சுவிட்சர்லாந்தின் பிரதான நகரங்களான சூரிச், பாசல் மற்றும் ஸ்காஃப்ஹூசென் போன்ற பகுதிகளில் அனல் காற்று வீசும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தற்போது இந்நகரங்களின் வெப்பநிலையானது 31 டிகிரி செல்சியஸை எட்டியுள்ள நிலையில், இது மேலும் 37 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்கலாம் எனவும், அதனால் அனல் காற்று வீசலாம் எனவும் எதிர்வு கூறப்பட்டுள்ளது.
இதேவேளை சியோன் பகுதியில் கடந்த 19ம் திகதி 35 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையும், 20ம் திகதி 37 டகிரி செல்சியஸ் வெப்பநிலையும் காணப்பட்டுள்ளது.
ஜெனீவாவின் வெப்பநிலையானது தற்போது 30 டிகிரி செல்சியஸ் ஆக காணப்படுகின்றது.
இந்நிலையில் அடுத்துவரும் தினங்களில் முதியவர்கள், குழந்தைகளை மிகவும் அவதானமாக இருக்குமாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
நடிகர் விஜயகுமாரின் மனைவியும், நடிகையுமான மஞ்சுளா கட்டிலில் இருந்து கீழே விழுந்து படுகாயம் அடைந்தார்.
இதையடுத்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி இன்று மரணம் அடைந்தார்.
நடிகை மஞ்சுளா தனது கணவரும், நடிகருமான விஜயகுமாருடன் சென்னையை அடுத்து உள்ள ஆலப்பாக்கத்தில் வசித்து வந்தார்.
அவர் படுக்கை அறையில் இருந்த கட்டிலில் இருந்து திடீர் என்று கீழே விழுந்தார். கீழே விழுகையில் கட்டில் கால் அவறுடைய வயிற்றில் குத்தியது. இதில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது.
இதையடுத்து அவர் போரூரில் உள்ள தனியார் வைத்தியசாலை ஒன்றில் அனுமதிக்கப்பட்டார். தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வந்தனர். ஆனால் அவர் சிகிச்சை பலனின்றி இன்று மரணம் அடைந்தார்.
அவரது மரணம் குறித்து தகவல் அறிந்த திரையுலகினர் கவலை அடைந்துள்ளனர்.
தற்காலத்தில் அதிகரித்துள்ள இணையப் பாவனை காரணமாக வைரஸ் தாக்குதலுக்கு உள்ளாகும் கணனிகளின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. அண்மைய ஆய்வொன்றின்படி நாள்தோறும் இணையத்தளத்தினை பயன்படுத்துபவர்களில் ஆயிரத்தில் 10 பேர் வைரஸ் தாக்குதலுக்கு உள்ளாவதாக கண்டறியப்பட்டுள்ளது.
இணையத்தளங்களில் காணப்படும் பாதுகாப்பற்ற விளம்பரங்களை கிளிக் செய்வதினூடாகவே இந்த நிலைமை ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே இணையத் தளங்களை பயன்படுத்தும்போது தேவையற்ற விளம்பரங்கள் காட்சிப்படுத்தப்படுவதை தடுப்பது சிறந்ததாகும்.
இதற்கு Anvi Ad Blocker எனும் மென்பொருள் பயனுள்ளதாகக் காணப்படுகின்றது. Anvisoft நிறுவனத்தினால் வெளியிடப்பட்ட இந்த மென்பொருளானது இணைய இணைப்பு உள்ள வேளைகளின் கணனிகளை பாதுகாப்பதற்கு மிகவும் உறுதுணையாகக் காணப்படுகின்றது.
இலங்கை மற்றும் தென்னாபிரிக்க அணிகள் மோதும் இரண்டாவது ஒருநாள் போட்டி இன்று நடைபெறவுள்ளது.
ஆர். பிரேமதாஸ மைதானத்தில் பகல் இரவு ஆட்டமாக இடம்பெறவுள்ள இந்தப் போட்டி பிற்பகல் 2.30 அளவில் ஆரம்பமாகவுள்ளது.
