ஒரு பையன் ஆசையாக நாய்குட்டி ஒன்று வளர்த்தான்.ஒரு நாள் திடீரென்று அந்த நாய்க்குட்டி இறந்து விட்டது. பையன் விடாமல் அழுதுகொண்டே இருந்தான்.
வீட்டில் எவ்வளவோ ஆறுதல் சொல்லிப் பார்த்தார்கள். ஒன்றும் நடக்கவில்லை. அழுகையும் நின்றபாடில்லை. பிறகு ஒரு மனோதத்துவ டாக்டரிடம் அழைத்துப் போய் கவுன்சிலிங் செய்யச் சொன்னார்கள்.
அவரும் பல ஆறுதல் வார்த்தைகளை சொல்லிவிட்டு கடைசியில் அவனிடம், “இதோ பார் இந்த சின்ன விஷயத்திற்காக ஏன் இப்படி அழுகிறாய்? எங்க தாத்தா கூட போன வாரம் செத்துப் போனார். நான் என்ன அழுகிறேனா பார்” என்றார்.
உடனே அந்தப் பையன் “நீங்க என்ன என்னை மாதிரி குட்டியில இருந்தா உங்க தாத்தாவை வளர்த்தீங்க?” என்றான் கோபத்தோடு.
இலங்கை சாரண தலைமைக்கரியலயத்தினால் வழங்கப்படும் திரிசாரண பிரிவின் உயர் விருதான பேடன் பவல் விருதினை வவுனியா விபுலானந்தா கல்லூரியின் பழைய மாணவனும் களனி பல்கலைக்கழகத்தின் விஞ்ஞான பீட மாணவனுமாகிய திரு. சுந்தரலிங்கம் காண்டீபன் அவர்கள் இவ் விருதினை பெற்று கொண்டுள்ளதுடன்,வவுனியா மாவட்டத்திற்கும் கல்லூரிக்கும் பெருமை தேடிதந்தமை குறிப்பிடத்தக்கது.
இவர் 2007 ஆம் ஆண்டு சாரணர் உயர் விருதான ஜனாதிபதி விருதினையும் பெற்றார். இது கல்லூரியின் சார்பில் முதல் ஜனாதிபதி விருது என்பது குறிப்பிடத்தக்கது. 2005 ஆம் ஆண்டு நேபாளத்தில் நடைபெற்ற சாரண சார்க் நட்புறவு பாசறையிலும் எமது நாட்டை பிரதிநிதித்துவபடுத்தி சென்றமையும் குறிப்பிடத்தக்கது.
அத்துடன் விபுலானந்த கல்லூரியின் உதவி சாரண தலைவராகவும், வவுனியா மாவட்ட ஜானதிபதி சாரணர் மன்றத்தின் தலைவராகவும், திரிசாரண உதவி மாவட்ட ஆணையாளராகவும் கடமையாற்றி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
வவுனியா மாவட்ட சாரணர் சங்கத்தின் முதலாவது பேடன் பவல் விருதினை பெற்று கொண்ட திரு.சு.காண்டீபனுக்கு மாவட்ட சாரணர் சங்கத்தின் சார்பில் வாழ்த்துக்களை தெரிவித்து கொள்வதாக மாவட்ட ஆணையாளர் திரு M.S.பத்மநாதன் தெரிவித்தார்.
வவுனியாவில் தமிழரசு கட்சி தலைவர் சம்பந்தனுக்கு எதிராகவும் மாவை சேனாதிராஜாவுக்கு ஆதரவாகவும் வவுனியா மாவட்ட இலங்கை தமிழரசு கட்சி என்ற பெயரில் இச் சுவரொட்டிகள் ஓட்டப் பட்டிருந்தன.
சகுனி தொடங்கியது பாஞ்சாலியை வைத்து சம்பந்தர் தொடங்குவது விக்னேஸ்வரனை வைத்தா?
மாவை அண்ணன் ஆணையிட்டால் புரட்சி வெடிக்கும் போன்ற வாசகங்கள் காணப்படுகின்றன.
