Deborah Dalelv

துபாயில் கற்பழிக்கப்பட்ட நோர்வேபெண்ணிற்கு பொது இடத்தில் பாலுறவு கொண்டதாக குற்றம் சாட்டப்பட்டு 16 மாத சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

நோர்வே நாட்டைச் சேர்ந்தவர் டெபோரா டலேல்வ் என்ற 24 வயது பெண். கட்டிட உள் அலங்கார நிபுணரான இவர் கடந்த மார்ச் மாதம் 6ம் தேதி நண்பர்களுடன் வெளியே சென்றிருந்தபோது கற்பழிக்கப்பட்டார். தனக்கு ஏற்பட்ட பாலியல் கொடுமைகள் குறித்து துபாய் போலீசில் புகார் செய்தார் டெபோரா.

புகார் அளிக்கச் சென்ற டெபோராவின் கடவுச்சீட்டு மற்றும் பணத்தை பறிமுதல் செய்த போலீசார் தடாலடியாக வர் மீதே வழக்கை திசை திருப்பினர். அதில் டெபோரா மது அருந்திவிட்டு வெளி நபரிடம் பாலுறவில் ஈடுபட்டதாகவும் உண்மையைத் திரித்துக் கூறுவதாகவும் குற்றம் சாட்டியிருந்தனர்.

வழக்கு விசாரணைக்கு வந்தபோது நீதிமன்றத்தில் டெபோராவிற்கு 16 மாத சிறைத்தண்டனையும் அவரை கற்பழித்ததாக கைது செய்யப்பட்டவருக்கு 13 மாத சிறை தண்டனையும் விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார்.

துபாய் நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பால் நோர்வேயில் உள்ள மனித உரிமைக் குழுவினர் மற்றும் வெளியுறவுத்துறை அமைச்சகமும் கோபத்தில் உள்ளன. பாதிக்கப்பட்ட தனக்கு சிறைத்தண்டனை விதித்ததால் அதிர்ச்சியடைந்த டெபோரா மேல் முறையீடு செய்யப் போவதாக அறிவித்துள்ளார்.