இலங்கைக்கு கிரிக்கெட் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள தென்னாபிரிக்க அணி ஐந்து ஒருநாள் போட்டிகளில் விளையாடவுள்ளது.
இரு அணிகளுக்கும் இடையே கடந்த 20ம் திகதி இடம்பெற்ற முதலாவது போட்டியில் இலங்கை அணி 180 ஒட்டங்களால் தென்னாபிரிக்காவை வீழ்த்தி வெற்றியுடன் தொடரை ஆரம்பித்தது.
இதன்படி இன்று இரண்டாவது போட்டியில் இரு அணிகளிலும் பலப்பரிட்சை நடத்தவுள்ளன.
இன்றைய போட்டியிலும் இலங்கை அணையை சந்திமல் தலைமை தாங்குகிறார். கடந்த போட்டியில் காயம் காரணமாக விளையாடாது இருந்த தென்னாபிரிக்க அணியின் துடுப்பாட்ட வீரர் ஹசிம் அம்லா இன்றைய போட்டியில் விளையாடுவாரென எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த சிலதினங்களாக கொழும்பில் சீரற்ற காலநிலை நிலவிவருகிறது. இன்றும் கூட அதிகாலை முதல் மழை பெய்து வருவதினால் இன்றைய போட்டிக்கு மழை சவால் விடலாமென எதிர்பார்க்கப்படுகிறது.
பைபிளில் குறிப்பிட்டுள்ள தாவீது மன்னரின் அரண்மனையை தொல்பொருள் நிபுணர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
இஸ்ரேலில் உள்ள ஜெருசலேமின் மேற்கில் உள்ள கிர்பெட் குயாபா என்ற இடத்தில் அகழ்வு ஆராய்ச்சி பணி நடந்தது. ஜெருசலேமில் உள்ள ஹீப்ரூ பல்கலைக்கழகத்தின் தொல்பொருள் ஆய்வு நிபுணர்கள் மற்றும் இஸ்ரேலின் பழங்கால நினைவு சின்னங்களின் நிபுணர்கள் அடங்கிய குழு இங்கு ஏழு ஆண்டுகள் பூமியை தோண்டி ஆய்வு மேற்கொண்டனர்.
இதில் அங்கு பழங்கால கட்டிடம் ஒன்று இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இது அதிசயிக்கதக்க வகையில் உள்ளது. இந்த கட்டிடம் பைபிளில் இடம் பெற்றுள்ள தாவீது மன்னரின் அரண்மனை என அகழ்வாராய்ச்சி நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
கிர்பெட் குயாபா நகரம் தாவீது மன்னர் ஆட்சி காலத்தில் உருவாக்கப்பட்ட பலம் வாய்ந்த நகரமாகும்.
எனவே, இங்கு தாவீது மன்னர் தனது அரண்மனையை நிறுவியிருக்க வேண்டும் என அகழ்வாராய்ச்சி நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். மேலும், இந்த கட்டிடத்தில் யூதர்கள் பயன்படுத்தும் பாரம்பரிய பொருட்களான முள்கரண்டிகள், கையுறைகள் போன்றவை கண்டெடுக்கப்பட்டுள்ளன.
அவை தாவீது மன்னர் உபயோகித்த பொருட்களாக இருக்கலாம் என கருதப்படுகிறது.
ஆனால் இந்த கட்டிடம் தாவீது மன்னரின் அரண்மனை அல்ல என எதிர்ப்பாளர்கள் விவாதிக்கின்றனர். இது தாவீது மன்னருக்கு பின் வந்த மன்னர்களின் அரண்மனையாக இருக்கலாம் என கருத்து தெரிவித்துள்ளனர்.
அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளரான ஷேன் வோன் 2007–ம் ஆண்டுடன் சர்வதேச போட்டியில் இருந்து ஓய்வு பெற்றார்.
இருப்பினும் அவர் முதலாவது ஐ.பி.எல். போட்டியில் விளையாடினார்.
அவுஸ்திரேலியாவில் நடைபெறும் பிக் பாஷ் லீக் போட்டியில் வோன் தொடர்ந்து விளையாடி வந்தார். அந்த போட்டியில் இருந்து விடைபெறுவதாக ஷேன் வோன் நேற்று அறிவித்துள்ளார்.