தேர்தல் பரபரப்பு அதிகரித்து வரும் நிலைமையில் இந்த சுவரொட்டிகள் மூலம் தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஒற்றுமையை குழப்புவதற்கு விசமிகள் செய்த செயல் என மக்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
கற்கள் பொதுவாக நீரிலுள் அடர்த்தி கூடியவை ஆகையால் நீரில் மிதப்பதில்லை. ஆனாலும் இந்தியாவில் கல் ஒன்று மிதப்பது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியதுடன் அதனை பார்வையிடுவதற்கு ஏராளமான பக்தர்களும் கூடி வருகின்றனர்.
இங்கிலாந்துக்கு எதிராக தொடர்ச்சியாக 2வது டெஸ்ட் போட்டியை தோற்றதற்கு தங்கள் அணியின் துடுப்பாட்டமே காரணம் என அவுஸ்திரேலிய அணித் தலைவர் மைக்கல் கிளார்க் கூறியுள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது,
துடுப்பாட்ட வீரர்கள் ஆட்டம் ஏற்றுக் கொள்ள முடியாதது. பிட்ச் துடுப்பாட்டத்திற்கு சாதகமாக உள்ளது. நல்ல வாய்ப்பைத் தவறவிட்டோம். முதல் 7 பேரிடம் நல்ல அனுபவம் உள்ளது. இங்கிலாந்தின் பந்து வீச்சை ஏற்கனவே திறம்பட ஆடியுள்ளோம். ஷாட் தேர்வு படுமோசம், இங்கிலாந்திடம் உள்ள ஒழுக்கம் நம் அணியில் இல்லை.
அவர்கள் நீண்ட நேரம் துடுப்பெடுத்தாட விரும்புகின்றனர். கடினமான கட்டத்திலும் விக்கெட்டை விடாமல் நிற்கின்றனர். ஆனால் முதல் இன்னிங்ஸிலேயே தோல்வி ஆரம்பமாகியது. ஆட்டத்தின் சில தருணங்களில் துடுப்பெடுத்தாட சௌகரியமாக இருக்கும் ஷாட்களை விளையாடலாம் ஆனால் பிற சமயங்கள் கடினமாக இருக்கும். அப்போது தற்காப்பு ஆட்டமே கை கொடுக்கும் இவ்வாறு கூறியுள்ளார் கிளார்க்
லிப் டு லிப் முத்தம் கொடுத்த புகைப்படம் வெளியானதற்கு அண்ட்ரியாவிடம் மன்னிப்பு கேட்டார் அனிரூத். தனுஷ் நடித்த 3 பட இசை அமைப்பாளர் அனிரூத், பச்சைக்கிளி முத்துச்சரம், விஸ்வரூபம் உள்ளிட்ட படங்களில் நடித்தவர் அண்ட்ரியா.
இருவரும் லிப் டு லிப் முத்தம் பரிமாறிக்கொண்ட புகைப்படம் ஒன்று வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இது பற்றி கருத்து தெரிவித்த அண்ட்ரியா போட்டோ தொடர்பாக மறுப்பு எதுவும் தெரிவிக்கவில்லை. இது மிகவும் பழைய படம் என்று மட்டும் பதில் அளித்தார்.
ஆனால் இதுகுறித்து அனிருத் கருத்து தெரிவிக்காமல் இருந்தார். தற்போது அவர் அண்ட்ரியாவிடம் பகிரங்க மன்னிப்பு கேட்டிருக்கிறார். இதுபற்றி அவர் கூறும்போது நடந்த சம்பவத்துக்கு நான் அண்ட்ரியாவிடம் பகிரங்கமாக மன்னிப்பு கேட்டுக்கொள்வதுடன் போட்டோ சம்பந்தமாக அவர் வெளியிட்ட கருத்துக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன் என்றார்.
விளம்பரத்துக்காக அந்த புகைப்படத்தை அனிருத்தான் வெளியிட்டிருக்கிறார். அதனால்தான் அவர் இப்போது மன்னிப்பு கேட்கிறார் என சினிமா வட்டாரத்தில் கூறப்படுகிறது.
இந்தியாவில் மந்திரவாதி ஒருவரை ஊர் மக்கள் கட்டாயப்படுத்தி மனித மலத்தை உண்ண வைத்துள்ளனர். மேகாலயா மாநிலம் கிழக்கு காசி மலை மாவட்டம், மாவ்ரிங்காங் கிராமத்தில் வசித்து வருபவர் நோபிங் நாங்சிட். இவரும் இவரது குடும்பத்தினரும் மாந்திரீக வேலைகள் செய்து வந்துள்ளனர்.
இந்தநிலையில் அந்த கிராமத்தில் உள்ள நான்கு சிறுமிகள் திடீரென மர்ம நோயால் பாதிக்கப்பட்டனர். தூக்கத்தில் அவர்களுக்கு கெட்ட கெட்ட கனவுகள் வந்துள்ளன. அத்துடன் தூக்கத்தில் மந்திரவாதி நாங்சிட் பெயரை முணுமுணுத்ததாகவும் தெரிகிறது. எனவே, மந்திரவாதி சூனியம் வைத்ததால்தான் சிறுமிகளுக்கு பாதிப்பு ஏற்பட்டதாக பொதுமக்கள் குற்றம் சாட்டினர்.
இது தொடர்பாக கடந்த 20-ம் திகதி ஊர் பஞ்சாயத்தைக் கூட்டி பெரியவர்கள் ஆலோசனை நடத்தினர். அப்போது சூனியம் செய்த மந்திரவாதிக்கு தண்டனை கொடுக்க வேண்டும் என்று பலர் வலியுறுத்தினர். அதுவும் மனித மலத்தை அவரை சாப்பிட வைத்தால்தான் சூனியம் விலகும் என்று தெரிவித்தனர். பஞ்சாயத்து உறுப்பினர்கள் அனைவரும் இந்த முடிவை ஏற்றுக்கொண்டனர்.
இதையடுத்து, மந்திரவாதியை கட்டாயப்படுத்தி மலத்தை தின்ன வைத்தனர். இந்த சம்பவத்திற்குப் பிறகு, சிறுமிகள் 4 பேரின் உடல்நிலை தேறியதாக பஞ்சாயத்து துணைத் தலைவர் தெரிவித்தார். முதியவர் ஒருவரை மலம் தின்ன வைத்த சம்பவம் பற்றி கேள்விப்பட்டதும், அந்த கிராமத்திற்கு நீதவான் மற்றும் துணைக்கோட்ட பொலிஸ் அதிகாரி சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.
அவர்களின் அறிக்கை அளித்தபிறகு, அதன் அடிப்படையில் சம்பந்தப்பட்ட நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட பொலிஸ் அதிகாரி கூறினார்.
யாழ்ப்பாணம் மத்திய பேரூந்து நிலையத்தில் இளம் பெண்ணிடம் அங்க சேட்டையில் ஈடுபட்டதுடன் அப்பெண்ணை முத்தமிட்ட முதியவரை இங்கு கூடியிருந்தவர்கள் அடி உதை கொடுத்து யாழ்.பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர்.
இச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,
யாழ். பஸ் நிலையத்தில் இன்று காலை பேருந்துக்காக காத்து இருந்த இளம் பெண்ணின் நெஞ்சுப் பகுதியை வருடியதுடன் அப்பெண்ணை முத்தமிடுவதற்கு முயற்சித்துள்ளார். இந்த முதியவரின் செயற்பாட்டால் நிலை குலைந்த இளம் பெண் கூக்குரல் எழுப்பியுள்ளார்.
இதனால் அருகில் நின்ற நின்றவர்கள் முதியவருக்கு அடி உதை கொடுத்ததுடன் பொலிஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்றுள்ளனர். குறித்த பெண் தனக்கு நடந்த சம்பவத்தை தெரிவிப்பதற்கு வெட்கப்பட்டதுடன் அங்கு நின்ற மூச்சக்கர வண்டி ஒன்றில் ஏறிச் சென்றுள்ளார்.
இளம் பெண்ணை முத்தமிட்ட முதியவர் மதுபோதையில் இருந்துள்ளதாக பொலிஸ் விசாரணையின் போது தெரியவந்துள்ளது. குறித்த முதியவர் யாழ்.பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
வட மாகாண சபை தேர்தலில் போட்டியிடவுள்ள வேட்பாளர்கள் மற்றும் ஆசனப் பங்கீடுகள் தொடர்பில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் அங்கத்துவக் கட்சிகளுக்கு இடையே இணக்கம் காணப்பட்டுள்ளது.
தமிழரசுக் கட்சியின் அலுவலகத்தில் நேற்று திங்கட்கிழமை நடைபெற்ற நியமனக்குழுக் கூட்டத்தில் இறுதித் தீர்மானம் எட்டப்பட்டுள்ளது.