தான் விடைபெற இதுவே சரியான தருணம் என்று தெரிவித்துள்ள அவர் தொழில் மற்றும் வர்ணனையாளர் பணியை கவனித்து கொண்டு விளையாடுவது கடினம் என்பதால் இந்த முடிவை எடுத்துள்ளேன் என்று கூறினார்.
43 வயதான ஷேன் வோன் 145 டெஸ்டில் விளையாடி 708 விக்கெட்டும், 194 ஒருநாள் போட்டியில் ஆடி 293 விக்கெட்டும் வீழ்த்தியவர் என்பது குறிப்பிடத்தக்கது
இலங்கை வந்துள்ள பிரித்தானிய பாராளுமன்ற குழு யாழ்ப்பாணத்துக்கான விஜயத்தை இன்று மேற்கொள்ளவுள்ளது.
பிரித்தானிய பாராளுமன்ற கன்ஸவேட்டிவ் மற்றும் தொழில் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் மூவர் உள்ளிட்ட குழுவினர் அடங்கிய குழுவினர் நேற்று இலங்கை வந்தடைந்தனர்.
இக்காலப் பகுதியில் இந்த குழுவினர் ஜனாதிபதி உள்ளிட்ட அரசாங்கம் மற்றும் எதிர்க் கட்சிகளின் பிரதிநிதிகளை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளனர்.
அத்துடன் இலங்கையின் தற்போதைய மீளமைப்பு மற்றும் மனித உரிமைகள் நிலவரங்கள் தொடர்பில் அந்த குழு முழுமையான ஆராய்வினை மேற்கொள்ளும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே பிரித்தானியாவின் வெளிவிவகார திணைக்கள செயலாளர் எலஸ்டயார் பர்ட் இந்த முறை மனித உரிமை விடயங்களில் இலங்கை சிறந்த முன்னேற்றத்தை வெளிப்படுத்த தவறினால் எதிர்வரும் மனித உரிமைகள் மாநாட்டில் அது தொடர்பில் பிரித்தானியா உரிய நடவடிக்கையை மேற்கொள்ளும் என்று எச்சரித்திருந்தார்.
சிலாபம் – முன்னேஸ்வரம் முன்னை நாதப் பெருமான் தேவஸ்தானத்தின் வருடாந்த உற்சவத்தின் கொடியேற்ற விழா நாளை 24 ஆம் திகதி புதன்கிழமை இடம்பெறும்.
இவ்வாலய உற்சவம் 29 தினங்களாகக் கொண்டாடப்படும். இக்காலங்களில் நாட்டிலிருந்து வருகை தரும் அடியார்களின் நன்மை கருதி போக்குவரத்துச் சேவைகள் சுகாதார வசதிகள் குடிதண்ணீர் ஏற்பாடுகள் புதிய மின் இணைப்புக்கள் கழிவறைகள் என்பனவற்றுடன் புதிய வாகன தரிப்பிட வசதிகளும் ஏற்படுத்தப்படும்.
அத்துடன் பாதுகாப்பை முன்னிட்டு விசேட தற்காலிக பொலிஸ் நிலையமும் வழமை போல் அமைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றது.
இங்கு நடைபெறும் முக்கிய உற்சவங்களான எதிர்வரும் 2013.08.15 ஆம் திகதி தீமிதிப்பு உற்சவமும் அதைத் தொடர்த்து 63 சிவனடியார்களின் விழாவும், 16 ஆம் திகதி வெள்ளிக்கிழமை பிச்சாடன உற்சவமும், 17 ஆம் திகதி நடேசர் உற்சவமும் 18ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை5.00 மணிக்கு வேட்டைத் திருவிழாவும், 19 ஆம் திகதி திங்கள் தேர் உலாவும் 20 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை சிலாபம் மாயவன் ஆற்றில் தீர்த்த உற்சவமும் கொண்டாடப்படும்.
15 மில்லியன் ரூபா செலவில் ஆனையிறவுக்கான புதிய ரயில் நிலையம் ஒன்று நிர் மாணிக்கப்படவுள்ளது.
கல்வி அமைச்சினால் வழங்கப்படும் நிதியுதவி மூலம் சகல வசதிகளுடன் நிர்மாணிக்கப்படவுள்ள புதிய ரயில் நிலையத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு நாளை காலை9.00 மணிக்கு இடம்பெறவுள்ளது.
கல்வி அமைச்சர் பந்துல குணவர்தன பிரதம அதிதியாக கலந்துகொண்டு அடிக்கல் நாட்டி புதிய ரயில் நிலையத்திற்கான நிர்மாணப் பணிகளை உத்தியோகபூர்வ மாக ஆரம்பித்து வைக்கவுள்ளார்.
வட மாகாணம் உட்பட ஒன்பது மாகாணங்களின் ஆளுநர்கள், முதலமைச்சர்கள் மற்றும் முக்கியஸ்தர்கள் பலர் இந்த நிகழ்வில் கலந்து சிறப்பிக்கவுள்ளனர்.
யுத்தம் காரணமாக சேதமடைந்த வட வகுதிக்கான ரயில் பாதை புதிதாக விஸ்தரிக்கப்பட்டு வருகின்ற நிலையில், சுமார்23 வருடங்களுக்கு பிறகு முதற்தடவையாக ஆணையிறவுக்கான ரயில் நிலையம் புதிதாக நிர்மாணிக்கப்படவுள்ளதாக வட மாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் ஜி.ஏ. சந்திரசிறி தெரிவித்தார்.
வட பகுதி மக்களின் நலனை கருத்திற்கொண்டு கிழக்கு உட்பட எட்டு மாகாணங்களிலுள்ள பாடசாலை மாணவ, மாணவிகள், ஆசிரியர்களிடமிருந்து சேகரிக்கப்பட்ட சுமார் 15மில்லியன் ரூபா செலவிலேயே இந்த புதிய ரயில் நிலையம் நிர்மாணிக்கப்படவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார். இனங்களுக்கு இடையிலான ஒற்றுமை, பாடசாலை மாணவர்கள் மற்றும் மாகாண சபைகளுக்கு இடையிலான ஒத்துழைப்பு என்பவற்றின் பிரதிபலிப்பாகவே கல்வி அமைச்சின் ஏற்பாட்டில் இந்த நிதி சேகரிப்பு திட்டம் முன்னெடுக்கப்பட்டதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
கடந்த 23 வருடங்களுக்கு முன்னர் ஆணையிறவு ரயில் நிலையம் அமைந்திருந்த அதே இடத்திலேயே புதிய ரயில் நிலையமும் நிர்மாணிக்கப்படவுள்ளது என்று தெரிவித்த அவர், இவ்வாண்டு இறுதிக்குள் அதன் நிர்மாணப் பணிகள் நிறைவடையவுள்ளது என்றார்.
ஏனைய எட்டு மாகாணங்களின் ஆளுநர்கள் மற்றும் முதலமைச்சர்களுடன் பாடசாலை மாணவர்கள் வட மாகாணத்தைச் சேர்ந்த பாடசாலை மாணவர்கள் சுமார் 1000 பேரும் இந்த நிகழ்வில் கலந்து கொள்ளவுள்ளமை விசேட அம்சமாகும்.
மட்டக்களப்பு அருள்மிகு தாந்தாமலை ஸ்ரீ முருகன் ஆலய மஹோற்சவத்தின் தீர்தோற்சவம் நாளை இடம்பெறவுள்ளது.
கிழக்கு மாகாணத்தில் மட்டக்களப்பு பிரதேசத்தில் பெரிதும் மக்களால் பேசப்படுகின்ற மலைக் கோயில்களில் தாந்தா மலை முருகன் ஆலயமும் ஒன்றாகும்.
பழமையும், வரலாற்று முக்கியத்துவமும் நிறைந்த கதிர்காம முருகன் ஆலயத்துடன் தாந்தாமலை முருகன் ஆலயத்தையும் மக்கள் இணைத்துப் போற்றி வருகின்றனர்.