இதன் பிரகாரம் யாழ்ப்பாணம், வவுனியா கிளிநொச்சி, முல்லைத்தீவு மற்றும் மன்னார் ஆகிய மாவட்டங்களின் வேட்பாளர் பங்கீட்டு விபரம்:
யாழ். மாவட்டம்
தமிழரசு கட்சி – 7 ஆசனங்கள்
ஈ.பி.ஆர்.எல்.எப் – 4 ஆசனங்கள்
டெலோ – 3 ஆசனங்கள்
புளொட் – 2 ஆசனங்கள்
தமிழர் விடுதலைக் கூட்டணி – 2 ஆசனங்கள்
கிளிநொச்சி மாவட்டம்
தமிழரசு கட்சி – 3 ஆசனங்கள்
ஈ.பி.ஆர்.எல்.எப் – 1 ஆசனம்
டெலோ – 1 ஆசனம்
தமிழர் விடுதலைக் கூட்டணி – 2 ஆசனங்கள்
முல்லைத்தீவு மாவட்டம்
தமிழரசு கட்சி – 2 ஆசனங்கள்
ஈ.பி.ஆர்.எல்.எப் – 2 ஆசனங்கள்
டெலே – 2 ஆசனங்கள்
புளொட் – 1 ஆசனம்
தமிழர் விடுதலைக் கூட்டணி – 1 ஆசனம்
வவுனியா மாவட்டம்
தமிழரசு கட்சி – 2 ஆசனங்கள்
ஈ.பி.ஆர்.எல்.எப் – 2 ஆசனங்கள்
டெலோ – 2 ஆசனங்கள்
புளொட்- 2 ஆசனங்கள்
தமிழர் விடுதலைக் கூட்டணி – 1 ஆசனம்
இந்த அடிப்படையில் ஐந்து மாவட்டங்களுக்கும் ஆசனப் பங்கீடுகள் நடைபெற்றிருப்பதாகவும் இதன் அடிப்படையில் கட்சிகள் வேட்பாளர்களை தெரிவு செய்து கொண்டிருப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இந்த தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் விபரங்கள் 26ம் மற்றும் 27ம் திகதிகளில் வெளியிடவுள்ளதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு அறிவித்துள்ளது.
இலங்கையின் தலைநகர் கொழும்பில் இன்று காலை வீசிய கடும் காற்றினால் பல வீடுகள் மற்றும் வாகனங்கள் சேதமடைந்துள்ளன. டி.சேரம், தேசிய வைத்தியசாலை, கிருலப்பனை மற்றும் தெமடகொட ஆகிய பிரதேசங்களிலேயே இந்த சேதம் ஏற்பட்டுள்ளது.
இதனால் மின்சார தடையும் ஏற்பட்டமை குறிப்பிடத்தக்கது.
வீதிகளின் குறுக்கே விழுந்துள்ள மரங்கள் மற்றும் மரக்கிளைகளை அகற்றுவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது.
மரம் முறிந்து விழுந்து ஒருவர் பலி
கொழும்பு, நாரஹென்பிட்ட தனியார் வைத்தியசாலைக்கு முன்னால் மரம் ஒன்று முறிந்து விழுந்ததில் அதற்குள் சிக்கிய நபர் உயிரிழந்துள்ளார். மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த 39 வயதான நபர் ஒருவரே இதன்போது உயிரிழந்துள்ளதாக தெரிய வந்துள்ளது.
இந்நபர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்துள்ளார்.
சகபணியாளரால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட நோர்வே பெண்ணுக்கு துபாய் நீதிமன்றத்தில் 16 மாத சிறைதண்டனை வழங்கப்பட்டது.
பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு தண்டனையா என உலகளவில் உண்டான சர்ச்சையாலும், அப்பெண் தன்னை மன்னித்து விடுதலை செய்துவிடும் படி கேட்டுக் கொண்டதாலும் அவருக்கு விடுதலை வழங்கி உத்தரவிட்டுள்ளது துபாய் நீதிமன்றம்.
துபாயில் கட்டிட உள் அலக்கார பணியாளராக பணி புரிந்து வருபவர் நோர்வேயைச் சேர்ந்த மார்ட்டே டெபோரா ட்டலேவேல் என்ற 42 வயது பெண். இவர் சமீபத்தில் உடன் பணி புரிபவர்களுடன் வெளியில் சென்றிருந்தார். அப்போது, சக பணியாளர்களால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார் டெபோரா.