கடந்த 3ம் திகதி ஆரம்பமாகி சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த இவ்வாலயத்தின் மகோற்சவம் நாளை காலை 6மணியளவில் நடைபெற இருக்கும் புண்ணிய தீர்தோற்சவத்துடன் நிறைவு பெறுகிறது.
இத் தீர்தோற்சவம் காரணமாக நாளை நடைபெற இருந்த மட்டக்களப்பு மாவட்ட பாடசாலைகளின் பரீட்சைகள் அனைத்தும் பிற்போடப் பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.
இளவரசர் வில்லியமின் மனைவி, கேம்ப்ரிட்ஜ் சீமாட்டி, கேட்டுக்கு, ஆண் குழந்தை பிறந்திருக்கிறது.
நேற்று மாலை 4 மணி 24 நிமிடங்கள் அளவில் இந்தக் குழந்தை பிறந்தது என்று பக்கிங்ஹாம் அரண்மனை அதிகாரிகள் தெரிவித்தனர்.
குழந்தை மூன்றரை கிலோ எடையுடன் பிறந்தது என்றும் அவர்கள் தெரிவித்தனர்.
கேம்பிரிட்ஜ் இளவரசன் என்று அறியப்படவிருக்கும் இந்த ஆண் குழந்தை, பிரிட்டிஷ் சிம்மாசனத்துக்கு காலப்போக்கில் வர உரிமையுள்ள வாரிசுகளில் மூன்றாவதாக இருக்கும்.
15 பொதுநலவாய நாடுகளின் தலைமைப் பதவியையும் அது வகிக்கும்.
பிரிட்டிஷ் அரசியும், அவரது கணவர் எடின்பரோ கோமகனும் இந்தச் செய்தி கேட்டு மகிழ்ச்சியில் ஆழ்ந்திருக்கிறார்கள் என்று பக்கிங்ஹாம் அரண்மனை அதிகாரிகள் தெரிவித்தனர்.
பிரிட்டிஷ் பிரதமர் டேவிட் கேமரன் இந்த அரச குடும்ப குழந்தைப் பிறப்பை, நாட்டின் வாழ்க்கையில் முக்கியமான தருணம் என்றும், அதைவிட, இது ஒரு நேசமுடனும் பாசமுடனும் இருக்கும் ஒரு தம்பதியருக்குக் கிட்டியுள்ள மிக அற்புதமான தருணம் என்றும் கூறினார்.
சாதுவான மிருகங்களுள் ஒன்றான யானை அதனை சீண்டியவர்களை சும்மா விடாது.தானுண்டு தன் வேலையுண்டு என்று இருக்காமல் பசியாற்றிக்கொண்டிருந்த யானையை சீண்டியதால் நேர்ந்த கதியைப் கொஞ்சம் பாருங்கள்..
தனுஷ் – பார்வதி நடிப்பில் வெளியாகி ஓடிக் கொண்டிருக்கும் படம் மரியான். பரத்பாலா இந்தப் படத்தை இயக்கி உள்ளார். ஒஸ்கர் ரவிச்சந்திரன் தயாரித்து உள்ளார்.
சூடான் நாட்டில் வேலை செய்த ஒரு இந்தியத் தொழிலாளிக்கு ஏற்பட்ட சம்பவத்தை மையமாக வைத்து இந்தப் படம் எடுக்கப்பட்டுள்ளது.
ஒரே மூச்சில் 50 அடி ஆழ்கடலில் சென்று மீன் பிடிப்பவராக தனுஷ் நடித்துள்ளார். அவருக்கு நீச்சலும் தெரியாது, நீருக்குள் மூச்சு பிடித்து மூழ்குவதும் முடியாது.
எனவே, வெளிநாட்டில் இருந்து இதற்காக சிறப்பு பயிற்சி கொடுப்பவர்களை வரவழைத்து, அவர்களிடம் கற்றுக் கொண்டு தனுஷ் இப்படத்தில் நடித்தார். 50 அடி ஆழ்கடலில் ஒட்சிசன் இல்லாமல் உப்புத் தண்ணீரில் கண்ணாடிகூட போடாமல் மிகவும் தத்ரூபமாக நடித்துள்ளார் தனுஷ்.