அதனைத் தொடர்ந்து குற்றவாளிகள் மீது போலீசில் புகார் அளித்தார். ஆனால் போலீசாரோ டெபோரா பொது இடத்தில் பாலியல் உறவு கொண்டதாக கூறி அவர் மீதே வழக்கை திசை திருப்பியது. அதனைத் தொடர்ந்து டெபோராவுக்கு 16 மாத சிறைத்தண்டனை விதித்து துபாய் நீதிமன்றம் உத்தரவிட்டது.
பாதிக்கப்பட்ட தனக்கே தண்டனையா என அதிர்ந்தார் டெபோரோ. தீர்ப்பை எதிர்த்து மேல் முறையீடு செய்யப்போவதாக அறிவித்தார். நோர்வே அதிகாரிகளும் இது குறித்த விசாரணையில் இறங்கினர். உலக அளவிலும் டெபோராவிற்கு ஆதரவு பெருகியது.
தற்போது, தடாலடியாக டெபோராவை விடுதலை செய்து உத்தரவிட்டுள்ளது துபாய் நீதிமன்றம். டெபோரா தன்னை மன்னித்து விடுதலை செய்து விடும்படியும் தான் மீண்டும் நோர்வேக்கே சென்று விடுவதாகவும் கூறிய உறுதிமொழியைத் தொடர்ந்து அவரது தண்டனை ரத்து செய்யப்பட்டிருப்பதாகவும் நீதிமன்றம் விளக்கமளித்துள்ளது .
வவுனியா கற்பகபுரம் கிராமத்திலுள்ள விவசாயி ஒருவரின் தோட்டத்தில் முளைத்த முள்ளங்கி, குழந்தையின் கைபோன்ற அமைப்பில் உள்ளது. இதனை அப்பகுதியிலுள்ள பெருந்திரளான மக்கள் பார்வையிட்டு வருகின்றனர்.
இவ்வாண்டு பல்கலைக்கழக அனுமதிக்கான விண்ணப்ப படிவங்கள் ஏற்றுக் கொள்ளும் நடவடிக்கை இன்றுடன் நிறைவடைகிறது.
2012ஆம் ஆண்டு கல்விப் பொது தராதர உயர்தர பரீட்சைக்கு தோற்றி சித்தியடைந்த மாணவர்கள் பல்கலைக்கழக அனுமதிக்கான விண்ணப்ப படிவங்கள் கடந்த மாதம் 30ஆம் திகதியிலிருந்து ஏற்றுக் கொள்ளப்பட்டன.
எந்தவொரு காரணத்திற்காகவும் இன்றை நாளின் பின்னர் விண்ணப்ப படிவங்கள் ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது என பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இவ்வருட கல்வி நடவடிக்கைகளுக்காக எதிர்வரும் நவம்பர் மாதம் முதலாம் திகதியிலிருந்து மாணவர்கள் பல்கலைக்கழகங்களிற்கு உள்வாங்கப்படவுள்ளனர்.
அர்ஜீன் மகள் ஐஸ்வர்யாவுக்கு முதல் படம் வெளியாவதற்கு முன்னதாகவே அடுத்தடுத்த படத்திற்கான வாய்ப்புகள் குவிந்த வண்ணம் உள்ளன.
அர்ஜீன் மகள் ஐஸ்வர்யா அறிமுகமாகும் படம் பட்டத்து யானை. இதில் அவர் விஷாலுக்கு ஜோடியாக நடித்துள்ளார்.
இந்தப் படம் குறித்து நல்ல கருத்துகள் பரவியிருப்பதால், முதல் படத்திலேயே எதிர்ப்பார்ப்புக்குரிய நாயகியாகிவிட்டார் ஐஸ்வர்யா.
இதில் படத்தின் ப்ளஸ் பாய்ண்டாக ஐஸ்வர்யாவின் அழகும் நடிப்பும் முக்கியமானவை என்று கூறப்படுவதால் அவரை ஒப்பந்தம் செய்ய இரு நிறுவனங்கள் முனைப்பு காட்டி வருகின்றன.
ஆனால் அர்ஜீனோ படம் வெளியான பிறகு புதிய படங்கள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தலாம் என தெரிவித்துள்ளார். இதனைத் தொடர்ந்து அர்ஜீனின் நெருக்கமான நண்பர்கள் உள்ள தெலுங்குப் பட உலகிலும் ஐஸ்வர்யாவுக்கு வாய்ப்புகள் குவிந்துள்ளன.
இந்நிலையில் ஐஸ்வர்யாவுக்கு கிடைத்துள்ள இந்த முக்கியத்துவமானது கொலிவுட்டின் மற்ற நாயகிகளுக்கு கொஞ்சம் கலக்கத்தை உண்டாக்கியுள்ளது. ஐஸ்வர்யா நடித்துள்ள பட்டத்து யானை வருகின்ற வெள்ளிக்கிழமை வெளியாகின்றது.
தாய்லாந்தில் லொறி மீது மோதிய வேகத்தில் 2 அடுக்கு பஸ் தீப்பிடித்து எரிந்த விபத்தில் 19 பயணிகள் பரிதாபமாக உயிரிழந்தனர்.
பாங்காக் நகரில் இருந்து சுமார் 50 பயணிகளுடன் ராய் எட் நோக்கி புறப்பட்ட 2 அடுக்கு பஸ் இன்று அதிகாலை மத்திய சரபுரி மாகாண நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தது.
எதிர்முனையில் படுவேகமாக வந்த சீமெந்து லொறி கட்டுப்பாட்டை இழந்து பஸ்சுக்குள் பாய்ந்தது. லாரி மோதிய வேகத்தில் பஸ்சின் எஞ்ஜின் பகுதியில் தீ பிடித்தது. மளமளவென்று பரவிய தீ பஸ் முழுவதும் பரவியது.
அதிகாலை நேரம் என்பதால் அரை தூக்கத்தில் இருந்த பயணிகள், என்ன நடக்கிறது? என்பதை யூகிப்பதற்குள் வேகமாக பரவிய தீயில் சிலர் சிக்கிக் கொண்டனர்.
விபத்து பற்றிய தகவல் அறிந்து விரைந்து வந்த மீட்புப் படையினர் பஸ்சினுள் இருந்து 18 பிணங்களை மீட்டனர். பலத்த தீக்காயமடைந்த 20 பயணிகளை ஆம்புலன்சில் ஏற்றி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
போகும் வழியில் ஒரு பயணி உயிரிழந்ததால் பலி எண்ணிக்கை 19 ஆக உயர்ந்தது.
இந்த விபத்தில் சிக்கிய பஸ் முழுமையாக எரிந்து அடையாளம் தெரியாதபடி உருக்குலைந்துவிட்டது.
நெல்சன் மண்டேலா, தென்னாப்பிரிக்காவின் முதல் கருப்பினத்தலைவரும், நிறவெறிக் கொள்கையை எதிர்த்துப் போராடி வெற்றி கண்டவரும் ஆவார். இவர் சென்ற மாதம்8-ம் திகதி கடுமையான நுரையீரல் தொற்று காரணமாக பிரிட்டோரியாவில் உள்ள ஒரு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
தொடர்ந்து அவசர சிகிச்சைப் பிரிவின் கவனிப்பில் இருந்துவரும் இவர், சென்ற வாரம் தனது 95ஆவது பிறந்தநாளை மருத்துவமனையிலேயே கொண்டாடினார்.
மக்களின் அன்பிற்குரிய தலைவனாக இருக்கும் மண்டேலாவை அவரது மனைவி அருகிலேயே இருந்து கவனித்துக் கொள்கின்றார். தென்னாப்பிரிக்க அதிபர் ஜேக்கப் ஜுமாவும் அடிக்கடி மருத்துவமனைக்குச் சென்று மண்டேலாவின் உடல்நிலை குறித்து விசாரித்து வருகின்றார்.
ஜனாதிபதி ஜுமா நேற்றும் மண்டேலாவை பார்வையிட்டு வந்தார். மண்டேலா தொடர்ந்து அவசர சிகிச்சைப் பிரிவில் இருந்தாலும், உடல்நிலையில் நீடித்த முன்னேற்றம் காணப்படுகின்றது என்று அவர் தெரிவித்தார். தென்னாப்பிரிக்க மக்களின் அன்பும், ஆதரவும் எப்போதும் மண்டேலாவிற்கு இருக்கும் என்றும் அதிபர் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.