படத்திற்கு ஒளிப்பதிவு செய்திருக்கும் மாக் கோனிக்ஸ் பெல்ஜியம் நாட்டைச் சேர்ந்தவர். இசை அமைத்திருக்கும் ஏ.ஆர்.ரஹ்மான் உலக அளவில் புகழ்பெற்றவர். எனவே மரியான் படத்தின் இந்தி உரிமையை புகழ்பெற்ற நிறுவனம் ஒன்று 5 கோடி ரூபாய்க்கு விலைபேசி உள்ளது. ஒஸ்கர் ரவிச்சந்திரனும் இதற்கு ஒப்புக் கொண்டார்.
இதை அறிந்த தனுஷ் தனக்கு அதில் இரண்டு கோடி ரூபாய் வேண்டும் என்றாராம். ஏ.ஆர்.ரஹ்மானும் தனக்கு இரண்டு கோடி ரூபாய் வேண்டும் என்று கேட்டிருக்கிறார்.
தனக்கு ஒரு கோடி ரூபாய் மட்டுமே வரும் என்று தெரிந்ததும், “ஆணியே புடுங்க வேணாம்” என ரீமேக் உரிமையை விற்க மறுத்துவிட்டாராம் ஒஸ்கர் ரவிச்சந்திரன்.
ஏ.ஆர். முருகதாஸ் விஜயகாந்த்தை வைத்து எடுத்த மிகப்பெரிய வெற்றிப் படமான ரமணாவை இந்தியில் ரீமேக் செய்கிறார்கள். தமிழில் வானம் படத்தை இயக்கிய கிரீஷ் இயக்கும் இப்படத்தை, சஞ்சய் லீலா பன்சாலி தயாரிக்கிறார்.
தமிழில் விஜயகாந்த் நடித்த கதாபாத்திரத்தில் இந்தியில் அக்ஷகுமார் நடிக்கிறார். இவருக்கு ஜோடியாக தமன்னா நடிக்கவிருப்பதாக முதலில் பேசப்பட்டது.
ஆனால் தமன்னாவை விட தற்போது மார்க்கெட்டில் இருக்கும் நடிகையை தெரிவு செய்ய திட்டமிட்டுள்ளார்களாம் படக்குழு.
இதனையடுத்து ரமணா இந்தி ரீமேக்கில் நடிக்க ஸ்ருதிஹாசனிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்களாம்.
இதன் மூலம் தமன்னாவுக்கு வந்த வாய்ப்பு ஸ்ருதிஹாசன் பக்கம் திரும்பியுள்ளது.
அண்மையில் இந்தியில் இவர் நடிப்பில் வெளியான டி-டே மற்றும் ராமையா வாத்சாவய்யா ஆகிய படங்கள் பரவலான வரவேற்பை பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.
மேற்கிந்திய தீவுகள் பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான 4 ஆவது ஒரு நாள் போட்டியில் பாகிஸ்தான் அணி டக்வத் லுயிஸ் முறையில் 6 விக்கட்டுகளால் வெற்றி பெற்றுள்ளது.
ஸ்கோர் விபரம்
49 ஓவா்களுக்கு மட்டுபடுத்தப்பட்ட இப்போட்டியில் முதலில் துடுப்படுத்தாடிய மேற்கிந்திய அணி 7 விக்கட்டுகளை இழந்து 261 ஓட்டங்களை பெற்றது. இதில் ஸாமுவேல்ஸ் 106 ஓட்டங்களை பெற்றார்.
தொடர்ந்து மலை குறுக்கிட்டதால் பாகிஸ்தான் அணிக்கு 31 ஓவா்களில் 189 என்கின்ற இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. அதன் படி துடுப்படுத்தாடிய பாகிஸ்தான் மிஸ்பாஹ், ஹபிஸ் ஆகியோரின் பொறுப்பான ஆட்டத்தால் வெற்றி இலக்கை அடைந்தது. மிஸ்பாஹ் 53 ஆ.மி, ஹபிஸ் 59.
போட்டியின் ஆட்ட நாயகனாக மேற்கிந்திய அணியின் ஸாமுவேல்ஸ் தெரிவு செய்யப்பட்டார்.